ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 24, 2016

நமக்கு எதிரி ஏங்கிருக்கின்றான்...?

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் என்பதைப் பதிவாக்கிக் கொண்டால் அவனை எண்ணும் போது வேதனை உணர்ச்சிகள் தூண்டி அடுத்து அன்று நீங்கள் செயல்படுத்தும் காரியங்களுக்கு நீங்களே தடையாக ஆகிவிடுகின்றீர்கள்.

இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் இருந்து செயல்படுகின்றது. நமக்கு எதிரி எங்கிருக்கின்றான் என்றால் நமக்குள்ளே உண்டு. நல்லவர்களும் உண்டு, நல்ல குணங்களும் உண்டு.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

அதற்குத்தான் காலை துருவ தியானத்தில் உங்களுக்குள் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி நான் உபதேசிக்கும் உணர்வை கூர்மையாக உற்று நோக்கிப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இதை எவர் அதைப் பெறுகின்றனரோ அவர் உடல்களில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகும்.

இதை மீண்டும் நினைவுபடுத்தினால் அருள் ஒளியை நீங்கள் பெற்று உங்களுக்குள் இருள் சூழச் செய்யும் நிலைகளை நீக்கி உங்கள் மனதைத் தெளிவாக்கி உங்கள் உடலில் உள்ள அணுக்களைத் தெளிவாக்கி இந்த உடலை விட்டு நாம் சென்றபின் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைய முடியும்.

அந்தத் தன்னம்பிக்கை இருப்போர் இதை உற்று நோக்குங்கள்.

ஒருவர் ஏசிப் பேசிக் கொண்டிருக்கின்றான், பழி தீர்க்கின்றான் என்ற உணர்வை நாம் பதிவாக்கிக் கொண்டால் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்புக்குள் அது பதிவாகின்றது.

நிலத்திற்குள் மண்ணுக்குள் எப்படிப் பதிவாகின்றதோ இவை அனைத்திற்கும் பாதுகாப்பான நிலைகளில் எலும்புக்குள் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது ஊனாகி ஊனின் நிலைகள் கொண்டு அதற்குள் பதிவாகும் பதிவின் வித்தாக அது வைத்துள்ளது.

ஆக, மீண்டும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது இந்த உணர்வினை எண்ணினால் கருவிழியால் பதிவாகிவிடுகின்றது. மீண்டும் கருவிழியால் எண்ணப்படும் பொழுது உணர்ச்சிகள் உந்துகின்றது.

அதன் உணர்வு கொண்டு கருவிழியுடன் சேர்ந்த காந்தப்புலனறிவு அதைக் கவர்ந்து நுகரச் செய்கின்றது உணர்ச்சியின் தன்மை கொண்டு நம்மை இயங்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

ஆகவே, அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி இதை எவர் நினைவு கொள்கின்றனரோ தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் அருள் ஞானத்தின் உணர்வைத் தனக்குள் பெருக்க வேண்டும் என்று இந்த வாழ்க்கையில் எவர் ஒருவர் நுகர்கின்றனரோ வாழ்க்கையே தியானமாக்குதல் வேண்டும்.

இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் பதிவு செய்யும் நிலைகள் தீமைகளைக் கண்டுணர்ந்தால் அஞ்சும் நிலையை மாற்றிவிட்டு அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஓங்கி வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

பின், எங்கள் பார்வை மற்றவர்களை நல்லவராக்க வேண்டும் அவர்களை நல்ல நிலையில் செயல்படுத்த வேண்டும் என்று இந்த உணர்வினைக் கலந்துவிட்டால் நமக்குள் அந்த உணர்ச்சிள் வலுவாகி அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

அதே சமயத்தில் உங்கள் நினைவாற்றல் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் .இணையச் செய்யும். நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த அருள் ஞானத்தைக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் கஷ்டங்களையும் போக்கிவிடலாம்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.