ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2016

நம் உயிரே பிரம்மனாகின்றது...!

நஞ்சென்ற நிலையை அறிந்தபின் அதன் உணர்வு புகாது அதை அடக்கி ஆளும் உணர்வின் எண்ணங்கள் பெற்ற நிலை மனிதன் - நம் உடலிலிருந்து வெளிப்படும் மணம் கார்த்திகேயா.

இந்தப் பூமியில், இந்தப் பிரபஞ்சத்தில், இந்த அகண்ட அண்டத்தில் பல உணர்வுகள் சேர்த்து உணர்வின் தன்மை இயக்கச் சக்தியாக மாற்றி அதற்குத்தக்க உருவை உருவாக்கி அதனின்று வெளிப்படும் மணத்தின் தன்மை மற்ற தீமை என்ற உணர்வான பின் எதிர் நிலை கொண்டு அந்த உணர்வின் அறிவாக அதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

இதைத்தான் கார்த்திகேயா என்று உணர்த்தப்பட்டது.

அகண்ட அண்டம் எவ்வாறு இருப்பினும் மனித நினைவு கொண்டு உணர்வினை அறிவாக இதன் இயக்கம் எதுவென்று அறிந்து செயல்படும் திறன் பெறுகின்றது.

இவ்வாறு திறன் பெற்ற இந்த ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்றார்கள் ஞானியர். எதனையும் அறிந்திடும் உணர்வும் எதனையும் மாற்றிடும் நிலையும் பெறுகின்றது.

ஆகவே, பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். இது ஆகாதென்றால் மற்றொன்றை நுகர்ந்து தனக்குகந்ததாக மாற்றிக் கொள்ளும் சக்தி செயல் பெற்றது, ஆறாவது அறிவு கார்த்திகேயா.

சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மாறும் நிலைகள் வரும்போது பரப்பிரம்மம் என்றும் ஆனால் ஆறாவது அறிவு கொண்டவன் ஒளி மங்கப்படும் பொழுது ஒளி மங்காமல் செயல்படுத்தும் அருள் உணர்வை இணைத்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவன்.

எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து இதை இணைத்து உருவாக்கும் உணர்வின் தன்மை பெற்றது இந்த ஆறாவது அறிவு என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது அன்று அகஸ்தியன் காட்டிய அருள் ஞானம்.

ஆகவே, மனிதனான பின் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். இந்த ஆறாகது அறிவிற்கு அத்தகைய ஆற்றல் உண்டு.

இதில் பல உணர்வுகளைத் தனக்குள் இணைத்து உருவாக்கினான் துருவன். ஒளியின் நிலையாக அன்று உருவாக்கினான். அதனை நாம் நுகர்ந்தால் நமது உயிர் அதே ஒளியாக மாற்றும் பிரம்மமாக மாறுகின்றது. நாம் சேனாதிபதி.

உடலிலிருந்து வெளிப்படுக்ம் ஒளிக்கதிர்களை இருள் என்ற நிலைகள் (தீமையான உணர்வுகள்) அணைத்தால் அந்த இருளை உருவாக்கும் உணர்வினை உட்புகாது தடுக்க அருள் ஒளி என்ற உணர்வின் நஞ்சை வென்றிடும் உணர்வினை இணைத்து அந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் நிலை பெற்றது இந்த ஆறாவது அறிவு பிரம்மா.

இதனை நாம் உருவாக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிவிட்டால் நமது உயிரே பிரம்மனாகின்றது. நான் பிரம்மன் ஆகின்றேன்.

அனைத்து உணர்வின் தன்மையையும் பிரம்மனாக்கும் பரிமாணத்தை, ஒளியின் உணர்வாக உருவாக்கும் உணர்வின் உடலாக நாம் மாறுகின்றோம்.

ஏகாந்த நிலைகள் கொண்டு அகண்ட அண்டத்தில் எதுவுமே நம்மை வென்றிடாது அனைத்தையும் வென்று ஒளியின் உணர்வாக மாற்றிடும் திறன் பெற்றது ஆறாவது அறிவு.

இந்த உயிர் அத்தகைய நிலைகள் பெற்றதுதான் பல நிலைகள்.

நாம் அதன் வழி பெறும் அகஸ்தியன் சென்ற வழியில் செல்வோம்.  அருள் ஒளியினை நமக்குள் சேர்த்து நம்மில் அறியாது சேர்ந்த இருளை அகற்றி ஒளியின் உணர்வாக மாற்றும் நிலை பெறுவோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதன் உணர்வை நாம் நுகர்ந்து அதை நமக்குள் உருவாக்கி இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை அடக்கி அருள் ஒளியைப் பெருக்க இந்த வாழ்க்கையையே தியானமாக்குவோம்.