ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 18, 2016

நாம் அணியும் ஆடைகளுக்குள் சேர்க்கப்பட்ட செயற்கைச் சாயங்களினால் தீமைகளே உருவாகின்றது

இன்று நாம் எடுத்துக் கொண்டால் விஞ்ஞான அறிவால் நாம் உடுத்தும் ஆடைகளில் ஈர்க்கும் காந்தம் உண்டு. ஈர்த்து வைத்துத் தான் நூலும் பஞ்சும் உருவானது.

ஆனால், இதற்குள் நாம் சேர்க்கும் உணர்வை ஏற்றுக் கொண்டால் தான் அந்த துணியில் கலரே (நிறம்) வரும். ஆக, ஏற்றுக் கொண்டு வந்தபின் அந்தச் சாயத்திலுள்ள நஞ்சின் தன்மை ஆவியாக மாறுகின்றது. அதைச் சூரியனின் காந்தப்புலன் கவர்கின்றது.

எந்த நஞ்சு கொண்ட விஷத்தின் துகள்களைத் துணியில் போட்டிருக்கின்றோமோ ஆடையாக அணிந்திருக்கின்றோமோ இதை நம் அருகில் ஆன்மாவாகக் கொண்டு வருகின்றது.

ஒவ்வொரு ஆடையும் அணியும் பொழுது நீங்கள் பார்க்கலாம். தூய்மை கொண்ட நிலையில் ஒன்றும் கலக்காத நிலையில் இருந்தால் அதை நீங்கள் நுகரும் பொழுது மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிவப்பான நிறம் கொண்ட ஆடையை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது அதே உணர்வின் தன்மை உங்களை அறியாமலே உணர்ச்சியின் வேகங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

நீல நிறம் கொண்ட ஆடையை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது எதை எடுத்தாலும் அந்த வேதனை உணர்வுகள் தோன்றும். ஆக, வேதனைப்படுத்தும் செயலைச் செயல்படுத்தும் உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.

ஏனென்றால் நாம் உடுத்தும் ஆடைக்குள் இத்தனை உண்டு. ஏனென்றால், மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் இதனுடன் கலக்கப்பட்டு இந்த நிலைகள் செயல்படுகின்றது.

இந்த இயற்கையின் உண்மை நிலைகளை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணரும்படி செய்தார். இயற்கை எப்படி இயங்குகின்றது? சூரியன் காந்தப்புலன் எப்படிக் கவர்ந்தது?

அன்று வாழ்ந்த வான்மீகி எதைக் கண்டான்? அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை சூரியனின் இயக்கங்கள் - சூரியன் ஒரு சத்தைக் கவர்ந்தால் அது சீதா. அதை மனிதன் நுகரப்படும் பொழுது சீதாராமா எண்ணங்களாக வருகின்றது.

அந்த உணர்ச்சிகளைத் தூண்டுவதும் அது பதிவானபின் எண்ணமாவதும் எண்ணத்தைக் கொண்டு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை ஒவ்வொன்றும் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை வான்மீகி அவன் கண்டுணர்ந்தான்.

சூரியன் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்ற நிலையில் தெரிந்து கொள்வதற்கே உனக்கு இதை உணர்த்துகிறேன் என்றார் குருநாதர்.

நீ ஆடை அணிகின்றாய் அவன் சாயத்தை விஞ்ஞான அறிவால் இடுகின்றான். உன்னில் போடப்படும் பொழுது இதே உணர்வின் தன்மை மணம் எதுவோ சூரியன் கவர்ந்து வைத்துள்ளது.

இவன் சாயம் இடும்போது இதிலிருந்த நஞ்சு அது எதிலிருந்து உருப்பெற்றதோ அந்த ஆடையை நாம் அணியும் பொழுது நம் உடலான காந்தப்புலன் ஜீவன் பெறுகின்றது.

அதன் உணர்வைக் கவர்ந்து அதே உணர்ச்சியின் அறிவை ஊட்டும் நிலை வருகின்றது. நஞ்சைப் பிரித்தாலும் நஞ்சின் தன்மை ஆடையாக அணியும் பொழுது வருகின்றது.

இதன் வழி நமக்குள் எத்தனையோ தீமைகள் வருகின்றது. இதை விஞ்ஞான அறிவால் கண்டான்.

இந்தெந்தத் துணிகளில் அதிகமாக விஷத் தன்மை இருக்கிறது என்ற நிலையை அந்த நிறங்கள் வந்தாலே ஜெர்மனியில் எடுக்க மாட்டார்கள். மேலை நாடுகளில் இதை எல்லாமே தீமையை தீமை என்று உணர்ந்தபின் மகாபாவத்திற்குப் போய்விட்டது என்ற நிலையில் உள்ளார்கள்.

ஆனால், இந்தியாவின் நிலைகளில் பிழைப்பிற்காக இது புகுகின்றது.

உணர்வின் தன்மை சாயங்களை வெளியிடப்படும் பொழுது விஷத்தன்மைகள் சூரியனால் கவரப்படுகின்றது. காற்று மண்டலமே நச்சாகின்றது.

இன்று வரக்கூடிய கொடுமையான தீமைகளுக்குக் காரணம் காற்று மண்டலத்தில் நச்சுத்தன்மை அதிகமானதால் தான் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

குருநாதர் எமக்கு உணர்த்திய நிலைகளை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இதைச் சொல்கிறோம்.