ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 29, 2016

மாமியார் மருமகளுக்குள் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை அகற்றி குடும்பத்தில் ஒற்றுமையுடன் வாழுங்கள்

ஒரு வேலையின் நிமித்தமாக மருமகள் வெளியே சென்று வீட்டுக்குள் வருகின்றது.

ஏம்மா இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..,? என்று அப்பொழுது மாமியார் கேட்டால் போதும். .

“மாமியார் இப்படிக் கேட்பார்கள்..,” என்று நினைத்தே மருமகள் வந்தது.  

மாமியார் கேட்ட அந்த உணர்வைச் சுவாசித்தவுடன் “இப்பொழுது நான் வருவதற்கு முன்னாடி என்ன அவசரம் ஆகிவிட்டது?” என்ற இந்த பதில் தான் மருமகளிடமிருந்து வருகின்றது.

அடுத்து, “இப்பொழுது நான் என்னத்தைக் கேட்டுவிட்டேன்.., என்று உனக்கு இந்த மாதிரிக் கோபம் வருகிறது? மாமியார் கேட்கிறது. ஆக, இந்த உணர்வு இப்படி வந்து விடுகின்றது?

இதை மாற்றுவதற்கு என்ன வழி?

வெளியில் காரியம் முடிந்து வரும் போது சிறிது நேரம் ஆகிவிட்டால், திரும்பி வரும்போதே “அத்தைக்கு நல்ல மனது வரவேண்டும், நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரவேண்டும் என்று எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.

மருமகள் பொறுமையுடன் இந்த மாதிரி வருவதற்குச் சிறிது காலதாமதமாகிவிட்டது என்று சாந்த உணர்வுடன் சொல்லலாம்.

மருமகள் சொன்ன பதில் இங்கே ரிமோட் ஆகாது, வெறுப்பு வராது.

ஆக, எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற மோதல் வரும் பொழுதுதான் உணர்வின் தன்மை அறிய முடிகின்றது. நாம் எண்ணும் உணர்வு நமக்குள் வந்து ஆன்மாவாக மாறுகின்றது.

இதைப் போல நிலையில் எதிர்த்து வரும் போது நமக்குத் தெரியாமலே இயக்குகின்றது. நாம் ஏன் கோபிக்கின்றோம். எதற்காக வேண்டி கோபிக்கின்றோம்? எதற்காக வேதனைப்படுகின்றோம்? நம்மை அறியாமலே இத்தனையும் நடக்கின்றது.

கடைசியில் பிடிக்கவில்லை என்றால் என்ன வாழ்க்கை..? வெறுக்கும் தன்மை வந்துவிடுகின்றது. வெறுப்பாகிவிட்டால் என்ன சொல்வோம்?

அப்புறம் எதைச் சொன்னாலும் “வாழ்க்கையில் எனக்கு எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் ஆகிவிடுகின்றது” என்ற இந்த உணர்வை எடுத்து நாம் வெறுத்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.

ஏனென்றால், மனிதனாகத் தோன்றியவன் முழு முதல் கடவுள். சந்தர்ப்பத்தால் என்றைக்கு மிருக நிலையிலிருந்து மனித உடல் பெற்றோமோ நாம் முழு முதல் கடவுள்

ஓம் என்ற பிரணவத்தை சிவனுக்கே ஓதினான் முருகன். வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வை நீக்கி அந்த அருளைப் பெருக்கும் பொழுது இந்தப் பிரணவத்தை மாற்றி (தீமை உருவாகதபடி) இருளை நீக்கி உணர்வின் தன்மை அறிவாகின்றது கார்த்திகேயா.

ஆகவே, இந்த வாழ்க்கையில் வழியறிந்து செயல்படும் சக்தி பெற்றது ஆறாவது அறிவு.

கணவனும் மனைவியும் இணைந்த நிலையில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுக்க வேண்டும். பெண்பால் இல்லை என்றால் ஆண் பாலுக்கு ஜீவன் இல்லை, அடுத்து வளராது.

கணவனும் மனைவியும் இதைப் போல அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து பெண் பால் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து நமக்குள் நன்மை பயக்கும் உணர்வை விளைய வைத்து இந்த வாழ்க்கையின் பயணத்தை அழியா ஒளி சரீரம் நோக்கிச் செலுத்துங்கள்.