ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2016

எனக்குள் இருக்கும் கவலையெல்லாம் போக்குவதற்கு அதுதான் “பெரிய டானிக்” என்பார்கள்

மது அருந்திவிட்டால் கஷ்டம் என்றும் தெரிகின்றது. ஆனால், மது குடிக்காமல் இருக்கின்றார்களா என்றால் இல்லை.

பீடி சிகரெட் குடித்தால் நமக்கு இருமல் வருகிறது, இருதயம் கெடுகிறது, அது சம்பந்தப்பட்ட நோய்கள் வருகின்றது என்று தெரிகின்றது.  இருந்தாலும் அந்தச் சுகத்திற்காக அது வேண்டும்.

சிகரெட் குடித்தால் தான் எனக்குக் கொஞ்சம் நன்றாக இருக்கின்றது என்பார்கள். அதே மாதிரி மது குடித்தால்தான் எனக்கு உற்சாகம் வருகிறது என்பார்கள்.

ஏனென்றால், எனக்கு இருக்கக்கூடிய கவலை எல்லாம் போக்குவதற்கு அது தான் எனக்குப் “பெரிய டானிக்..,” என்ற நிலையில் இருப்பார்கள்.

ஆகவே, நமக்குத் தவறு என்றும் தெரிகின்றது. ஆனால், அந்தத் தவறிலிருந்து மீள முடியாத நிலைகளே வருகின்றது.

நாம் இன்று பக்தியின் நிலைகள் கொண்டு கோவிலுக்குச் சென்று எப்படியோ இரண்டு தேங்காய் பழத்தை உடைத்து உனக்கு வைக்கின்றேன் என்று செய்வார்கள்.

நான் உனக்குத் தேங்காய் பழத்தைக் கொடுத்திருக்கின்றேன். “என்னை ஏன் நீ காப்பாற்றக் கூடாது..,” இப்படி என்கிற நிலை தான் அங்கேயும் வருகின்றது.

மதுவும் மற்றதைக் குடித்தது போல சாங்கிய சாஸ்திரத்தில் சிக்கி இதிலிருந்து மீள முடியாத நிலைகளை இன்றும் வாழ்கின்றோம்.

அதைப் போன்று இன்னொன்றும் செய்வார்கள்.

ஆயுள் ஹோமத்தைச் செய்தால் ஆயுள் விருத்து என்று செய்வார்கள். இன்று எத்தனை பேர் உயிருடன் வாழ்கின்றார்கள்?

ஆயுள் ஹோமத்தைச் செய்து வைக்கின்றார்கள். முதலில் அவர் செய்யாமல் “போய்விட்டார்..,” என்றால் பரவாயில்லை.

இவர் ஆயுள் ஹோமத்தைச் செய்பவர் இருக்கின்றாரா..,” எத்தனை பேர் அப்படி இருக்கின்றார்கள் “கணக்குச் சொல்லுங்கள்.., பார்க்கலாம்”.

ஆனால், “இருப்பதில்லை..,” என்று தெரிகின்றது.

சாங்கிய சாஸ்திரப்படி இதைச் செய்தால் கொஞ்ச நாள் இருப்போமே என்கிற இச்சையில் தான் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்கின்றோம்.

ஆயுள் ஹோமம் செய்தவரும் இருப்பதில்லை. ஆயுள் ஹோமத்தைச் செய்து தான் வாழவேண்டும் என்பவரும் வாழ்வதில்லை. வாழ வைக்க வேண்டும் என்று ஆயுள் ஹோமம் செய்தவரும் இல்லை.

இதெல்லாம் நமக்குத் தெரிகின்றது. தெரியாதது ஒன்றும் இல்லை. எதையாவது ஒன்றைச் செய்து ஆக, நாம் “எங்கேயோ இருந்து சக்தி பெறுகிறோம்” என்றுதான் எண்ணுகின்றோம்.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் சாஸ்திர விதிப்படி நாம் எதை எண்ணுகின்றோமோ நம் உயிர் “ஓ” என்று ஜீவனாக்கி “ம்” என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இந்த உணர்வின் சக்தி நமக்குள் செயலாக்கி அதுவே நமக்குள் தெய்வமாக இயக்கிக் கொண்டுள்ளது.

நாம் இந்த உடலின் இச்சைக்கு எண்ணும் பொழுது அடுத்து என்ன செய்கின்றோம்?

ஒருவர் வளர்ந்து வருவதைப் பார்த்துவிட்டால் போதும். நம்மைக் காட்டிலும் முன்னாடி அவன் போய்க் கொண்டிருக்கின்றான் பார், அவனை எப்படிக் காலை வாரி விடுவது என்ற இந்த உணர்வு தான் வரும்.

ஏனென்றால், தான் வாழ வேண்டும் என்று எண்ணும் பொழுது தன்னைக் காட்டிலும் வலுவாக இருந்துவிட்டால் தன் வியாபாரத்தைக் கெடுத்துவிடுவான்.

ஒருவர் வியாபாரம் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அதே கடையை இன்னோருவர் வைக்கிறார் என்றால் நம் வியாபாரத்தைக் கெடுக்கின்றான் என்று அவனுக்கு என்னென்ன பொய் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் அந்தச் சரக்கை மட்டமாகச் சொல்வோம்.

சரி ஆளுக்குப் பாதி கிடைக்கின்றது. “எப்படியும் வாங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்திற்குப் போகின்றோமோ…,” என்றால் இல்லை.

ஒரு தெருவிற்குள் இரண்டு கடை வைத்தால் உடனே சண்டை வரும். இவர் அவரைச் சாடுவார். அவர் இவரைச் சாடுவார். இதைப் போன்றுதான் நமக்குள் வருகின்றது.

ஒரு கடைவீதியில் எடுத்துக் கொண்டால் பலரும் பலவிதமான நிலைகள் செய்கின்றார்கள். அவர்கள் தரத்தை உயர்த்தும் பொழுது அங்கே தரம் வரும். ஆக, தரத்தை உயர்த்தினால் மக்களைக் கவர முடியும் என்ற தன்னம்பிக்கை வைத்தால் நம் தரம் உயரும்.

அதே சமயத்தில் உனக்கு விலை ரொம்பவும் குறைவாகக் (CHEAP) கொடுக்கின்றேன் என்ற நிலைகளை தரத்தைக் குறைத்துக் கொடுத்தால் தரம் நிச்சயம் கெடும்.

என்னிடம் காசு சுருக்கமாக இருக்கின்றது, காசுக்குத் தகுந்த மாதிரித்தான் என்றால் அதை வாங்கி உபயோகித்தால் நமக்குப் பல நோய்களும் வரும்.

தரத்தை உயர்த்தும் நிலைகள் நமக்குள் இல்லை.

ஆகவே, அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு சாஸ்திரப்படி நாம் கொண்டு வந்தால் நம் உணர்வின் தரத்தை உயர்த்த முடியும்.

இந்தத் உலகில் வரும் தீமைகளை அகற்றவும் முடியும். ஞானிகளின் உணர்வுடன் ஒன்றவும் முடியும். இந்த உடலை விட்டு அகன்றால் அந்த மெய்ஞானிகள் உணர்வுடன் ஒன்றவும் முடியும்.

இல்லையென்றால் இந்தச் சாங்கிய சாஸ்திரத்தில் சிக்கிவிட்டால் இந்த உடலை விட்டு அகன்றபின் இன்னொரு உடலுக்குள் கூடுவிட்டுக் கூடு பாயத்தான் முடியும்.

அந்த உடலுக்குள் இந்த உடலில் செய்த தீமைகளைத்தான் உருவாக்க முடியும். அவனையும் வாழ வைக்க முடியாது. நாமும் அதற்குள் வாழ முடியாது.

அங்கே நஞ்சினை அதிமாக வளர்த்து நஞ்சினை நமக்குள் சேர்க்க முடியுமே தவிர நஞ்சிலிருந்து மீள முடியாது.

இதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எடுத்துரைத்தார்.