ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2016

ஏகாதசி விரதம்

ஏகாதசி அன்றைக்கு சாங்கியப்படி விரதம் இருந்து ஆண்டவனுக்குப் படைத்துவிட்டுச் சாப்பிட்டால் ஏகாந்த நிலை பெறுவோம் என்று இப்படி நம்மை அறிவிலிகளாக மாற்றிவிட்டார்கள்.

ஏகாந்த நிலைகளில் நாம் எப்படி இருக்க வேண்டும்? விரதம் என்பது எது? ஞானிகள் உணர்த்தியது என்ன?

ஏகாதசி அன்று ஒரு நாள் நாம் யார் யாருடனெல்லாம் பகைமை கொண்டோமோ அந்தப் பகைமையெல்லாம் மறந்துவிட்டு நாங்கள் பார்த்த குடும்பங்களில் அனைத்தும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் அவர்கள் குடும்பங்களில் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழவேண்டும்.

அவர்கள் தொழில் வளம் பெறவேண்டும். குடும்பங்களில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நாங்கள் பார்க்கும் குடும்பங்களிலும், எங்களைப் பார்க்கும் குடும்பங்களிலும் இதைப் போன்ற நிலைகள் பெறவேண்டும் என்று இந்த விரதத்தைத்தான் இருக்கச் சொன்னார்களே தவிர சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஏகாதசி அன்றைக்கு விரதத்தைப் பார்த்தோம் என்றால் சமையல் செய்து எல்லாம் செய்து படைத்துவிட்டு கடைசியில் இவர்கள் உணர்வின் எண்ணங்கள் எப்படி இருக்கும்? விரதம் இருக்கப்படும் பொழுது சங்கடம் கஷ்டம், வேதனை அதைத்தான் கேட்பார்கள்.

கேட்ட பிற்பாடு என்ன செய்யும்?

ஏனென்றால், அரிசி சாப்பிடுபவர்கள் கோதுமை சாப்பிடுவார்கள், கோதுமை சாப்பிடுபவர்கள் அரிசி சாப்பிட்டால் இப்படி இது ஒரு விரதம். வாழைப்பழம் இதை போன்ற சில உணவுகளை உட்கொள்வார்கள். குறைத்துச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

அன்றைக்குச் சாப்பிட்டிருப்பார்கள். ஜீரண சக்தி இருக்காது. பசியாக இருந்து சாப்பிட்டாலும் இந்த உடலுக்குள் வேதனை, சங்கடம் என்ற உணர்வான பின் ஜீரணிக்கும் அணுக்கள் அப்படியே பலவீனமடைகின்றது.

திடீர் என்று சாப்பிட்டவுடன் ஜீரணிக்கும் சக்தி இல்லை.

இரவுக்கெல்லாம் பார்த்தால் விரதம் இருந்தேன், அப்புறம் சாப்பிட்டேன், நெஞ்சைக் கரிக்கிறது, மேல் வலிக்கின்றது என்பார்கள். இதைத்தான் நாம் பார்க்க முடிகின்றது.

நம் உடலின் உறுப்பின் தன்மைகள் அது சீராக இயக்கவேண்டும் என்றால் ஏகாந்த நிலை என்றால் நாம் எப்படி இருக்க வேண்டும்?

எல்லோரும் நலம் பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும். மலரைப் போல மணம் பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணார்வை எப்பொழுது செலுத்துகின்றனரோ இங்கே பகைமை என்ற உணர்வுகள் தடுக்கப்படுகின்றது ஏகாந்த நிலை.

நமக்குள் வரும் நோய்களைத் தடுக்கும் நிலையும் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் பெறவேண்டும் அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எண்ணினால் இதுதான் ஏகாந்த நிலை, ஏகாதசி விரதம்.

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அங்கே செல்ல வேண்டும். அதிகாலை 5-6 மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எளிதில் பெறலாம்.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களை எடுத்துக் கொண்டால் இந்தந்தக் காலங்களில் தான் ஆன்மா பிரியும். துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நேரடியாகச் செல்லும் நிலை வரும்.

ஆகவே, அங்கே சென்றால் உணார்வுகள் கரைக்கப்படுகின்றது. உடல் பெறும் உணர்வுகள் சூரியன் ஒளிக்கதிர்கள் கவர்ந்து சென்றுவிடுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது. இதுவே நம் அழியா ஒளிச் சரீரமாக இருக்க வேண்டும்.

இந்த அழியக்கூடிய உடல் நமக்குத் தேவையில்லை. உயிருடன் ஒன்றி வேகா நிலை என்ற நிலையாக அகண்ட அண்டத்திலும் நஞ்சு நம்மை வென்றிடக் கூடாது. நஞ்சினை ஒளியாக மாற்றிடல் வேண்டும்.

பாம்பினங்கள் நஞ்சினைப் பாய்ச்சி உணர்வினைத் தனக்குள் மகிழ்ச்சியாகின்றது. அதில் உறைந்த நிலைகள் தான் நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போல நமக்குள் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் ஜீவ அணுவாக இருக்க வேண்டும். அது உறையும் கல்லாக இருக்கின்றது, ஜீவனற்றது.

ஆகவே, ஜீவனுள்ளதாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகி என்றும் ஒளியின் சுடராக ஏகாந்த நிலை ஏகாதசி என்று சொல்வார்கள். அந்த ஏகாந்த நிலைகள் நாம் பெறவேண்டும்.

இதுதான் ஞானிகள் காட்டிய உண்மையின் நிலைகள்.