ஒருவரை நீங்கள் திட்டுகிறீர்கள்
என்றால் பதிவாகின்றது. அதை நுகரப்படும் பொழுது உயிரிலே மோதிக் கோபம் என்ற உணர்வுகள்
வருகின்றது.
அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதற்கும்
கோபத்தின் நிலைகள் வருகின்றது. இது எதனால் வருகின்றது?
உற்றுப் பார்த்து உணர்வின்
தன்மை பதிவாகின்றது. அதே சமயத்தில் நண்பரிடத்தில் பழகுகின்றோம். பழக்கமான நிலைகளில்
இருக்கின்றோம். அவர் பதிவும் உனக்குள் உண்டு. நம்முடைய பதிவும் அவருக்குள் உண்டு.
பற்றும் பரிவும் கொண்டு அவருடன்
பழகுகின்றோம்.
திடீரென்று, அவர் இனம் புரியாத
நிலைகள் தன் குடும்பத்தில் பற்றை இழந்து அவருக்குள் சங்கடமாகி என்ன வாழ்க்கை என்று
தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
நாம் அவர் மேல் பற்றுடன் இருக்கப்படும்
பொழுது அவர் உணர்வு நமக்குள் பதிவாகியிருக்கும் பொழுது இனம் புரியாத நிலைகளில் அந்தப்
பற்று கொண்ட மனிதனின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா இந்த உணர்வைக் கவர்ந்து கொண்டபின்
அந்த ஆன்மா இங்கே வந்துவிடுகின்றது.
நமக்குள் வந்த பின் அவன் எப்படித்
தற்கொலைக்கு விஷத்தைக் குடித்தானோ அல்லது சுருக்கைப் போட்டுக் கொண்டானோ அல்லது வேறு
எதைச் செய்தானோ அந்த உணர்வுகள் நம் உடலிலே வரும்,
அந்த உணர்ச்சிகள் இங்கே வந்து
இந்த உடலுக்குள் என்னென்ன செயல்களைச் செயல்படுத்துகிறது என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.
நாம் தவறு செய்யவில்லை. பழக்கத்தில்
நண்பர் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம். அதனால் நண்பரின் குடும்பத்தில் இதைப் போன்ற
நிலை ஏற்பட்டு விடுகின்றது.
ஆனால், கடைசி நிலை அவர் உணர்வு
பதிவான பின் “இப்படி ஆகிவிட்டதா..,? நேற்றைக்கெல்லாம் அவரிடம் நான் பேசிக் கொண்டிருந்தேனே..,”
என்ற உணர்வுடன் வலிமையாக்கிவிட்டால் அந்த உணர்வை நுகர்ந்து கொண்ட பின் அந்த ஆன்மாவே
நமக்குள் வரும் தன்மை வந்துவிடும்.
அல்லது அதன் உணர்வின் தன்மையை
ஒரு உடலுக்குள் புகுந்தாலும் அவன் தற்கொலை செய்து கொண்ட உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள்
பதிவாக்கி இதன் உணர்வுகள் அவன் எதனெதன் சந்தர்ப்பங்களில் எதை உருவாக்கியுள்ளார்களோ
அந்த உணர்வெல்லாம் நமக்குள்ளும் வரும்.
அதே உணர்வுகள் கொஞ்சம் சோர்வடைந்தால்
“நாமும் தற்கொலை செய்து கொள்ளலாமா…?” என்ற உணர்ச்சிகளைத் தூண்டச் செய்துவிடும்.
ஆக, நாம் பார்த்தது கேட்டது
நுகர்ந்தது இவை அனைத்தும் நம் உடலுக்குள் எப்படி எல்லாம் இயக்குகின்றது. இதைப் போன்ற
நிலைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்றால் என்ன செய்வது?
ஏதாவது ஒரு வழி வேண்டுமல்லவா?
அதற்குத்தான் விநாயகரை வைத்துச்
செயல்படுத்தும் பொழுது இரசமணியும் கொடுத்திருப்பார்.
அந்த இரசமணியின் தன்மைகள்
பல தீமைகளை நீக்கியது. - ஏனென்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய பாதரசம் அது மோதி விஷத்தைப்
பிரித்துவிட்டு வெளியே செல்லும் பொழுது அந்தப் பாதரசத்தால் ஏற்படும் வெப்பமும் அதனால்
ஈர்க்கும் காந்தமும் வருகின்றது.
இப்படிக் காந்தம் வந்த நிலைகளில்
கடைசியில் பலவீனமான விஷத்தின் தன்மையைக் கவர்ந்து கொள்கின்றது. கவர்ந்து கொண்டபின்
வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும், காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் விஷம் இயக்கும்
சக்தியாகவும் மாறுகின்றது.
ஆகவே, இப்படி மூன்றும் ஒன்றானால்
ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது.
அந்தப் பாதரசமே உலகம் முழுவதற்கும்
எல்லாவற்றிலும் எல்லா நிலைகளில் தாவர இனங்களிலும் உண்டு. இன்று ஒவ்வொரு செடிகளில் எடுத்துக்
கொண்டாலும் சூரியனிலிருந்து வந்த பாதரசம் உண்டு.
நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு
உயிரணுவிற்கும் துடிப்பு ஏற்பட வேண்டும் என்றால் பாதரசம் வேண்டும். நம் ஜீவ அணுக்களுக்குள்ளும்
பாதரசம் உண்டு.
நம் உயிருக்கும் அந்தப் பாதரசம்
உண்டு. ஆகவே எல்லா அணுக்களிலும் பாதரசம் உண்டு.
ஆனாலும் இந்தப் பாதரசம் எது
எதிலே கலந்து கொள்கின்றதோ அதன் உணர்வுடன் ஒட்டியே வாழும். இதைப் பிரிப்பதற்கு என்ன
செய்வது? என்பதற்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேசிக்கின்றார்.
உயிரணு தோன்றி எத்தனை வகையான
உணர்வுகளை எடுத்தானோ இது விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகப் பிரித்து உணர்வின் தன்மை
உயிரை ஒளியின் உடலாக மாற்றிக் கொண்டவன் அகஸ்தியன். - இதே பாதரசம் தான்.
ஆகவே அந்த உணர்வின் தன்மை
ஓர் ஒளியாக இருளை நீக்கி உணர்வான பொழுது இரசமணி. ஆகவே தன் உயிரின் தன்மை அதை மணியாக்கப்படும்
பொழுது “பிறவி இல்லை..,” என்ற நிலை அடைகின்றனர்.
அப்படி அடைந்தது தான் துருவ
நட்சத்திரம்.
இன்று அதிலிருந்து வரக்கூடிய
உணர்வு இருளை நீக்கும் ஆற்றல் பெற்றது. அதை நாம் எப்படிப் பருகுவது? என்று இப்படிக்
காரணப் பெயர்களை இட்டுக் காண்பித்தார்கள் ஞானிகள்.
நமது வாழ்க்கையில் நம்மை அறியாது
பண்புடன் அன்புடன் பரிவுடன் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்தாலும் அவர்களுக்கு உதவி
செய்கின்றோம்.
பிறர் வேதனைப்படும் உணர்வை
நாம் எடுத்தால் அந்த வேதனை உணர்வுடன் அவருக்கு உதவி செய்கின்றோம். அவரின் வேதனையான
உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
அதாவது வேதனை என்பது வலிமையானது.
கோபம் என்பது வலிமையானது. குரோதம் என்பது வலிமையானது.
நல்ல குணங்களைக் காட்டிலும்
அவர்கள் செயல்படுத்தும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த வலிமையான உணர்வுகள்
நல்ல குணங்களை ஆட்கொண்டு அதைச் செயலற்றதாக்கி நம் உடலுக்குள் எப்படி நோய்கள் வருகின்றது?
இந்த நோய்களை எப்படி நீக்குகின்றது?
என்பதற்குத்தான் இதெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி எஸ்வராய குருதேவர் படிப்படியாக
வைத்து நமது வாழ்க்கையில் நாம் எப்படி வழி நடத்த வேண்டும் என்று இங்கே காட்டுகின்றார்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்து இந்த உயிரை மணியாக்கும் நிலைகளைத்தான் குருநாதர்
உணர்த்தினார்.