மனிதனானபின் இயற்கையில் விளைந்ததை வேக வைத்து விஷத்தை மாற்றிவிட்டு உணவாக
உட்கொண்டு உணவுக்குள் உயர்ந்த குணங்களைப் பதிவாக்கி அந்த உணர்வின் அணுவாக வளர்த்து
இந்த உடலை ஒளியாக மாற்றும் திறன் பெற்றது நம் ஆறாவது அறிவு.
அதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று உணர்த்தினார்கள்
ஞானிகள். ஆகவே நாம் உருவாக்கும் திறன் பெற்றவர்கள் என்று அறிதல் வேண்டும். அப்பொழுது
எதை நாம் உருவாக்க வேண்டும்?
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இன்று நாம் தாவர இனங்களை விளையை வைத்து அதைப்
புசித்தாலும் விஞ்ஞான அறிவால் தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் பூச்சிகளைக்
கொல்கின்றோம்.
அதனால் அந்த விஷத்தின் தன்மை தாவர இனத்திலும் கலக்கின்றது. தாவர இனத்துடன்
கலந்தது நம் உணவுடன் சேர்த்து வருகின்றது. நாம் வேக வைத்தாலும் பூச்சிகளைக் கொல்ல
நாம் தூவிய விஷங்கள் மீண்டும் அதற்குள்ளே தான் இருக்கும்
இயற்கையில் விளைந்த விஷத் தன்மை வேறு. செயற்கையில் செய்யப்பட்ட உணர்வுகள்
இதனுடன் நஞ்சு கலந்ததாக மாறுகின்றது. ஆனால், நஞ்சைத் தூவிய உணர்வுகள் சூரியன்
கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
எந்த உணவினை நீங்கள் உணவாக உட்கொண்டீர்களோ மற்ற பூச்சிகளைக் கொல்ல மற்ற விஷத்
தன்மைகளைத் தூவினீர்களோ இதை உணவாக உட்கொள்ளும் போது கொல்லும் உணர்வின் அணுக்களாக நமக்குள்
விளைகின்றது.
ஆக, இதற்கு அது தேவை. எந்த நஞ்சைக் கொல்லத் தூவினோமோ அந்த நஞ்சின் தன்மை
நமக்குள் நுகர்ந்து இதுவே பல கொடூர உணர்வு கொண்ட நஞ்சு கொண்ட அணுக்களாக நமக்குள் விளைகின்றது.
அவ்வாறு நமக்குள் விளையும் அந்த நஞ்சு கொண்ட அணுக்கள் நல்ல அணுக்களை வாழவிடாது
தடுக்கின்றது.
நீங்கள் பார்க்கலாம்.., இப்பொழுது எடுத்துக் கொண்டால் பெரும் பகுதி வேதனை என்ற
உணர்வுகளே அனைவருக்கும் தோன்றும்.
அவரவர்கள் தொழில் செய்யும் உணர்வுகளுக்கொப்ப அந்த இயக்கத்தின் தன்மைகள் வலு
கொண்ட எண்ணங்கள் எண்ணும் போது அந்த இயக்கத்தில் உறுப்புகளுக்குள் அதிகமாகச்
சேரும்.
வலு கொடுக்கும் போது விஷமே தேவை. ஆனால், விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது
நம் உடலுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வுகள் அந்த விஷத்தின் ரசங்களாக நம் உடல் வடித்து
விடுகின்றது.
ஆகவே, உணர்வின் எண்ணங்கள் வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை அடைகின்றது. நம்
சொல்லிலும் செயலிலும் அந்தக் கடுகடுப்பு கலந்தே வரும். அதே சமயத்தில் நம் உடல்
உறுப்புகளும் செயலிழக்கும் தன்மை வருகிறது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் அவசியம்.
நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின்
உணர்வை நுகர்ந்து நம் உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் அதை இணைக்க வேண்டும். நம்
உடலுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வை விளையச் செய்ய வேண்டும்.
அதன் வழி கொண்டு நஞ்சைப் பிரித்திடும் நஞ்சை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று உயிருடன்
ஒன்றிடும் உணர்வுகளை நாம் ஒளியாக மாற்றிடல் வேண்டும்.
இதைத்தான் கார்த்திகேயா என்றனர் ஞானிகள். கார்த்தி என்றால் வெளிச்சம். அழியா
ஒளிச் சரீரம் பெற்று பிறவியில்லா நிலை அடைவதே மனிதனின் கடைசி எல்லை.