ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2026

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள்

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள்

சாவித்திரி தன்  கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் 
 
சாவித்திரி நளாயினி கதைகளில் எல்லாம்
1.சாவித்திரி தன் கணவனையே பின்பற்றி நடந்தாள்
2.கணவன் எதைச் செய்தாலும் பின்பற்றி நடந்தாள்.
3.எமனிடமிருந்து கணவனை மீட்டினாள் என்றும் சொல்வார்கள்.
 
அப்படியல்ல…!
 
கணவன் மனைவி இருவருமே ஒன்று சேர்ந்து இந்த உணர்வின் தன்மையை எவரொருவர் கூட்டிக் கொள்கின்றனரோஇறந்தபின் அவருடைய உயிராத்மா இன்னொரு சரீரத்திற்குள் போகாது…”
 
நளாயினி கதையில் கணவனைக் கூடையில் தூக்கிச் சுமந்தாள் என்று சொல்வார்கள். எப்பொழுதும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்து அன்று ஞானிகள் சொன்னது. இதை விட்டுவிட்டார்கள்.
 
கூடையில் தூக்கிச் சுமந்தாள் என்று கதையைக் கட்டிவிட்டார்கள்.
 
1.அதற்காக வேண்டிக் கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டே தான் இருக்க வேண்டும் என்று அடிமைப் புத்தியைத்தான் காட்டி விட்டார்களே தவிர
2.கணவனும் மனைவியும் இருவரும் சேர்ந்து ஒரு நிலை பெறவேண்டும் என்று காட்டவே இல்லை.
 
அந்த வழியிலே நாம் விளைய வைத்துக் கொண்டது அடக்கி ஆளும் உணர்வே வந்து விடுகின்றது. நாம் அந்த உண்மையின் நிலைகளை எடுத்துக் கொள்ளும் நிலைகளில் இல்லை.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குச் சரியான முறையில் இந்தத் தியானத்தைச் செய்து ஆத்ம சுத்தியைச் செய்து உங்களுக்குள் வரும் துன்பத்தைப் போக்க வேண்டும்.
 
கணவரின் உயிராத்மா சூட்சுமமாக இருந்தாலும் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து.. மெய் ஒளியின் சுடராக்கி இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த ஒளியின் சரீரமாக மாற்ற முடியும்.
 
ஆகையினாலே தான்
1.கணவன் முன் சென்றாலும் அந்த மனைவியின் நிலைகள் இருவர் நிலைகளும் ஒரே நிலையாக எடுத்துக் கொண்டால்
2.பாசமான உணர்வுகள்சிவமான சக்தி இங்கே தாய்மையினுடைய உடலுக்குள் வந்து விடுகின்றது.
 
இப்பொழுது நாம் பேய் பிடித்து விட்டது என்று எப்படிச் சொல்கின்றோமோ இதைப் போன்று பெண்ணின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் பேய் பிடிப்பது ஜாஸ்தியாக இருக்கும்.
 
ஆண்களில் பெண்பாலினுடைய சக்திகள் அதிகமாகி அமில சக்திகள் அதிகமாக இருந்தால் தான் ஆண்களுக்குப் பேய் பிடிக்கும் நிலைகள் வரும்இந்த உணர்வின் ஆற்றல் பெரும்பாலும் பெண்களுக்கேதான் வரும்.
 
ஆகவே…
1.தன் கணவன் பால் மெய்யுணர்வின் தன்மையை மெய் ளியுடன் கவர்ந்து
2.சொர்க்கத்தின் தன்மையாக அவருடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
 
அப்படி இணைத்துக் கொண்டால் இந்த உயிராத்மா இறந்த பின் இந்த உடலுக்குள் வந்தபின்
1.எந்த மெய் ளியின் தன்மையைத் தனக்குள் கூட்டி வளர்த்தார்களோ
2.இந்த உடலுக்குள் நின்றே அதைப் பூஜிக்கும் நிலைகள் கொண்டு இந்த உயிராத்மா தனக்குள் ஐக்கியமாகி விடுகின்றது.
 
இவ்வாறு உயிராத்மாக்கள் ஐக்கியமாகி இரு நிலைகளிலும் உயிருக்குள் ஒளியின் தன்மை பெற்று அதன் வழி கொண்டு விண்வெளி செல்லும் மார்க்கத்தை அன்று ஆதிசங்கரர் சொன்னார்…”