ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2016

குருநாதர் எம்மைப் பொட்டில் தொட்டுக் காட்டிய விதம்...!

ஒரு வேப்ப மரத்தின் தன்மை பல பல உணர்வுகளைக் கண்டாலும் தன் கசப்பின் உணர்வைப் பாய்ச்சும் நிலைகள் கொண்டது.

ஒர் ரோஜாப் பூவின் தன்மை பல பல உணர்வுகளைக் கண்டாலும் தன் துவர்ப்பின் தன்மையும் நறுமணத்தை வெளிப்படுத்தும் நிலைகள் கொண்டது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு தாவ இனமும் அதனின் நுகர்ந்தறிந்த உணர்வின் மணங்கள் அதனுடைய ரூபங்கள் எதுவோ அதை நுகர்ந்தறியப்படும் பொழுது அதனின் உணர்வின் எண்ணங்களாக நமக்குள் இயக்குகின்றது.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவுறக் காட்டிய அந்த ஞானியின் உணர்வின் தன்மையைப் பிரித்தறிந்து, அவர் விளைவித்த உணர்வும் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளும் அவர் அறிந்துணர்ந்த நிலையும் அவர் ஆற்றல் பெற்ற நிலைகளும் அவருக்குள் விளைந்த உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை எவ்வாறு பருக வேண்டும் என்பதை நாம் அறிதல் வேண்டும்

குண்டலினி யோகம் என்று சொல்லப்படும் ராஜ யோகம் அதை அவர்கள் நெற்றியிலே தொட்டுக் காட்டுவார்கள். தொட்டுக் காட்டியவரின் எண்ணத்திற்குச் சென்றபின் அவரில் விளைந்த உணர்வுகளே இங்கே விளைகின்றது.

ஆனால், நம் குருநாதர் காட்டிய உணர்வோ எம்மை (ஞானகுரு) பொட்டில் தொட்டுக் காட்டவில்லை. என் ஒவ்வொரு உணர்வுகளிலும் அவர் உணர்த்தும் உணர்வின் தன்மையைத் தொட வைத்தார்.

உணர்வின் இயக்கத்தைத் திசை திருப்பினார். தீமைகள் அகற்றிடும் உணர்வை எமக்குள் இணைத்தே காட்டினார்.

ஆகவே, அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு அவர் உடலிலே விளைவித்த உணர்வை எனக்குள் அவர் பதிவு செய்ததை அவரிடமிருந்து கண்டுர்ந்த உணர்வின் தன்மையை நானும் கண்டுணரும்படி செய்தார்.

நீ எவ்வாறு அவைகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியபடி அவைகளை நானும் பார்க்க நேர்ந்தது.

X – Ray படம் எடுக்கப்படும் பொழுது அதனின் கதிர்கள் நம் உடலுக்குள் ஊடுருவி அந்த மிஷினில் வைக்கும் துடிப்பின் நிலைக்குத் தக்கவாறு அதனின் துடிப்பு ஒலி அலைகள் எவ்வளவு தூரம் ஊடுருவுகின்றதோ அதைப் படமாக எடுத்து தெளிவாகக் காட்டுகின்றது.

இதைப் போலத்தான் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள் கொண்டு என் எண்ணத்திற்குள் பதிவு செய்த அவரின் உணர்வுகள் அவரின் நினைவாற்றல் கொள்ளும் பொழுது X – Ray மாதிரி பிறிதொரு தீமைகளைப் பிளந்து தீமைகளை உருவாக்கிய தீமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைகளில் இருப்பினும் தீமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வைக் காணமுடிகின்றது.

அந்த உணர்வின் நிலைகள் மற்றதை எவ்வாறு மாற்றுகின்றது என்ற நிலையையும் அறிந்துணரச் செய்தார். அப்படி உணர்ந்த நிலைகள் கொண்டு குரு அருளின் தன்மையை அறிந்துணர முடிந்தது..

பின், இதைப் போல நுகர்ந்தறிந்த தீமைகள் பலவாறாக இருப்பினும் குரு அருளின் துணை கொண்டுதான் எனக்குள் தீமைகள் விளையாத வண்ணம் தடுக்க முடிந்தது
.
குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்குள் விளைந்த தீமைகளைத் தடுத்திடும் அந்த உணர்வலைகள் இங்கே படர்ந்தாலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் அதிலே கலந்ததாலே அது செயலாக்கும் நிலைபடுகின்றது.

ஆகவே, யாம் உபதேசிக்கும் உணர்வுகளால் உங்களுக்குள் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்றால் என்னால் அல்ல.

குருநாதர் உணர்த்திய உணர்வின் தன்மை என் சொல் உணர்வுக்குள் கலந்து அந்த உணர்வின் ஆற்றல் படரப்படும் பொழுது புலனறிவால் நீங்கள் ஈர்த்திடும் உணர்வுகள் உங்களுக்குள் ஆழப் பதிந்து பதிந்த உணர்வே மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது குரு அருளின் தன்மையை அவர் கண்டுணர்ந்த பேராற்றல்மிக்க சக்தியை நாம் அனைவரும் காண முடியும்.