மழையே இல்லை என்றாலும் நீரைத் தேக்கிவைக்க அன்று அணைகள் இல்லை. ஆனால்,
குளங்கள் உண்டு. மழை இருந்தால் அதில் சேமிக்கும் நிலை உண்டு.
அரச காலங்களில் வரகு என்று ஏழு அடுக்கு நிலை உண்டு. இந்தக் காற்றிலிருந்து தனக்குள்
சேமித்துத் தனக்கு உணவுக்காக வேண்டும் என்ற நிலையில் வரகு என்ற தானியம் உண்டு.
இன்றும் கோபுரக் கலசங்களில் பார்க்கலாம். என்று தரித்திரமாகிறதோ அந்தக்
கலசத்தை எடுத்து அதை நாம் விதைத்தால் அந்த உணர்வின் வித்துக்களைப் பெருக்கி இந்தப்
பஞ்சத்தைப் போக்கிக் கொள்ளலாம்.
ஆலயங்களில் சேமித்து வரப்படும் பொழுது நம்மைக் காக்கும் அதை உணவாக உபயோகப்படுத்தும்
நிலைகள் கொண்டு இன்றும் உண்டு. நீங்கள் எந்தக் கோபுரத்தில் பார்த்தாலும் இந்த நிலை
உண்டு.
நாம் இங்கே தபோவனத்தில் கலசம் வைத்திருப்பதில் கூட வரகை இட்டு
வைத்திருக்கின்றோம். ஏனென்றால், வறட்சியான நிலைகளிலும் அது தாக்குப்பிடிக்கும் உணர்வு
கொண்டு உணவாக உட்கொள்ளும் நிலை வரும்.
இங்கே தபோவனத்தின் வாசல் மேல் உள்ள கலசங்களில் இந்த வரகைப் போட்டு வைத்துள்ளோம்.
காரணம் இனி ஒரு காலம் வறட்சி என்ற நிலை வந்தாலும் வறட்சியை நீக்கும் அந்த உணர்வு அதற்குள்
உண்டு.
நாம் மனிதரில் வாடித் திரியும் இந்த நேரங்களில் அந்த வரகு என்ற நிலை வரும்
பொழுது அந்தப் பொருள் வைத்திருக்கும் உலோகங்களில் இதனின் காந்தப்புலனறிவு
கவரப்படும் பொழுது நமக்குள் இந்த வாயிலில் வறட்சி என்ற நிலையை மாற்றி நமக்கு ஒரு
நல்ல நிலையைக் கொடுக்கும் தன்மை வருகின்றது.
விஞ்ஞான அறிவைப் போன்றுதான் அன்று மெய்ஞானிகள் இத்தகைய நிலைகளை ஆலயங்களில்
வடிவமைத்துள்ளார்கள்.
ஆக, கோபுரத்தை உற்று நோக்கும் போது மனிதனுக்கு வேண்டிய நல்ல எண்ணங்களைத்
தோன்றும்படி அந்தக் கலசங்களில் உள்ள வரகும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வறட்சியைத்
தாங்கும் பல நல்ல நிலைகளும் வருகின்றது.
இவையெல்லாம் அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகள். இன்று ஆலயங்களில் அதைக்
காணலாம்.