அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி எங்கள் இரத்த
நாளங்களில் உள்ள ஜீவ
அணுக்களும் ஜீவான்மாக்களும் பெற
வேண்டும் என்று இதே
கண்களிலிருந்து செலுத்துகிறோம்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி எங்கள் உடல் முழுவதும்
படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெறவேண்டும் ஈஸ்வரா
என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். நம் ஆன்மாவில் அருள் வட்டமாக உருவாகும்.
அதே சமயத்தில் நம் உடலுக்குள் சென்றது
என்றால் அதுதான் வளரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளியை எடுத்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.
இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
இப்படி இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் முன்னாடி சாக்கடையே
இருந்தாலும் சரி அந்தச் சாக்கடை நாற்றம் வராது. அதை நுகரும் தன்மை உங்களுக்கு
வராது.
தியானம் செய்யாதவர்கள் அங்கே வந்து இதைப் பார்த்தார்கள் என்றால் அந்தச்
சாக்கடை நாற்றம் முதலில் வரும். இதை நீங்கள் கவனிக்கலாம்.
நமக்குள் இந்த உணர்வின் தன்மை தீமைகளை உள்ளே விடாது பாதுகாக்கும். நமக்கு அதை
அறியும் அறிவு தான் இல்லை. ஆனால், நாற்றத்தை உள்ளே விடாது தடுக்கின்றது.
நாற்றத்தை அறிந்து அறிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த உணர்வின்
எண்ணங்களோ அந்தச் செயலின் ரூபத்தைப் பார்க்கப்படும் பொழுது அதனின்று நீக்கும்
உணர்வுகள் நமக்குள் மூடி தீமையின் நிலைகளிலிருந்து நாம் விடுபட உதவும்.
அதனால் தான் இந்த உணர்வை உங்களுக்குள் அடிக்கடி பாய்ச்சி பதிவின் நினைவை நுகர்ந்தால்
இதே அணுவின் தன்மை பெருகினால் அது உங்களைக் காக்கும் உணர்வின் நிலை வருகின்றது.
மீண்டும் அந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எண்ணங்கள் வருகின்றது அந்த உணர்ச்சிகள்
உங்களைக் காக்கும் நிலையும் வருகின்றது.