ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 1, 2016

எலெக்ட்ரானிக் ஒலி அதிர்வுகள் இராக்கெட்டை பழுதில்லாமல் இயக்குகிறது, மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்து நம்மைச் சீர்படுத்த முடியும்

நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்த்துவதற்கு அதை நினைவாக்குவதற்கு விநாயகர் அருகே அரச மரத்தை வைத்தான் ஞானி.

இதன் வழிப்படி நாம் எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றோமோ அப்பொழுதே நாம் வானை நோக்கி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நம் உடலுக்குள் உள் செலுத்தினால் அது அரசாக வந்து அதன் கீழ் மற்ற தீமைகளை அடக்க வல்லமை பெற்றது இதுதான் அங்குசபாசவா என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

நான் வேகமாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். உங்களுக்குள் பதியச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அழுத்தமாகவும் உங்களுக்குள் தெளிவாகவும் அது உணர்வின் தன்மை இணைந்து எவர் ஒருவர் கூர்மையாகப் பார்க்கின்றனரோ, படிக்கின்றனரோ அவர்கள் உடலில் இந்த அணுத்தன்மை பெருகும்.

அதனின் நினைவு கொண்டு உங்களால் தீமைகள் அடக்கும் வல்லமை பெறுகின்றீர்கள். உபதேசம் செய்வது புரியவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை கலக்கப்படும் பொழுது புரியாத நிலைதான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக் வைத்து எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். ஒரு தகட்டில் அல்லது நாடாவில் முலாம்களைப் பூசப்படும் பொழுது உயர் அழுத்தம் என்ற நிலைகளில் பதிவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.

அதன் ஒலி அதிர்வுகளை எலெக்ட்ரிக் ஒலிப் பேழைகளிலே மாற்றியமைத்து ரூபமாகக் கூட்டுகின்றது. ஆகவே, இதை இடைமறித்து எதையாவது தவறுதலாகி இடையிலே ஓசை மாறிவிட்டால் உடனே அதன் அழுத்தங்கள் மாறிவிடும்.

ஏனென்றால், ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டுமென்றால் தடைப்படுத்த வேண்டுமென்றால் இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது குறித்த நேரத்தில் வந்து தாக்கி இது நிறுத்திவிடும்.

இப்படி இயந்திரங்களை இயக்கவும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும் இது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற பேழைகளை அங்கே வைத்துவிட்டு அதனுள்ளே ஒலி அதிர்வின் கதிர்களை இயக்கப்படும் பொழுது அந்த இராக்கெட்டையே இயக்கச் செய்கிறது.

அங்கே இராக்கெட்டில் குறைகள் இருந்தாலும் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அது கட்டளையிட்டபடி அதைச் சீராக்குகின்றான் மனிதன் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில்.

இதைப் போலத் தான் நமக்குள் நுகர்ந்த தீமையின் விளைவுகளை மாற்ற வேண்டுமென்றால் நமக்குள் எண்ணத்தின் நிலையை அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்கி அந்த எண்ணத்தை இங்கே இயக்கினால் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் சீர்படுத்த முடியும். தீமையின் உணர்வுகளை மாற்றியமைக்க முடியும்.

ஏனென்றால், விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் விஞ்ஞானத்தை நம்புகின்றோம். மெய்ஞானத்தை இழந்துவிட்டோம். ஆக, மெய்ஞானத்தின் உண்மைகளை நாம் அறிய வேண்டுமென்றால் இது மனிதனுக்கு உதவும். பிறவியில்லா நிலையை அடைய உதவும்.

ஆனால், மனிதனின் ஆசையின் உணர்வுகள் ஒவ்வொரு உணர்வும் வளர்க்கப்படும் பொழுது இந்த உடலுக்கே அழிவு வரும். இந்த உடல் அழிந்து விட்டால் இதில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இந்த உயிர் அடுத்த உடலை மாற்றிவிடும்.

ஆகவே, மெய்ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் மெய்ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும். ஆறாவது அறிவின் தன்மை ஏழாவது நிலைகள் பெறச் செய்யும். சப்தரிஷி.