ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 28, 2019

விஞ்ஞான உலகில் விஞ்ஞான அறிவு கொண்டு இருந்தாலும் அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம்...! எப்படி...?


இன்று விஞ்ஞான உலகில் தான் இருக்கின்றோம். விஞ்ஞானத்தின் மூலம் அண்டத்தையும் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தின் மூலம் அளந்தறிகின்றனர்.
1.உலக இயக்கத்தையும் அறிகின்றனர்.
2.எங்கேயோ (COSMOS) காணாத இடத்திலிருப்பதையும் அந்த உணர்வுகளை நுகர்கின்றார்கள்.
3.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்குகின்றார்கள்
4.அந்தக் கோள் எங்கே இருக்கின்றதோ அதே உணர்வை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை ஏவுகின்றனர்
5.விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது அதிலே பதிவான உணர்வுடன் தன் இனத்தைக் கண்டதும் செயற்கைக் கோளை அதன் வழியில் அழைத்துச் செல்கிறது.
6.அங்கே இருக்கக்கூடிய நிலைகளை எல்லாம் தரையிலே இங்கே அறிய முடிகின்றது.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு இன்று இருக்கும் இக்காலத்தில் நாம் பக்தி மார்க்கத்தில் எப்படி இருக்கின்றோம்...?

யாரோ செய்வார்... சாமியார் செய்வார்... சாமி செய்யும்... ஜாதகம் செய்யும்... மந்திரம் செய்யும்... யாகம் செய்யும்... வேள்விகள் செய்யும்...! என்ற நிலைகளில் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய பேருண்மை என்ன...?

தீமை என்ற நிலைகள் நமக்குள் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அதை “ஓ...” என்ற ஜீவ அணுவாக உருவாக்கி “ம்...” என்று நம் உடலாக மாற்றும்.

அதே வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
1.அது நமக்குள் நன்மை பயக்கும்..
2.நம் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்...
3.நம் சொல் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதைத்.தெளிவாகக் கூறியிருப்பினும்
4.அதை நாம் யாரும் இது வரை பின்பற்றவில்லை.

சாமி (ஞானகுரு) வந்தார் என்றால் அவரிடம் பெரிய சக்தி இருக்கின்றது... “அவர் தான் நமக்குச் செய்வார்...!” என்ற இந்த ஆசை தான் வருகின்றது.

சாமி உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த அருள் உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்து மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அந்த உயர்ந்த குணத்தை நாமும் பெற முடியும்
2.நமக்குள் தாழ்மைப்படுத்தும் உணர்வை.. தீமை செய்யும் உணர்வை மாற்ற முடியும்
3.நாம் சொல்லாகச் சொல்லி வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறரைப் புனிதமாக்கவும் உதவும்
5.நமக்குள்ளும் புனிதமாக்கும் உணர்வுகள் விளையும்...! என்ற இந்தத் தன்னம்பிக்கை வருதல் வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு அடுத்த அந்தத் தெய்வ நிலையை அடையும் மார்க்கங்களைத் தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்திலும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்தல் வேண்டும்...!