உதாரணமாக
வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும்
அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
பின்
நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை
அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.
அப்படி
மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக எண்ணம் சொல் செயல்
என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி...?
சிறு குடல் பெரும் குடல்:-
1.அந்த
வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ்நீராக மாறும் பொழுது
2.சிறுகுடல்
பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது
3.நாம்
சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறிவிடுகின்றது.
4.அப்பொழுது
நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.
கணையங்கள்:-
இதைக்
கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய
அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.
கல்லீரல் மண்ணீரல்:-
கணையங்களைச்
சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும்
மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால்
சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.
நுரையீரல்:-
நுரையீரலில்
இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை
என்றால் சளி உருவாகின்றது.
நெஞ்சுச்
சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற
நோய்களும் உருவாகிவிடுகின்றது.
கிட்னி – சிறுநீரகங்கள்:-
1.அந்த
வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்
2.அது
இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து
3.இரத்தத்துடன்
நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்... என்று உப்பிப் போகும்.
4.நாம்
உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.
5.ஆனால்
நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.
6.அதனால்
பல உபாதைகளும் வருகின்றது. சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில்
உருவாகிவிடுகின்றது.
7.சர்க்கரை
உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.
இருதயம்:-
அடுத்து
அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி
விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.
இதைப்
போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம்
உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.
கண்களின் கருமணிகள்:-
அதே
சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.
வேதனப்படுவோரைப்
பார்த்துவிட்டு
1.ஒரு
நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்
2.ஒரு
நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்
3.அந்த
கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்
4.அந்த
நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது... சிந்தனையும்
குறைகின்றது.
நரம்பு மண்டலம்:-
கண்களின்
வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை
தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.
எலும்பு மண்டலம்:-
அதே
உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும்
இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக்
காரணம் ஆகின்றது.
தசை மண்டலம் தோல் மண்டலம்:-
அதே
சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல்
மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும்
வந்துவிடுகின்றது.
ஆனால்
நாம் தவறு செய்யவில்லை.
ஏனென்றால்
சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்
1.நம்
நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்
2.எந்தக்
கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்
3.அந்த
நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே
வருகின்றது.
இதைப்
போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து
அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.
1.நாம்
கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.கண்ணிலிருந்து
நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்
3.உடலில்
உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.
4.மாசுபடும்
இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.
5.நோய்
வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.