தனக்குள் தன் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவனால் உணர்ந்த உணர்வின்
இயக்கத்தைத் தன்னுள் அறிந்தான். இயக்கங்கள் இப்படித்தான் இருக்கின்றது என்ற
நிலையையும் தெளிவாக்கினான்.
ஆகையினால் தான், அகஸ்தியன் என்று ஒரு அணுவின் அகத்தின் இயக்கங்கத எப்படி
இயக்குகிறது என்ற பேருண்மையை உணர்ந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயரைச்
சூட்டுகின்றார்கள் ஞானியர்கள்.
சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்ட உணர்வும் உணர்வால் உணர்ந்த நிலையும் தன்னை
அறிந்த நிலையும் அவன் சந்தர்ப்பத்தால் அறிந்த நிலைகள் தான்.
ஆகவே, பின் வந்த சான்றோர்கள் அணுவின் இயக்கப் பொறிகளை, பொறி என்றால் அதனுடைய
உணர்வின் உணர்ச்சிகள் எப்படி இயங்குகிறது என்ற நிலையை பின் வந்த ஞானியர்கள்
தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.
அந்த்த் தெளிந்த உணர்வை நமக்குள் தெரிவிக்கின்றார்கள். அவ்வாறு உணர்த்தியது
யார்? அதாவது வியாசகர் தான் இதைத் தெளிவாக்குகின்றார்.
கடவுள் என்றால் என்ன? உணர்வு என்றால் என்ன? என்ற நிலையைத் தனக்குள் தன்
அணுவின் இயக்கங்களையும் விண்ணின் அணுக்களின் இயக்கமும் அது மண்ணின் அணுக்களின்
இயக்கமும் தாவர இனங்களின் அணுக்களின் இயக்கமும் தாவர இனச் சத்தை நுகர்ந்தபின்
அணுவின் இயக்கம் என்ற இந்த உள் பிரிவினைத் தனக்குள் அறிந்துணர்ந்ததனால் அவனை
அகஸ்தியன் என்ற காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.
இன்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்படுவதை இதே சூரியன் தான் தனக்குள் கவர்ந்து
வைத்துள்ளது இன்றும் அது இருக்கின்றது. அது அழியவில்லை, அழிந்து போகவுமில்லை.
அணுக்களாக உலாவிக் கொண்டுள்ளது நமது பூமியில்.
நமது பூமி மட்டுமல்ல. இந்தச் சூரியக் குடும்பத்தில் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே
அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் விண்ணிலும் சரி, மண்ணுலகிலும் சரி இது
உலாவிக் கொண்டேயுள்ளது.
சந்தர்ப்பத்தால் நமக்குள் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து அதைப்
பதிவாக்கிவிட்டால் அதே நினைவின் எண்ணங்கள் வருகின்றது, அதைக் கவர்ந்து நமக்குள்
வளர்க்கவும் முடியும், வளரவும் முடியும்.
மற்றோரை வளர்த்திடவும் முடியும் என்ற இந்த நம்பிக்கை ஊட்டியுள்ளது அகஸ்தியன்
தன்னுள் கண்டுணர்ந்த அந்தச் செயலாக்க உணர்வுகள்.
ஏனென்றால், நான் சொல்வது சிறிது கடினமாக இருக்கும், நீங்கள் புரிந்து கொள்வதற்கு.
இன்றைய உலகில் கற்றுணர்ந்த உணர்வின் நிலையை எழுத்தறிவாகப் பாட நிலையாகக்
கொடுக்கப்பட்டு அதனின் பதிவாக்கங்களாக வந்துள்ளது.
ஆக, ஞானிகள் காட்டியிருந்தாலும் அதன் பின் வந்தவர்கள் தான் நுகர்ந்த உணர்வின்
தன்மையை மதங்களாக உருவாக்கிச் சட்டங்களை இயற்றுகின்றனர்.
ஒவ்வொரு மதமும் தனக்குள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டு அதைப் படித்து உணர்ந்தால்
தான் அவை நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்கிவிடுகின்றது உள் நின்று அந்த உணர்வுகள்.
ஆகவே, ஒவ்வொரு மதமும் அதற்குள் எத்தனையோ வகையான உணர்வுகள் நாம் பதிவு
செய்தாலும் அதற்குள் இனங்கள் பல தான் எண்ணிய உணர்வுகள் பதிவாக்கப்படும் பொழுது
அவருக்குள் உள் நின்று அது கடவுளாக உருவாக்குகின்றது.
இப்படி மதங்களால் எண்ணங்களை உருவாக்கப்பட்டு அதன் வழியிலே தான் இன்று சூரியனின்
காந்தப் புலனறிவு கவர்ந்து இன்று நமது பூமியில் பரவச் செய்துள்ளது. அதுவும் இன்று
உள்ளது.
இதைப் போன்று நம்மில் நாம் நம்மை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அகஸ்தியன்
வழியில் நாம் சென்றோமென்றால் அணுவின் இயக்கப் பொறியும் ரூபங்கள் எவ்வாறு என்ற
நிலையும் நம்மில் நாம் அறிந்திட முடியும்.
நாம் எதையெல்லாம் பெற்று இந்த உணர்வுக்கொப்ப இன்று பரிணாம வளர்ச்சி அடைந்து
வந்தோம்? இந்த உணர்வின் கலவையால் நமது உயிர் எவ்வாறு நம்மை மனிதனாக உருவாக்கியது?
என்ற நிலையையும் நாம் அறிந்திட முடியும்.
ஆகவே, உங்களுக்குத் தெளிவாக்கும் நிலையாக குரு காட்டிய அருள் வழியில் அவர்
உணர்த்திய உணர்வும் பதிந்த நிலையும் பதிந்த நிலை கொண்டு அறிய முற்பட்டு அந்த
உணர்வின் அறிவாக நான் தெரிந்து கொண்ட உணர்வும் எனக்குள் விளைந்த உணர்வின் கருவும்
சொல்லாக வெளிப்படும் பொழுது நுகர்ந்தோர் உணர்வுகளில் பதிவாகி இதை நினைவாக்கப்படும்
பொழுது அந்த அருள் ஒளியை உங்களால் பெற முடியும் என்ற அந்த நம்பிக்கையில் தான் இதைக்
கூறுகின்றேன்.
ஏனென்றால் நான் எழுத்தறிவற்றவன், இன்றைய கல்வியின் நிலைகளைப் பெறத் தகுதியற்றவன்.
ஆக, அருள் ஞான வழியில் குரு காட்டிய அருள் வழியில் உணர்வாகக் கொண்டு அவர்
காட்டிய அருள் நெறி கொண்டு அதனை எமக்குள் வளர்த்து அந்த உணர்வின் சக்தி எல்லோரும்
பெறவேண்டும், பெறச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைக் கூறுகின்றேன்.
இதைச் சொல்லப்படும் பொழுது சிலர் ஏற்றுக் கொள்வோரும் உண்டு. எனக்குப்
புரியவில்லை என்றிருப்போரும் உண்டு. புரியவேண்டும் என்று ஏங்கிப் பெறுவோரும்
உண்டு.