ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2016

அதிகாலை நேரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எதை நுகர்கின்றோம்? விநாயகர் தத்துவத்தில் காட்டிய பேருண்மை எது?

அகஸ்தியன் வானுலக ஆற்றலை எடுத்துத் துருவன் ஆனான். துருவ மகரிஷியாக ஆனான். கணவனும் மனைவியும் இரு உணர்வும் கலந்து கொண்டு உணர்வின் தன்மை தனக்குள் ஒளியின் உணர்வாக உருப்பெற்றனர். இரு உயிரும் ஒன்றானது ஒளியின் சரீரம் பெற்றனர், துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறச் செய்வதற்குத்தான் இதை நினைவுபடுத்தி அந்தக் காவியப் படைப்பின் பிரகாரம் மனதில் பதிவு செய்து கண்ணின் நினைவு கொண்டு சிலையை உற்றுப் பார்த்து உணர்வின் நிலை கொண்டு உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி உணர்வைச் செலுத்தும்படி செய்வதற்கே சிலையை அமைத்தனர்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அதிகாலை 4 மணிக்கெல்லாம் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் அலைகளாக மாற்றுகின்றது.

நம் பூமி அதைத் துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகின்றது. அவன் கவர்ந்த உணர்வை இங்கே பதிவாக்கி நினைவை அங்கே செலுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகரும்படிச் செய்தார்கள் அன்று ஞானியர்கள்.

ஆகவே, மனிதன் அதைப் பதிவாக்கினால்தான் அதை நுகர முடியும். அந்தத் துருவ மகரிஷியையும் துருவ நட்சத்திரத்தையும் பதிவாக்கி நமக்குள் அதைக் கவர வேண்டும் என்பதற்காக அக்கால ஞானியர்கள் அதைச் செய்தார்கள்.

ஆனால், இன்று பூராவும் அஞ்ஞான நிலையாக்கி விட்டார்கள். அஞ்ஞான வாழ்க்கையே வாழும்படிச் செய்துவிட்டார்கள்.

அஞ்ஞான வாழ்க்கையாக தன் ஆசையின் நிலையைக் கூட்டி எவர் கொடுப்பார்? எவர் செய்வார்? ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றார் என்றும் நம்மை ஆள்பவன் உயிர் என்ற நிலைகளை மறக்கச் செய்துவிட்டார்கள்.

நம்மை உருவாக்கி ஈசனாக இருப்பவனும் நம் உயிர் தான். அந்த உயிரே நமக்குள் உணர்வின் வினையாகச் சேர்த்து அந்த வினைக்கொப்ப உடலின் அமைப்பும் அந்த உணர்வின் எண்ணங்களே நம்மை இயக்குகின்றது என்ற நிலையைத் தெளிவாக்கிய அந்த விநாயகர் தத்துவம் காலத்தால் மறைக்கப்பட்டுவிட்டது.

“தன்னை அறிதல்” என்ற நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டது.

நஞ்சை வென்ற அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்த நிலையிலே இன்று இருக்கின்றோம்.

விஷத் தன்மை கொண்டு ஆசையின் உணர்வு கொண்டு மடியும் தருணத்திலிருக்கின்றோம். மனிதனின் நினைவையே கூண்டுடன் அழிக்கும் உணர்வுகள் காலத்தால் வந்துவிட்டது.

நாம் விஷத்தை அகற்றி அகற்றி அகற்றி இன்று மனிதனாக வந்துள்ளோம். ஆனால், மனிதனின் சுகபோகங்களுக்காக நஞ்சினைப் பாய்ச்சி ஆவியின் தன்மைகளை இன்று சூரியன் கவர்ந்து வரப்படும் பொழுது வேதனை என்ற உணர்வு கொண்டு கடுமையான நோயாகிறது.

நோயானபின் உடலுக்குள் விஷத் தன்மை கொண்ட அணுக்களாக மாற்றி மடிந்தபின் மனிதனல்லாத விஷப் பூச்சிகளாகப் பிறகும் தன்மையே இன்று உருவாகின்றது விஞ்ஞான வாழ்க்கையில்.

அன்று ஞானிகள் காட்டிய அந்த உணர்வின் தன்மையைப் பெறுவது என்பதை ஆசையின் நோக்காக அவனின் நிலைகள் கொண்டு தெய்வத்தை வணங்கும்படிச் செய்துவிட்டார்கள்.

கடவுள் இதைத் தன்னுடைய ஆசைக்கு வேண்டி விரும்பினான். அவன் அதைச் செய்தான் என்ற உணர்வுகளைக் கூட்டிவிட்டனர்.

ஆகவே, இதன் ஆசையில் உடலின் இச்சைக்குத்தான் எல்லா மதங்களும் காட்டுகின்றதே தவிர அருள் உணர்வின் தன்மையான உயிரின் உணர்வை நாம் அறியும்படிச் செய்யவே இல்லை. நுகர்ந்ததை உருவாக்கியது, உணர்வின் தன்மை மனித உடலாக்கியது உயிர்.

நஞ்சை வென்றவன் மனிதனாகிச் சென்றபின் அவன் உணர்வை நுகர்ந்தால் இது வரும் என்ற நிலைகளை எல்லா மதங்களும் அந்தக் காலை 4 மணிக்கெல்லாம் தொழுக ஆரம்பிக்கின்றார்கள். பிரார்த்தனைகளைச் செய்கின்றார்கள், பூஜைகளையும் செய்கின்றார்கள்.

ஆனால், அந்த ஞானிகளை எண்ணுவதே இல்லை.

ஞானிகளை எண்ணாது இவர்கள் உணர்வுகளைத் தான் அந்த நேரத்தில் பெறும்படி செய்துவிட்டார்கள். பிர்ம்மமுகூர்த்தம் என்று. ஆக உண்மையின் இயக்கங்களிலிருந்து நம்மை மாற்றப்பட்ட நிலைகளில்தான் நாம் இன்று வாழுகின்றோம்.

இனியாவது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை ஏங்கிப் பெறுங்கள். அதை உங்கள் உடலுக்குள் அணுக்களாக மாற்றுங்கள். உயிருடந் ஒன்றுங்கள்.

கணவன் மனைவி இணைந்த நிலையில் ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள். ஒளியின் சரீரம் ஆகுங்கள். மனிதனின் கடைசி எல்லை அதுவே.

ஆகவே, உலகின் வழிகாட்டிகளாக நீங்கள் மாறுங்கள்.