
சுழிக் காற்று பற்றிய முக்கியமான உண்மை
கிராமப்புறங்களில்
சில இடங்களில் பார்க்கலாம்… சுழிக் காற்றுகள் சுழன்று வரும். மனிதன் இருக்கும் பக்கம் அது வரப்படும் பொழுது அதில் சிக்கினால் அதைச் சுவாசிக்கும்
பொழுது… பின்னாடி பார்த்தால் காக்கா வலிப்பு போன்று வரத் தொடங்கிவிடும்.
இத்தகைய
உணர்வு வரப்படும் பொழுது சில உடல்களில் தாக்கினால் ஆவிகள் ஆடத் தொடங்கும்.
1.ஏனென்றால் மனிதனில் உருப்பெற்ற இந்த உணர்வுகள் மிகச் சக்தி வாய்ந்த நிலை.
2.அது சுழன்று வருவதைப் பார்த்தால் அதிலிருந்து நாம் விலகிச் செல்வதே நல்லது.
மந்திர
ஒலிகளால் உருவாக்கப்பட்டு அதன் வழி மடிந்த இந்த ஆன்மாக்கள் வந்தால் இத்தகைய
நிலையாக வந்து விடும்.
ஒரு
சமயம் பூலாங்கிணறு என்ற இடத்திலே நான் சுற்றுப்பயணம் வரும் பொழுது அங்கே ஒரு பெண்ணுக்கு
ஆவி பிடித்துள்ளது. எங்கே கூட்டிச் சென்றாலும்
ஒன்றும் முடியவில்லை என்றார்கள்.
அந்த
இடத்திலே எமக்குக் காட்டுகின்றார் குருநாதர்.
1.எம்முடன் இருக்கும் பொழுது குரு உபதேசித்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
2.இது எத்தகைய ஆவியாக இருக்கும்…? என்று எண்ணும்
பொழுது
3.ஏவல் பில்லி சூனியத்துடன் செயல்பட்டு அதனால் மடிந்த ஆவியின் உணர்வலைகள்
4.எவ்வாறு அந்தப் பெண்ணின் உடலுக்குள் சுழல்கிறது…?
என்ப்தனை எம்மை அங்கே அறியும்படி செய்கின்றார்.
இது
எல்லாம் சந்தர்ப்பத்தில் வருவது தான்... எல்லா
இடங்களிலும் இதைக் காண முடியாது.
உற்றுப்
பார்த்த உடனே கிறு… கிறு…
என்று ஒரு சுழல் காற்று வருகின்றது. அங்கே அருகில் இருந்த
வாழை மரக்கன்றுகள் துணிமணிகள் அனைத்தையும் தூக்கிச் சென்று விட்டது. அந்த வீடும் ஓட்டு வீடு.. ஓடுகளையும் தூக்கிச்
சென்று விட்டது.
இந்தப்
பெண் படுத்த இடத்தை விட்டு நகரவே நகராது. அது
படுக்கையிலே தான் இருக்கும். வீட்டின் ஓடுகளை எல்லாம்
தூக்கிச் சென்றவுடன்… எழுந்து உட்கார்ந்து சுயநினைவுடன்
வருகின்றது.
1.இந்த ஆவிகளில் பல விதம் உண்டு என்று குருநாதர்
காட்டுகின்றார்
2.அதிலே மந்திரத்தால் தாக்கப்பட்டு அந்த உணர்வுகள் எதிர்மறையானால் இத்தகைய சுழல் காற்றுகள் வரும்.
மனிதன்
மேல் வெறிகொண்டு சென்றால் இத்தகைய ஆவிகள் பரவும் இடங்களில் வெள்ளாமையும் சரியாக இருக்காது. குடும்பத்திலும் பல தொல்லைகள் ஏற்படும்.
இதெல்லாம்
எப்படி வருகிறது…? என்று தெரியும்படி குருநாதர் உணர்த்துகின்றார். அந்த இடத்தில் இதற்கு மாற்று வழி செய்யாது விட்டுவிடு என்றார். விட்டவுடன் அந்தப் பெண்ணின் உடலில் மறுபடியும் வருகின்றது.
உடனே
விறைத்தது போன்று படுக்கின்றது. மறுபடியும்
குருநாதர் சொன்ன முறைகளை எண்ணத்தால் எண்ணி எதிர் அலைகளைப் பாய்ச்சப்படும் பொழுது
மறுபடியும் அதே சுழல் காற்று வருகின்றது.
அக்கம்பக்கத்தில்
எல்லாம் இருக்கும் எல்லாவற்றையும் வேகமாக அடித்து நொறுக்குகின்றது.
பின் அந்த உடலில் மீண்டும் வராதபடி கட்டுப்படுத்த குருநாதர் சொன்ன
முறைப்படி ஒலிகளைப் பாய்ச்சினேன்.
1.அந்தப் பெண்ணின் உடலில் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று
2.கொஞ்சம் அதிகமாகவே எடுத்து நீ சொல்லிக் கொண்டே இரு என்றார்.
அவ்வாறு
சொல்லிக் கொண்டே இருந்தபின்… ரொம்ப நேரம்
வரையிலும் வெளியிலே அடித்து விளாசுகின்றது. பக்கத்தில்
இருக்கும் வீடுகளை எல்லாம் தூக்கிச் சென்று விட்டது. அங்கே
இருப்பவர்கள் எல்லாம் பயந்துவிட்டார்கள்.
பின்
அதற்கு என்ன செய்வது…? என்று சிலதுகளைச் செய்தேன். அந்த அம்மாவிற்கு வயது அப்பொழுது 60. ஆனால் இளமையிலிருந்து
இதனுடைய தாக்குதல் இருந்திருக்கின்றது.
இது
போன்று சில ஆவியின் சேஷ்டைகள் மனித உடலில் இருந்து அதைக் கெடுக்கச் செய்யும். மற்ற தாவர இனங்களில் இணைவதில்லை.
1.இந்த ஆவி மீண்டும் மனித உடலுக்குள் புகுந்தது என்றால் புலியின் ஈர்ப்பு
வட்டத்திற்குள் சென்று கொடூர மிருகமாக மாறும்.
2.ரத்தத்தை உணவாக உட்கொள்ளும் ஆவியின் நிலை அடைகின்றது.
குருநாதர்
இதையெல்லாம் காட்டுகின்றார். நகருக்குள்ளும்
மலைப் பகுதிகளுக்குள்ளும் சென்று இயற்கையின் உண்மை நிலைகள் எவ்வாறு இயங்குகிறது…? என்ற நிலையை அறிந்து அதன் வழி சில உண்மைகளை அறியக்கூடிய நிலை வந்தது.
இதை
யாம் தெரியப்படும் பொழுது
1.உங்களுக்குள் உபதேசித்தால் கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்தது போன்று
ஆகின்றது.
2.செவி வழி இந்த உணர்வுகளை ஓதும் பொழுது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப்
பதிவாகிறது.
சந்தர்ப்பத்தில்
ஏதாவது இப்படி அசம்பாவிதங்கள் வந்தால் இந்த உண்மையை அறிய முடிகின்றது.
அடுத்த கணம் தியானத்திலே அந்த உயர்ந்த சக்திகளை எடுத்துத் துருவ
நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து அதனுடன் இணைக்கப்படும் பொழுது இத்தகைய
சந்தர்ப்பங்களையும் நாம் மாற்றி அமைக்க முடியும்.
ஏனென்றால்
மனித வாழ்க்கையில் எத்தனையோ கொடூரமான நிலைகள் கொலை கொள்ளை நடக்கின்றது. அதனால் தாக்கப்பட்டு உயிர்கள் மடிகின்றது. அந்த
உணர்வலைகள் அங்கே படர்கின்றது.
மனிதனுக்குள்
இது சாடியபின் மனிதன் தன் செயலிழந்து இயங்குவதை நாம் காண முடிகின்றது. இதைப் போன்ற நிலையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான்
இதனை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
மனிதரிலிருந்து
வெளிப்பட்ட இத்தகைய ஆவிகள் அது படர்ந்துள்ளது. மனித
உடலுக்குள் புகுந்து பேயாக மாறி மடிந்த பின் உணர்வுகள் மாற்றப்பட்டு மனித
உடலுக்குள் புகாது மனித உணர்வுகள் தணிந்தபின் மிருக உணர்வுகளாக மாறி விடுகின்றது.
மிருகங்களிலோ
பட்சிகளிலோ இணைந்து அதன் கருவாக மாறி உருமாற்றி விடுகின்றது. உயிர் அழிவதில்லை… ஆனால் உடல்கள் மாறுகின்றது.
இந்த
உயிர் இருக்கும் போது அதற்குள் கலந்து கொண்ட உணர்வுகளுக்கொப்ப உடல் பெறவில்லை
என்றாலும் இத்தகைய ஆவித் தன்மைகள் சில இடங்களில் அதிகமாகவும் உண்டு.
ஒரு
உடலுக்குள் சென்று அந்த உணர்வுகள் அந்த உடலை அழித்து விஷத்தன்மையான அணுக்களை உருவாக்கி
அது வளர்ச்சி பெற்ற நிலையில் அந்த உயிர் அதற்குத் தக்க உடலுக்குள் சென்று உடல்களை
மாற்றி விடுகின்றது என்பதனைத் தெளிவாக உணர்த்தினார்
குருநாதர்.
எல்லோரும்
இந்த உண்மையின் உணர்வை உணர்ந்து
1.மனிதனான நாம் உடலை விட்டுச் சென்றால் கீழான நிலைகளுக்குச் சென்று
பிறக்காமல்
2.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையை அடைதல் வேண்டும்.