ஆசையின் நிமித்தம் செல்லப்படும் பொழுது யாகத்தைச் செய்தால் பாவத்தைப் போக்க
முடியும் என்று சொல்கிறார்கள். யாகத்தைச் செய்தால் கடவுள் நேரடியாக உதவி செய்கிறான்
என்ற தத்துவத்தை ஊட்டுகின்றார்கள்.
அதன் வழியில் அந்த யாகத்தைச் செய்து மந்திர ஒலி கொண்டு ஆண்டவனுக்கு அனுப்பி
அதன் வழி நமக்குத் திருப்பிக் கொடுப்பான் என்ற ஆசையின் நிலையிலே தான்
செல்கிறார்கள்.
காசைக் கொடுத்துவிட்டு ஆண்டவன் அருளைப் பெறும் தத்துவத்தை இப்படி ஊட்டிய பின்
நாம் எப்படி வாழ்வோம்?
சற்றுச் சிந்தியுங்கள்.
எவரானாலும் தன் உணர்வின் தன்மை மறந்தால் இது சாகாக்கலையாக வந்து தனக்குள்
உணர்வின் தன்மை விளைந்த பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அடுத்தவன் வசம் கைவல்யம். அவன்
ஏவும் ஏவலுக்கே நாம் அடிமையாவோம்.
அந்த உணர்வின் இச்சையை அவனுக்கும் ஊட்டும். அவன் நிலையில் இதை வளர்க்கும்.
அவனையும் வீழ்த்தும். ஆக, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போலத் தான்
நிகழ்ச்சிகள் நடக்கும் என்று குருநாதர் தெளிவாக்கினார்.
ஆக, தத்துவத்தைப் பேசித் தெய்வம் செய்யும் என்றால் தெய்வம் எது?
எண்ணங்கள் தான் தெய்வம்.
ஒவ்வொரு உயிரும் என்ன செய்கிறது என்ற தத்துவத்தை அன்று வியாசகன்
தெளிவாக்கினான். கண்ணுக்குப் பெயர் பரமாத்மா என்று வியாசகன் வைத்தான் என்றால் அதன்
உட் பொருள் என்ன?
இந்தப் பரமான இந்தப் பூமியில் படர்ந்துள்ள உணார்வுகள் மனித உடலுக்குள் விளைந்த
உணார்வுகள் அதைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது உணர்வின் தன்மை பதிவாக்கி
அந்த உணர்வின் தன்மையை (பூமியிலிருந்து) நுகர்ந்து உயிருடன் இணைக்கச் செய்து
உணர்வின் அலையாக மாற்றுகின்றது.
இங்கே கண் பரமாத்மா என்று கண்ணால் உணர்ந்த உணர்வுகள் தனது ஆன்மாவாக அந்த
உடலில் ஆன்மாவாக மாற்றி உயிருடன் ஒன்றி ஜீவான்மாவாக மாற்றுகின்றது.
ஆகவே, ஜீவான்மாவிற்கு அந்தப் பரமான்மா கொடுக்கின்றான் என்று கண்களின்
செயல்களைக் கருத்துடன் தெளிவாக்கினான் அன்று வியாசகன்.
ஆனால், பார்க்கலாம் இங்கே பார்த்தசாரதி கோவிலில் யானைக்கு நாமம் போடுவதற்குக்
கோர்ட்டில் கேஸ் போட்டு சண்டை போட்டார்கள். அப்பொழுது கடவுள் எப்படி
இயக்குகின்றார்?
தத்துவம் தெரிந்த நாமும் படித்த நாமும் ஆசையில் செல்லும் நிலையில் தவறை
மறைக்கச் செய்கின்றது. ஒரு உணர்வின் தன்மையை ஆசைப்பட்டால் தன்னையறியாது தவறு செய்யும்
நிலைக்கே வருகின்றது.
ஆசையின் உணர்வை ஊட்டப்படும் பொழுது அதன் எல்லைக்கே செல்லப்படும் பொழுது
தன்னையறியாது குற்றங்கள் புரியும் நிலையே வருகின்றது.
குருநாதர் இதையெல்லாம் தெளிவாக்குகின்றார். உனது ஆசை எதுவாக இருக்க வேண்டும்?
நீ சிந்தித்துப் பார்.
உலக நிலைகள் எப்படி இருந்தது? கடவுள் எங்கே இருக்கின்றான்? இறைவன் எங்கே
இருக்கின்றான்? இறையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது? என்ற நிலையைத் தான்
காட்டுக்குள் அழைத்துச் சென்று எமக்கு இந்த நிலையைத் தெளிவாக்குகின்றார்.
எமக்குள் இவ்வாறு தெளிவாக்கிய - நான் கற்றுணர்ந்த உணர்வுளையும் குருநாதர் கற்றுணர்ந்த
உணர்வுகளையும் நீங்கள் அனைவரும் பெறவேண்டும். உங்கள் உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
உங்கள் உடலைச் சிவமாக மதிக்க வேண்டும். எண்ணும் எண்ணமே வினையாக நிலைக்க வேண்டும்.
வினைக்கு நாயகனாக அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் அந்த நாயகனாக
தீமைகளை அகற்றும் உணர்வுகள் உங்களுக்குள் விளையும். குரு காட்டிய இந்த அருள்
வழியினை நீங்கள் ஒவ்வொருவரும் பெறமுடியும்.
அன்று வியாசகன் கண்டுணர்ந்தது போன்று இந்த இயற்கையின் உண்மையின்
நிலைகளிலிருந்து மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதனைத் தெளிவாக்கினார் நமது
குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.