1.மொழி
அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து...
பொருள் புரிந்து... அறிந்து... தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும்
ஆசானும்
3.தன்னுடைய
அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின்
வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக்
கொண்ட அறிவு... கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம்
எதற்குத் துணை போயின…?
கற்ற
கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்...! ஆய்ந்து
அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?
எண்ணத்தின்
செயல்பாடு தான் “நான்...” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச்
செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு...”
எண்ணத்தின்
செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா….
நான் என்பது…?
2.எண்ணத்தின்
அலையே சுவாசமாகி...
3.சுவாசத்தின்
உணர்வே ஆத்மாவாகி...! என்று பாடுகின்றோம்.
ஜீவ
பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது.
எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.
சரீரம்
பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள்
செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்...” மனிதர்கள் எத்தனை எத்தனை
செயல்கள் புரிகின்றார்கள்…?
இந்த
ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்... உறங்குவதும்... புறத் தொழில்
புரிவதும்... கழிவுகளை நீக்குவதும்... பார்த்தல்... கேட்டல்... நுகர்தல்... சுவைத்தல்...
ஸ்பரிசித்தல்... அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில்
கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல்
என்பதே... இயல்பாக... “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்...”
3.ஆத்மாவின்
தொடர்பின்றி நடந்தனவா…?
சரீரத்தின்
உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது
எது…?
எண்ணத்தின்
அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின்
மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.
சுவாசத்தின்
நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்...” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்
அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம்
ஆத்ம பலம் பெறவேண்டும்..!” என்று
2.உரைத்த
சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஆத்மா
பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட...
மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான்
கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப
லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்...!”
இப்பொழுது
நான்...! என்பது யார் என்று புரிந்ததா…?