தன்னைத் தற்காத்துக் கொள்ள புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தான் ஒவ்வொரு
உணர்வின் சக்தியைத் தன் உடலுக்குள் சேர்க்கப்பட்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
உடலின் அமைப்பாகின்றது.
பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ கோடி இரைகளை தாவர இனங்களை உயிரினங்கள் அதை உட்கொண்டு
அந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தின் நிலையும் அதனதன் உணர்வுக்கொப்ப தன்னைத் தற்காத்துக்
கொள்ளும் உணர்வைச் சுவாசித்துத் தனக்குள் அதை வினையாகச் சேர்த்துக் கொள்கின்றது.
வினையாகச் சேர்த்துக் கொண்ட நிலைகள் அது கலந்து அணுக்களாக உருவாகி வளர்ந்தபின்
அந்த உணர்வின் அணுவின் தன்மையை அதற்குள் விளைந்ததை உயிர் தனக்குள் உயிராத்மாவாகச்
சேர்த்துக் கொள்கிறது.
ஆக, இது உயிராத்மா புறத்திலே இருப்பது பரமாத்மா. பரமான இந்த எல்லைக்குள் பரந்து
கிடக்கும் இந்தச் சக்திதான் பரமாத்மா.
நாம் நினைக்கும் உணர்வின் சக்திகளை பரமாத்மாவிலிருந்து ஈர்க்கும் போது நம்
உடலின் அருகில் வரும் போது ஆத்மாவாகி உடலுக்குள் செல்லும் போது ஜீவான்மாவாகின்றது.
ஜீவான்மாக்களாக அது விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உயிராத்மா
ஆகின்றது. அதைத்தான் “காயத்ரி” என்பது.
காயத்ரி என்றால் முழுமையான நிலைகள் பெறுகின்றது. அதாவது சிருஷ்டிக்கும் தன்மை.
ஆகவே, உடலுக்குள் விளைந்த நிலைகள் கொண்டு அடுத்த நிலைக்கு உருப்பெரும் சக்தி
பெறுகின்றது – காயத்ரி.
நம் உடலுக்கு உயிர் சூரியன். சூரியன் எப்படி விளைந்து ஒரு பிரபஞ்சமாக விளைந்ததோ
அதைப் போன்ற ஆற்றல்மிக்க நிலைகளை நாம் பெறவேண்டும் சொல்வது.
இயற்கையில் மனிதன் நாம் எண்ணும் எண்ணத்திற்குள் எவ்வளவு பெரிய ஆற்றல் உண்டு என்பதை
நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் எதை நினைவுபடுத்துகின்றோமோ அந்த உணர்வின் சக்தியைக் காற்றிலிருந்து நாம்
சுவாசிக்க நேருகின்றது. சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படும் போது பொறிகளாக
இயக்குகின்றது. சொல்லாக செயலாக இயக்குகின்றது.
புறத்தால் நாம் கவர்வது பரமாத்மா, எண்ணி எடுத்தால் ஆத்மா, உடலுக்குள்
உருவானால் ஜீவான்மா, ஜீவான்மாவிற்குள் விளைந்தது உயிருடன் இணைந்து முழுமையாகும்போது
உயிராத்மா.
ஒரு உணர்வின் தன்மை உயிராத்மாவாகச் சேரும் நிலையை காயத்ரி என்று ஞானிகள்
பெயரிட்டுள்ளார்கள். ஏனென்றால் உயிராத்மாவில் எது சேமிக்கப்பட்டுள்ளதோ அதற்கொப்ப
அடுத்த உடலை உயிர் உருவாக்கும்.
ஆகவே, இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபட எதை நாம் நம்
உயிராத்மாவாக உருவாக்க வேண்டும்?
தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்த்து நமக்குள் முழுமையாக்க (காயத்ரி)
வேண்டும்.
துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாம் பரமாத்மாவிலிருந்து
கவர்ந்து நம் ஆன்மாவாக்கி, உடலுக்குள் அணுக்களாக விளையச் செய்தால் விளைந்த துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் உயிராத்மாவாக்கும்.
முழுமையான அதனின் நிலைகள் நம்மை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்.
பிறவியில்லா நிலை அடையச் செய்யும். பரிணாம வளர்ச்சியில் மனிதன் முழுமை அடைய
வேண்டியது அந்த நிலை தான்.