ஸ்தல புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்தல வரலாறுகளை எடுத்துச் சொல்வார்கள். இன்று
காசி, இமயமலை போன்ற இந்தப் பகுதிகளில் இதைப் போல உருவாக்கியுள்ளார்கள்.
அதாவது இரு பட்சிகள் வந்தது. அங்கே விஷ்ணு ஆலயம் ஒன்று உண்டு. தவ முனிவர்
ஒருவர் இருந்தார். விஷ்ணுவின் பக்தனாக இருந்து பல சாபங்களிலிருந்து மீட்டிட அவனை
அடைய மரத்தடியில் அவர் கடும் தவமிருந்தார்.
ஒரு காலத்தில் சாபமிட்ட நிலைகள் கொண்டு அது பறவைகளாக வரப்படும் பொழுது
தவமிருக்கும் முனிவரிடம் அந்த இரு பட்சிகள் வருகின்றது.
ஏனென்றால், முந்தி சாபமிட்ட நிலைகள் கொண்டு அந்த முனிவர் தவமிருப்பதைக் கண்டு
அவரிடம் ஆசி பெற்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்கலாம் என்ற நிலைகள் கொண்டு
வருகின்றது.
முனிவர் கண் விழித்துப் பார்த்தபின் சாப நிலைகள் நீங்கி மனிதனாகின்றான். ஆகவே,
அந்த ஸ்தலத்தில் போய் நாம் குளித்தால் நம் சாப அலைகள் எல்லாம் நீங்கும் என்று அதற்கு
ஒரு ஏஜென்ட் இருப்பான்.
அங்கே காசையும் கொடுத்து குளத்தில் முழுக்கைப் போட்டு காசைப் போட்டு வந்தால்
நாம் செய்த பாவம் எல்லாம் போய்விடும் என்றும் இப்படிக் கற்பனைக் காவியங்களை
உருவாக்கிவிட்டனர்.
ஆக, மனிதன் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமைகளிலிருந்து விடுபட மெய்
ஞானிகள் வெளிப்படுத்தியுள்ள மெய் உணர்வுகளைப் பெற முடியாத நிலைகளையே
செயல்படுத்துகின்றனர்.
இதைப் போன்று அரசர்கள் வகுத்த வழிதான் இன்று உலக நிலைகளில் ஆலயங்களை அமைத்து
அரசனுக்குக் கீழ் நல்ல ஒழுக்கங்களைக் கற்பித்தான் என்று பறைசாற்றுகின்றனர்.
அரசர் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆலயப் பண்புகளைப் புகழ் பாடினர். அவர்கள் புகழ்
பாடிய இந்த ஸ்தலம், இது முக்கியமான ஸ்தலம் என்றும் இன்று நாம் அங்கேயெல்லாம் வரிசைப்படுத்திச்
செல்கின்றோம்.
அரசன் செயல்களைப் புகழ் பாடி அவர்கள் பொருளீட்டி அவருடைய நிலைகள் எதுவென்று
தெரியாது அரசனைப் புகழ் பாடத்தான் தெரிந்ததே தவிர அருள் ஞானத்தைப் பெறும்
தகுதியையும் இழந்தவர்.
இன்று பெரும்பகுதி எடுத்துக் கொண்டால் அரசனைப் புகழ் பாடிய நிலைகளைத்தான்
நீங்கள் பார்க்கலாம். கடும் தவமிருந்தாலும் அரசனை அன்று புகழ்ந்து பாடவில்லை
என்றால் அவர்கள் வாழ முடியாது.
ஸ்தல புராணத்தை அவர்கள் பாடும் பொழுது அதை ஒவ்வொரு நிலையும் இப்படித்தான் வெளிப்படுத்தினர்.
இப்படி இன்று மக்கள் விஞ்ஞான உலகில் வாழ்கின்றோம். ஆனால், அஞ்ஞான வாழ்க்கையே
வாழ்கின்றோம். உடல் இச்சைக்கும், அழியக்கூடிய
நிலைகளுக்கும்தான் மனிதன் வாழ்கின்றானே தவிர, “அழியாத நிலைகள் எது?” என்ற நிலையை
எண்ணிப் பார்க்கவே இல்லை.
ஆனால், மனிதனுக்குப் பின் என்ன? மனிதன் எவ்வாறு விண் செல்ல வேண்டும் என்று மெய்ஞானிகள்
காட்டிய அருள் நெறிகள் நம் காவியத் தொகுப்புக்குள் உண்டு.
அவைகளெல்லாம் காலத்தால் மறைந்தே போய்விட்டது. மீண்டும் அதை நினைவுபடுத்தினால்
ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாது போய்விடுகின்றது.
ஆக, மறைந்த நிலைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
உணர்த்தி வருகின்றோம். இதைச் சீராகக் கடைப்பிடித்தோர் மகரிஷிகள் கண்ட பேருண்மைகளை
நிச்சயம் அறிய முடியும், உணரவும் முடியும்.