இன்று ஒரு சினிமாவிற்குச்
சென்றால் மற்றவரைத் தள்ளி முந்தியடித்துக் கொண்டு டிக்கெட்டை எடுத்து உள்ளே செல்கின்றோம்.
அதைப் போன்ற நிலைகள் நாம்
செல்லும் அருள் ஞானப்பாதையில் இல்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அருள் ஞானப் பாதையில் செல்லும்போது
எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கப்பெறவேண்டும் என்ற நிலையில் தான்
கொண்டு வர வேண்டும்.
அதனால் தான் திரும்பத் திரும்ப
இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
உதாரணமாக, ரொம்பவும் நட்பின்
தன்மை கொண்டு ஒவருக்கு இரண்டு பலகாரத்தையோ அல்லது இரண்டு பொருளையோ கொடுங்கள்.
உடனே அவர், “இல்லை இல்லைங்க..,
எனக்கு வேண்டாம்” என்று சொல்லித் திருப்பிக் கொடுப்பார்.
ஆனால், அதே சமயத்தில் அதில்
ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை மட்டும் அவருக்குக் கொடுத்தால் அவர் நினைவு எப்படிச் செல்லும்.
“பார்.., நமக்குக் கொஞ்சம்
போல் தான் நமக்குக் கொடுக்கின்றார்.” இன்னும் சிறிது வேண்டும் என்று அவர் கேட்டால்
நாம் என்ன சொல்வோம்?
உனக்கு ஏன் இன்னும் கொடுக்க
வேண்டும்..? என்று உடனே எதிர்ப்பு சக்தி தான் வரும். இதை நாம் அனுபவத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
ஆகவே, எப்பொழுதுமே நீங்கள்
எல்லோருக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும்
பெறவேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால், அருள் ஞானத்தை
வளர்த்து நாமும் சுகம் பெற்று நம்மைச் சார்ந்தோருக்கும் நல் வழி காட்டி இதை உதவ வேண்டும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்
இது.
நம் பேச்சும் மூச்சும் உலகைக்
காத்திடும் நிலையாக வரவேண்டும். தீமைகள் அகற்றிடும் நிலைகள் வரவேண்டும். பகைமையற்ற
உணர்வாக நமக்குள் வளர்ந்திட வேண்டும். பகைமைகளை அகற்றிடும் அருள் ஞான சக்தி நாம் பெறவேண்டும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும்
நமக்குள் பகைமை உணர்வு வளராது அருள் ஞானிகளின் உணர்வு நமக்குள் வளர்த்திடும் நிலையாகப்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் என்றுமே அந்த அருள் ஞானிகளுடன்
ஒன்றி உயிருடன் ஒன்றிடும் நிலையாக உண்மை சாஸ்திரத்தின் வழிப்படி அவனுடன் அவனாக ஒன்றி
வாழ்வோம்.
நம் உயிர் காட்டும் உணர்வின்
வழி கொண்டு இருளை அகற்றிடும் சக்தி பெறுவோம். அதில் உள்ள பொருளை நாம் எப்படி அதனின்
அறிவாக அறிகின்றோமோ அந்த அறிவின் ஞானமாக நமக்குள் வளர்ப்போம்.
என்றும் வளர்ந்திட்ட வளர்ந்து
கொண்டே இருக்கும் மாறாத நிலைகள் கொண்ட மகரிஷிகளின் உணர்வுடன் நாம் நிலை கொள்வோம், வளர்வோம்,
வாழ்வோம்.
அந்தச் சக்திகளை நாம் பெறுவோம்,
உலக மக்களை வாழ வைப்போம். என்று அந்த மகரிஷிகளுடன் சேர்ந்து தவமிருப்போம்.
