உங்களுக்கு ஒன்றாம் வகுப்பில் பாட நிலை போதிப்பது போல் அருள் மகரிஷிகளின்
உணர்வுகளைத் தொடர்ந்து பதியச் செய்கின்றோம்.
உணர்வின் இயக்கச் சக்திகளை மனிதனான நாம் உணரும் தன்மை பெற்றவர்கள். பதிந்து
கொண்டபின் நினைவு கொண்டு அதைக் கவர்ந்து செயலாக்க முடியும்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களில் தாயின் கருவில் வளர்ந்த
அந்தச் சிசு (அகஸ்தியன்) அவர் கற்றுணரவில்லை. ஏனென்றால், தாய் நஞ்சினிடமிருந்து
தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது. அது கருவில் விளையும் அகஸ்தியருக்கு இணைந்தது. உணர்வின்
தன்மை நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் அங்கே பெறுகின்றது.
நஞ்சினை வென்றிடும் உணர்ச்சி வரப்படும் பொழுது பிறந்தபின் அந்தச் சிசு
(அகஸ்தியன்) மல்லாக்கப் படுத்திருக்கும்போது அறிவில்லாத நிலைகளில் அறியும் அறிவே
இல்லையென்றாலும் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் உடலுக்குள் இருக்கும்
விஷங்கள் இந்தக் கருவிழியின் நிலையாக ஊடுருவுகின்றது.
ஆக, சூரியனின் மோதலை உற்றுப் பார்க்கின்றான்.
மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை இவனுக்குள் இது மோதப்பட்டு உணர்வின் அறிவாக
இவனை இயக்குகின்றது. ஆகவே, சூரியனின் அந்த இயக்கத்தையும் காணும் சக்தி
பெறுகின்றான்.
இதெல்லாம் இயற்கை, சந்தர்ப்பத்தால் தான் உருவான நிலைகள்.
மனிதன் பல நஞ்சினைக் கொண்டு மனிதனாக உருவானாலும் நஞ்சு கொண்ட
மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் அவரின் தாய் தந்தையர் நுகர்ந்த இந்த விஷத்
தன்மைகள் கருவிலே வளரப்படும் பொழுது இணைந்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுவாக
விளைகின்றது.
இதைப் போன்றுதான் உங்களுக்குள் உருவாகும் உணர்வின் தன்மையும் அருள் ஒளியின்
தன்மை ஒவ்வொரு குணத்திலும் சிறப்பும் உணர்வின் தன்மை தனக்குள் இணைக்கப்படும்
பொழுது அந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் உபதேசிக்கின்றோம்.
உபதேசிக்கும்போது உங்களை உற்று நோக்கும்படி இந்த உணர்வின் தன்மை
நுகரும்படியும் நுகர்ந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றும்படிச் செய்வதற்கே நமது
குருநாதர் கட்டளைப்படி உங்களை இதைச் செயலாக்குகின்றேன்.
தெளிந்து கொள்ளுங்கள்.
இதன் வழி அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வுகள் சூரியன் அது எவ்வாறு தனக்குள் கவர்கிறது
என்ற நிலையும் அண்டங்கள் எப்படி உருவானது என்ற நிலையும் இதன் தொடர் வரிசையை இவன்
காணுகின்றான்.
இன்று விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கும் தன்மையை
அறியப்படும் பொழுது அது எங்கிருந்து விளைந்தது? இதன் உணர்வின் தொடர் எது என்று
விஞ்ஞானி இன்று காணுகின்றான்.
எப்படி விஞ்ஞானி காணுகின்றானோ அன்று மெய்ஞானியான உணர்வின் தன்மை மெய்யை உணரும்
ஆற்றல் விஷத்தை ஒடுக்கும் ஆற்றல் தாய் கருவில் இவனுக்குள் உருவாகப்படும் பொழுது தனக்குள்
விளைந்த நிலைகள் மோதப்படும் பொழுது பிரிவின் தன்மை கொண்டு எப்படி உருவாகின்றது
என்ற அறிவை அங்கே ஊட்டுகின்றது அகஸ்தியனின் நிலைகளில்.
அப்படி உருவான அந்த அகஸ்தியன் தான் தனது வாழ்க்கையில் ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது என்ற
உணர்வின் எண்ணங்கள் அவனுக்குள் அங்கே தோற்றுவிக்கின்றது.
ஏனென்றால் இதெல்லாம் நாளை வரும் நஞ்சிலிருந்து நீங்கள் வென்று நஞ்சற்ற உணர்வை
உங்களுக்குள் வளர்த்து இந்த உடலிலிருந்து நாம் செல்லப்படும் பொழுது
அருள்ஞானிகளுடன் ஒன்றி இன் மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற என்றும் ஒளியின் சரீரம்
பெறும் நிலைக்குத்தான் திரும்பத் திரும்ப அகஸ்தியன் பெற்ற நிலைகளைப்
பதிவாக்குகின்றோம்.
அகண்ட உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ
நட்சத்திரமும் இதைப் போல ஏனைய மண்டலங்கள் எத்தனையோ உண்டு.
அதிலே இணைந்த உணர்வுகள் அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை நமக்குள் இணை சேர்த்து
உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக அழியாத வல்லமை பெறும் இந்த உயிரை நாம்
கடவுளாக மதித்து நமக்குள் எண்ணியதை உருவாக்கும் உணர்வை நாம் தெளிவாக்குதல்
வேண்டும்.
ஏனென்றால், கருவிலே வளரும் இந்தச் சிசு தாயால் நுகர்ந்த உணர்வுகள் நஞ்சினை
வென்றிடும் உணர்வுகள் தாயின் உடலுக்குள் சென்றபின் அதிலே விளைந்த இந்த உயிர் தான் அந்த
உணர்வின் ஆற்றலாக அணுவாக மாற்றுகின்றது.
அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை.
தனக்குள் வரும் உணர்வினை தாயின் கருவின் உணர்வாக எடுத்து வளரும் இந்தச் சிசு அதன்
உணர்வின் தன்மை வரப்படும் பொழுது எதுவாக ஆகின்றது. ஈசனாகின்றது.
ஆகவே, அது உணர்த்திய உணர்வுகள் அது அணுத்தன்மை அந்த உடலில் சிசுவின் உடலில்
வரும் பொழுது அதை உற்பத்தியாகும் கடவுளாகவும் காத்திடும் நிலையாகவும் அதை மாற்றிடும்
நிலையாகவும் வருகின்றது.
உயிரே கடவுள், எண்ணும் எண்ணமே இறைவன், இறையின் செயலே நமக்குள் தெய்வமாக உள்
நின்று இயக்குகின்றது.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். அகஸ்தியன் கண்ட அகண்ட
அண்டத்தையும் நாம் அறிவோம். மரணமில்லா பெரு வாழ்வாக அழியா ஒளியின் சரீரம்
பெறுவோம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடுவோம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா.