ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 7, 2019

“நாடிகள்...” காற்று மூலமாக நம்மை உணரச் செய்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு... செவிப் புலனறிவு... உணர்வுப் புலனறிவு... நுகர்தல் புலனறிவு... சுவைத்தல் புலனறிவு... என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா...?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட...!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா...!

“ஈஸ்வரா...!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்...?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்... விழிக் காற்றும்...
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்...!”  என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே...! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.