ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2016

உபநிஷத்துகளில் கூறப்பட்டுள்ள பேருண்மைகளை அனைவராலும் புரிய முடியும் – சாம - இசை

உதாரணமாக பூனை ஒரு எலியை உற்றுப் பார்க்கிறது. அதைத் தன் உணவுக்காகத் தாக்க வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பூனையின் உணர்வின் அழுத்தம் எலிக்குள் வரப்படும்போதுதான் அந்த எலியின் உணர்வின் இசைகள் மாறுகின்றது. எலியின் சுருதிகள் குறைகின்றது. எலி உடலுக்குள் (உயிர்) இருக்கும் வரையிலும் சோக கீதமாகின்றது.

அதை அடக்கி வெளிவந்தபின் இது பூனையின் ஒலியின் உணர்வுகளுடன் இசைக்கப்படும்போது இனிமை கொண்ட உணர்வாக அந்தப் அது பூனையின் உடலுக்குள் சென்று மகிழ்ந்திடும் உணர்வின் ஒலியாக அது பெறுகின்றது.

பூனை தன் இரைக்காகப் பார்த்த இந்த உணர்வுகள் அல்லது இரையாக்கப்படவில்லை என்றாலும் பூனையின் உணர்வுகள் எலிக்குள் நுகர்ந்தபின் “அதர்வண”.

அந்தப் பூனையின் வாசனை - இந்த உணர்வுகள் எலி உடலுக்குள் வந்தபின் இதை அடக்கி இந்த உணர்வின் தன்மை மாறுபடுகின்றது.

ஒரு பெட்டிக்குள் (ஒரு டப்பாவிற்குள்) போட்டபின் நீங்கள் இசைத்தால் எப்படி இருக்கும்? சப்தம் வராது. இதனுடைய எதிரொலி அழிக்கப்பட்டுவிடுகின்றது.

ஏனென்றால், எலியின் உணர்வுகளுக்குள் இந்த அச்சுறுத்தி வாழும் அந்தப் பூனையின் உணர்வலைகள் வலுப்பெற்றபின் இதற்கு எதிர்மறை ஆகின்றது. அப்பொழுது எலியின் வீரிய உணர்வுகள் தடைபடுகின்றது.

இவ்வாறு ஆன பின், எலி உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த உயிரான்மா வலுக்கொண்ட அந்தப் பூனையின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டுவிடுகின்றது.

ஆக, எலி பூனையின் உடலுக்குள் சென்று அது மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாகி அதனின் ரூபத்தை உருவாக்குகின்றது அந்த உயிர். இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதற்காகத்தான் விநாயகர் அருகே வேம்பை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் வந்தால் அது சோகக் கீதமாக நமக்குள் உருப்பெறும்.

அதனால் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் உருப்பெற்று ஒவ்வொன்றும் இசைகள் மாறிவிடுகின்றது.

ஆக, மகிழ்ந்திடும் நிலைகள் கொண்டு ஒன்றிணைத்த நிலை இல்லாதபடி வேதனைகள் வளர்ந்து மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோன்றும்போது இனிமையற்ற நிலைகளில் உருவாக்கிவிடுகின்றது.

இவ்வாறு மனிதனின் நிலைகள் உருப்பெறப்பட்டு இசைகள் மாறப்பட்டு இசையில் மாறிய அணுக்கள் ஒன்றொன்றும் மாற்றப்பட்டு இந்த உணர்வுகள் திசை மாறிவிடுகின்றது.

திசை மாறினாலும் இந்த உணர்வுக்கொப்ப உயிர் அணுக்கள் மாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் வழி ஒருக்கிணைந்த நிலைகளாக விஷத்தின் தன்மைகளை அது பெற்றதால் இன்னொரு உடலுக்குள் போனாலும் அதையே நிர்ணயப்படுத்திக் கொள்கின்றது.

சோகமான வேதனையான விஷமான உணர்வின் இசை அதற்குள் நிரப்பப்பட்டு அந்த உணர்வுகள் உண்டாக்கப்பட்டு அந்த மனித உடலை விட்டு வெளியே வந்தால் எங்கே செல்லும்?

இதிலே வளர்த்த இசையின் சுருதி எந்த உடலில் உள்ளதோ அதனின் ஈர்ப்பு வட்டத்திற்கு இந்த உயிர் அழைத்துச் சென்று அந்த மகிழ்ச்சி பெறும் இசையாக அதற்கொத்த நிலைகளில் உருமாற்றிவிடும். விஷமான உயிரினமாக மனிதனை மாற்றிவிடும்.

இது உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

துருவ மகரிஷி இத்தகைய நிலைகளை ஒடுக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வினை தனக்குள் வளர்த்து இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றான்.

அது “ரிக்”. அதனின்று வரக்கூடிய மணத்தை நாம் “சாம” அந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் கசந்த உணர்வுகள் அதிகரித்திருப்பினும் அதனால்  விளைந்த அணுக்களின் தன்மை நமக்குள் கூடியுள்ளது. கூடியுள்ள கசந்த உணர்வினை நாம் அடக்குதல் வேண்டும்.

வேதனையான உணர்வின் தன்மை நமக்குள் கூடியிருந்தால் வேதனை கொண்ட உடலைப் பெற்று அந்த விஷமான சக்தியைத் தனக்குள் எடுத்து அதை உணவாக உட்கொள்ளும் உணர்வின் இசையாக மாறிவிடும் - சாம.

ஒரு மனிதனுக்குள் மனிதன் அந்த மனிதன் பற்றுக்கொண்டு வந்தால் அவன் உடலில் உள்ள நஞ்சினைச் சுவாசிப்பதற்கே அங்கே வளர்த்து அதனைச் சுவாசித்துத் தனக்குள் பெருக்கிக் கொள்ளும்.

பின் அந்த உடலை விட்டுச் சென்றுவிட்டால் விஷத்தை உணவாக உட்கொள்ளும் உடலின் ஈர்ப்புக்குள் சென்று தன் நிலையை (மனித) ரூபத்தை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நஞ்சின் தன்மையை அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.

 துருவ நட்சத்திரத்தின் உணர்வை சூரியனுடைய காந்தப்புலனறிவு அது கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. நம் பூமிக்குள் நமக்கு முன் பரவி வருகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை நமக்குள் பதிவாக்கி நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நஞ்சினை ஒடுக்கிடும் வலுவைப் பெறவேண்டும்.

அதிகாலை 4:30 மணியிலிருந்து 6 மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் முழுவதும் பெற வேண்டுமென்று அந்த “உயர்ந்த இசையின் உணர்வை..,” நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கி விட்டால் அதனின் உணர்வுகள் பெருகி தீமையின் உணர்வுகள் கொண்ட இந்த உடலில் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் வளரத் தொடங்கும்.

அப்படி வளர்க்கப்படும்போது தீமையால் உருவாக்கப்பட்ட இந்த உடலின் அணுக்கள் மடிந்து தீமையற்ற உணர்வுகள் கொண்டு ஒளியின் அணுக்களாக மாறி இன்று விண்ணிலே அருள் வட்டமாக சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் அங்கே நாமும் சென்றடையலாம்.


“மனிதனுடைய கடைசி எல்லை.., சப்தரிஷி மண்டலம் தான்