தீமைகள் எவ்வாறு நமக்குள்
வருகின்றது?
வேதனையுடன் வாழ்பவர்களை நாம்
பார்த்தால் பண்புடன் தான் பார்க்கின்றோம். அதை நுகர்ந்தபின் நமக்குள் நோயை உருவாக்கும்
அணுக்கருவாக உருவாகிவிடுகின்றது.
நாம் தவறா செய்தோம்..,? இல்லையே.
அந்த அருள் மகரிஷிகளின் அருள்
சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று நமக்குள் முதலில்
வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.
வலுவேற்றிய பின் அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி எல்லோரும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற
நிலையில் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
இந்த எண்ணத்துடன் வேதனைப்பட்டவருக்கு
நலம் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
அப்பொழுது அங்கே அவர் உடலில்
தீமையின் அணுக்கள் இருந்தாலும் நமக்குள் இருக்கும் அணுக்களுக்குள் இது சேராது. வேதனையான
உணர்வை இழுக்கும் சக்தி குறைகின்றது.
ஆக நமக்குள் நோய் வரும் தன்மையைக்
குறைக்கின்றோம். இதைச் செயல்படுத்துவதற்குத்தான் ஆலயமே தவிர ஆனால், நான் என்ன செய்கின்றோம்.
அங்கே கல்லைக் கடவுளாக்கிவிட்டோம்,
இங்கே நம் மனதைக் கல்லாக்கிவிட்டோம்.
நாம் பெறவேண்டிய நல்லதை மாற்றிவிட்டு
இந்த மனதைக் கல்லாக்கும் பொழுது இரக்கமற்ற செயலும் இரக்கமற்ற உணர்வும் தான் வருகின்றது.
நாம் முதலில் அவர் வேதனைப்படுவதைப்
பரிவுடன் கேட்டறிந்திருப்போம். அப்புறம் என்ன சொல்வோம்? “எப்படியோ தொலைந்து போகட்டும்
போ..,” என்று மனதைக் கல்லாக்கிக் கொள்கின்றோம்.
உங்கள் குழந்தைகளுக்கு முதலில்
எல்லா நல்லதும் செய்கின்றீர்கள். ஆனால், தவறின் இயல்புகளில் அங்கே தொடர்ந்து செயல்படும்
பொழுது “இப்படிச் செய்கின்றானே.., இவன் எங்கே உருப்படப் போகின்றான்..,?” என்று அவனைச்
சாபமிடும் நிலைக்கே சென்றுவிடுகின்றீர்கள்.
அவன் உணர்வை மாற்றுவதற்கு
நாம் அவனை எண்ணும்படிச் செய்ய வேண்டும். செய்கின்றோமா? செய்வது இல்லை.
நம் குடும்பத்தில் உடலை விட்டுப்
பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள்
துருவ தியானத்தில் விண் செலுத்தியிருந்தால் அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதி பெறமுடியும்.
அதன் வழி கொண்டு துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை நமக்குள் வளர்த்து அறியாமல் வரும் அறியாமையை நீக்க முடியும்.
சூரியன் எப்படி அகண்ட உலகில்
வரும் உணர்வைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போல நம் உயிர் ஆறாவது
அறிவு கொண்டு எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை
நாம் ஒளியாக மாற்றிடல் வேண்டும்.
இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான்
முருகன். அனைத்தையும் அறிந்திடும் உணர்வுகள் பெற்றவன் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
நாம் மனதைச்
சுத்தப்படுத்துவதற்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆத்ம சுத்தி
செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும்
அதைச் சுத்தப்படுத்தும் பொழுது நமக்குள் மாசுபடும் நிலைகள் மாறி நமக்குள் இருக்கக்கூடிய
ஒவ்வொரு குணத்தின் எண்ணத்தையும் தங்கமாக மாற்றிவிடும்.
நாம் ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை
நீக்கிவிட்டால், மனம் தங்கமாகின்றது. ஏனென்றால் தங்கத்தில்
அழுக்கு நிற்காது. அதன் நிறத்தை மாற்றாது.
அதைப் போல் நமக்குள் மனம் தங்கமாகும் பொழுது நாம்
நினைத்த காரியங்கள் செயலாகின்றது. அதற்குத்தான் ஆலயங்களில் தெய்வச் சிலைகளுக்குத்
தங்கத்தைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.
ஆகவே, ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இதைப் போன்று
அந்த ஞானிகள் காட்டிய நிலையில் உங்கள் வாழ்க்கையில் மனைதைத் தங்கமாக்கும் நிலைக்கு
வாருங்கள்.