இந்த மனிதனின் வாழ்க்கையில் சங்கடம், சலிப்பு, கோபம், வேதனை, வெறுப்பு,
குரோதம், பழி தீர்த்தல், பழி வாங்குதல் இதைப் போன்ற உணர்வுகள் வந்துவிட்டால் நம்
நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்துவிடுகின்றது.
உயிரின் உணர்வினுடைய கடைசி தொக்குதல் உண்டு. ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ
இதைப் போல இந்த உயிரின் தன்மை முழுமையும் இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள்
முழுமையாகி அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டு அந்த உடல் பெறும் தன்மை அடைந்து
விடுகின்றது.
ஆகவே, நாம் மனிதனானோம் மீண்டும் தேய்பிறை ஆகக்கூடாது.
ஒளியின் உணர்வை அறிந்து கொண்டபின் அருளொளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை
நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை - பிறவியில்லாத நிலைகள் அடைவதே இந்த உடலின்
முழுமை.
உயிரால் வளர்க்கப்பட்டது..., நான் யார்..,? உயிரால் வளர்க்கப்பட்ட மனிதனின் உடல்.
உயிருடன் ஒன்றியிருக்கும் பொழுது நான் என்று வருகின்றது. “நான் நானாக வேண்டும்”.
உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான்
“நான் நானாகின்றேன்”.
உயிர் நம்மை இயக்கும் பொழுது நான் ஆகின்றது. “நான்” என்ற சொல்லுக்கே உயிரே மூலமாகின்றது.
இதற்குள் அந்த உணர்வின் ஒளி எவ்வாறோ அதன் ஒளியின் தன்மையாக நமக்குள்:
வளர்த்தல் வேண்டும். அவனுடன் அவனாகி அவனாகவே (ஒளியாக) நாம் ஆவோம்.
இதைப் போன்று உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த
மகரிஷிகள் அடைந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.