
LEFT... RIGHT... MARCH...! ABOUT TURN...! என்றார் குருநாதர்
மேஜிக் செய்யக்
கூடியவர்கள் எப்படிச்
செய்கிறார்கள் அதனின்
உண்மை நிலை
என்ன…? என்பதை குருநாதர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார்.
ஒரு சில
தாவரங்களில் விளைந்த
வித்துக்களின் எண்ணெயை
ஊற்றி விளக்காக
எரித்தால் போதும்….! பாம்பெல்லாம் வீட்டில்
வரும். அதே
மாதிரி நரியின்
தன்மை கொண்டு
வந்தால் நரியாக
வரும்.
ஒரு ராட்சஷ
உருவின் தன்மை
கொண்ட உணர்வின்
தன்மை கொண்டு
அந்த எண்ணெயை
வைத்து வீட்டில்
விளக்கைப் பொருத்தினால்
போதும்.
1.உங்கள்
கண்ணிற்கு இதெல்லாம்
தெரியும்.
2.இப்படிப்பட்ட
சில வித்தைகளைக்
குருநாதர் காட்டினார்.
ஒரு உயிரணுவிலிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி/ஒளி அலைகளைச்
சூரியன் எடுத்துக்
கொண்ட பின்
இது எப்படி
விரிவடைகின்றது...? இப்படியும்
பல வித்தைகள்
உண்டு.
எனக்கு எப்படியெல்லாம்
இடைஞ்சல் செய்கின்றனர்...!
இரு.. நான்
பார்க்கிறேன்... என்று
அவர்களை வீழ்த்தவும்
முடியும்.
அந்த மாதிரிச்
சொல்லி குருநாதர்
ஒரு சமயம்
கண்ணுக்கு முன்னாடி
தெரியும் “இந்த
மரத்தை வீழ்த்துடா...!” என்றார்.
அவர் சொன்னதைச்
சொல்லிச் சொன்னவுடனே
மரம் தன்னாலே
விழுகிறது. விழுந்தாலும்
பரவாயில்லை... பறந்து
ஓடுகின்றது...!
அதே மாதிரிக்
காட்டுக்குள் ஒரு
சமயம் மிலிடரியைக்
(MILITARY) கூப்பிடுடா…! என்று
குருநாதர் சொன்னார்.
மிலிடரியைக் கூப்பிடுவதா…!
அது எப்படி
சாமி..? அவர்கள்
எப்படி இங்கே
வருவார்கள்…? என்றேன்
நான்...
1.அப்புறம்
குருநாதர் சொல்கிறார்...!
2.“லெஃப்ட்... ரைட்... மார்ச்... எபவ் டேர்ன்...
3.(LEFT... RIGHT... MARCH... ABOUT TURN...!) என்று அவர்
சொன்னார்.
அந்த மிலிடரி
(MILITARY) நடக்கும் பொழுது
அவர்கள் பயிற்சி
செய்யும் பொழுது
1.அந்தப்
பூட்ஸ்... அடி... எப்படி விழுகும்...?
2.அதே
மாதிரி “அடி...!” விழுகிறது. சப்தம் கேட்கிறது….!
3.ஃபாலோ...!
(FOLLOW...!) என்று சொல்கிறார்.
இப்பொழுது நீ
போய்ப் பார்...!
1.என்ன
செய்ய வேண்டும்
என்று கட்டளையிடு…!
2.என்ன
செய்கின்றது...? பார்...!
3.ஆளையே
தூக்கிக் கொண்டு
போகும் பார்
என்றார்.
இதே மாதிரி “லெஃப்ட்... ரைட்... மார்ச்... எபவ்
டேர்ன்... (LEFT... RIGHT... MARCH... ABOUT TURN...!) என்று சொல்கிறார்.
அவர் சொன்னவுடனே
இந்த பூட்ஸ்
அடி சத்தம்
கேட்கிறது. ஒரு
பெரிய கல்
அப்படியே… “பறந்து
போகிறது….!”
ஏனென்றால் “உயிரணுக்களின்
அடக்கமும்... அது
சூட்சம நிலை
அடைந்தபின்... இந்த
உணர்வின் தன்மை
கொண்டு கல்
அது பறக்கின்றதைப்
பார்த்தால்... “உனக்கு
ஆச்சரியமாக இருக்கும்...! என்று சொன்னார்
மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர்.
ஒரு சமயம்
டெல்லியில் பழைய
கோட்டைக்குப் போகச்
சொன்னார். போனேன்.
சுவர் ஒரு 20 அடி உயரம்
இருக்கும். அந்தப்
பக்கம் பள்ளம். பெரிய பெட்ஷீட்டைப்
போட்டு விரித்திருக்கிறார்கள்.
அங்கே என்ன
செய்கிறார்கள்…? என்றால் ஒரு மேஜிக்.
அப்படியே ஒரு
துணியைப் போட்டு
விரித்து அதில்
ஒரு மனிதனைப்
படுக்க வைத்திருக்கின்றான்.
இந்த கோட்டைச்
சுவர் (சுமார் 20 அடி உயரம்) வரையிலும் அப்படியே
தூக்குகின்றான். மறுபடியும்
கீழே இறக்கிக்
காட்டுகிறான். “காசைப்
போடுங்கள்...! என்கிறான். அது மேலேயே
போடுகிறார்கள்.
பிறிதொரு ஆவியின்
உணர்வுகளை எடுத்து
இந்த உடலுக்குள்
பாய்ச்சி அவனை
எப்படி மிதக்கச்
செய்றான்...? பார்..! என்று சொன்னார்
குருநாதர்.
அப்பறம் நான்
விளையாட்டுக்காக வேண்டிக்
கொஞ்ச நேரம்
உற்றுப் பார்த்தவுடனே
உயரமாக எழுந்திரிக்கவில்லை.
1.அவன்
என்னென்னமோ செய்து
பார்த்தான்…!
2.”மேலே
வரவில்லை” என்று சொன்னவுடனே அவன்
பாட்டுக்கு மூட்டையைக்
கட்டிக் கொண்டு
போய்விட்டான்.
முதலில் என்ன
செய்கிறான்...? என்று
பார்த்துக் கொண்டு
இருந்தேன். அடுத்து
குருநாதர் சொன்னபடி
செய்தவுடனே அது
பறக்கவில்லை. மூட்டையைக்
கட்டிக் கிளம்பி
விட்டான்.
இது மாதிரிச்
சில அற்புதங்கள்
செய்யலாம்.
இந்த மாதிரிச்
சக்தியை உங்களிடம்
கொடுத்தால் என்ன
செய்வீர்கள்...? எல்லாவற்றையும்
தட்டிப் பார்த்து
விடுவீர்கள்.
1.மனிதன்
குறுக்கு வழியில்
போக வேண்டும்
என்றால்
2.எது
வேண்டுமானாலும் தன்
புகழுக்காக இதைச்
செய்ய முடியும்.
3.தன்னை
அனைவரும் போற்றும்
நிலை வரும்.
நீங்களும் இதைச்
செய்ய முடியும். ஆனால் கடைசியில்
என்ன நடக்கும்...?
பார்...! இதை எங்கள் சாமி
எல்லாம் சொல்லி
கொடுத்தார். நான்
செய்கின்றேன் பார்…! என்று மற்றவர்களை
உங்கள் வசப்படுத்துவதற்காக வேண்டி உங்கள் ஆசை
குறுக்குப் புத்தியாகப்
போய்விடும்.
சாமி சொல்லிய
மெய் ஞானத்தையும்
மகரிஷிகளின் ஆற்றல்களையும்
எடுப்பதற்குப் பதில்
இதற்குள் போய்விடுவீர்கள்.
அதனால் இதைத்
தொட்டுக் காண்பித்து
இந்த உணர்வை
விட்டு விடுகின்றேன்.
குருநாதர் காட்டிய
நிலைகளில் மந்திரவாதிகள்
செய்யக்கூடியதைச் செய்யலாம்.
1.மந்திரம்
செய்தால் நீங்கள்
எங்கே போவீர்கள்..?
2.மீண்டும்
இந்தக் குண்டுச்
சட்டிக்குள் குதிரை
ஓட்டிக்கொண்டு இருக்க
வேண்டியது தான்...
3.மனித
நிலையிலிருந்து மாறி
இம்சைப் பட
வேண்டி நிலை
வந்துவிடும்.
4.கடைசியில்
ஒருவன் கையில்
கைவல்யப்பட வேண்டிய
நிலைக்குத்தான் செல்ல
முடியும்.
5.வேறு
எந்தப் பலனும்
இல்லை.
இந்த மனித
உடலை விட்டு
நம் உயிராத்மா
சென்றால் அந்த
மெய் ஞானிகள்
எப்படி ஒளியானார்களோ
அந்த ஒளியின்
தன்மையை நாம்
பெறுதல் வேண்டும். இது தான்
மிகவும் முக்கியம்...!
1.உலகில் நம்மை
ஏமாற்றும் எத்தனையோ
நிலைகளை நீங்களும்
அறிந்து அதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.
2.விடுபட்டு
மெய் ஒளி
மெய் ஞானம்
நீங்கள் பெற
வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கின்றோம்.