
பூர்வ புண்ணியம்
ஆடு
மாடுகளுக்கு அந்தந்தக் காலங்களில் இரை போடுகின்றோம். 3 மணிக்கு
இரை போட்டுப் பழக்கினால் மணி 3 என்று தெரிந்து கொள்ளும்.
1.அந்த
உணர்வுப்படி அது சத்தம் போட ஆரம்பித்துவிடும்.
2.யார்
இரை போட்டாரோ அவர்களை எண்ணி உணர்வை வெளிப்படுத்துகின்றது.
இரை போடும்
பொழுது சொல்வதையெல்லாம் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றது. அவர்களை அணுகி
வருகின்றது. ஆனால் ஒருவர் இதை மிரட்டி இருந்தார்களென்றால் அவர்கள் வரும் பொழுதே இது
மிரளுகின்றது. இந்த உணர்வுகள் அவர்களை இயக்குகின்றது. யார் மேல் பாசமாக
இருக்கின்றதோ அந்த உடலுக்குள் பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது.
ஆனால் மனிதனாகி
இருக்கும் நாம் ஒரு மனிதனின் நிலைகளில் பாசமாக இருக்கின்றோமென்றால் இந்த உடலை விட்டுச்
சென்றபின் அவர்கள் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் யார்
மேல் பாசமாக உள்ளோமோ அவர்கள் உடலுக்குள் தான் செல்லும்.
மனித உடலில்
இருக்கும் போது எந்த நோய் இருந்ததோ அந்த நோயை அங்கே உருவாக்கத் தொடங்கிவிடும்.
மனிதனின் முதிர்ச்சி பெற்ற இயக்கங்கள் அதை இயக்கி அதை மாற்றியமைக்கச் செய்கின்றது.
ஏனென்றால் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த நிலை அடைந்தவர்கள்.
ஆடு
மாடுகளுக்கு எப்படி நாம் சொல்லும் போது உணர்வின் தன்மை பதிவாகின்றதோ அதைப் போல
1.தாய்
கருவிலே இருக்கப்படும் போது பாசத்தால் அன்பால் பிறர் படும் கஷ்டங்களை
2.நோய்வாய்ப்பட்டவர்கள் உணர்வுகளை சண்டை போடுகின்றவர்கள் உணர்வுகளை
வெறுப்பான உணர்வுகளை
3.ஒன்றிலிருந்து
தொண்ணூறு நாள் அந்தக் கரு வளர்ச்சியாகும் பொழுது தாய் கண்ணால் பார்க்கப்படும்
பொழுது
4.கருவின்
உயிரணு தாய் எதை உற்றுப் பார்த்ததோ அதனின் ரூபமாக அது கவரத் தொடங்கிவிடும்.
அது அதனுடன்
இணைந்து விட்டால் அதில் ஒருவருக்குப் புற்று நோய் இருந்ததென்றால் அவருக்கு 40 வயது
இருந்தது என்றால் “அதிலே விளைந்த இந்த செல்…” கருவிலே இருக்கும். குழந்தைக்கு அதே 40வது வயதில் புற்று நோய் வரும்.
ஆஸ்துமா நோயை
உள்ளவரைத் தாய் பார்த்திருந்தால் அந்த உணர்வின் தன்மை கருவிலே பதிவாகி 40 வயது
வரையிலும் ஆஸ்துமா இருக்காது. 40 வயதுக்கு மேல் ஆஸ்துமா
வரும்.
அதே மாதிரிக் குடும்பத்தில்
என்னென்ன சண்டை போட்டார்களோ அதைக் கேட்டிருந்தால் இந்தக் குழந்தையின் கருவிலே
பதிந்து அதனுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதனுடைய வளர்ச்சியில் அதே சண்டை போடும்
உணர்வுகள் வரும்.
ஒரு
கண்ணில்லாத குழந்தையை அதனுடைய உணர்வுகளை நுகர்ந்து குறைகளைச் சொல்லிக்
கொண்டிருந்தால் அதே உணர்வுகள் குழந்தையின் உடலிலே கருவிலே இருக்கும் போது விளையாடப்படும்
போது அதன் வளர்ச்சியைத் தடைப்படுத்திக் கண்ணுக்குண்டான சத்தைத்
தடைப்படுத்தும்.
மனிதனின்
வளர்ச்சியில் இப்படியெல்லாம் பல உண்டு.
முடமாக இருப்பவனை
அதிகமாக நேசித்தாரென்றால் அதே உணர்வுகள் கருவிலே சேர்ந்து அணுக்கள்
விளையத் தொடங்கி அந்தக் காலம் வரும் போது உணர்ச்சியைத் தூண்டும்.
நாம் செடி
கொடிகளுக்கு உரமிடும் போது அதனுடன் இணைந்து எவ்வாறு விளைகின்றதோ இதைப் போலத்தான் கருவிலே
வளரும் குழந்தைகளுக்கு வருகின்றது.
குடும்பத்தில்
மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் அந்தக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் அதிகமாக
இருக்கும். இருந்தாலும்…
1.கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது யாராவது ஒருவர் உயர்ந்த குணங்கள் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது
2.கடைவீதிகளிலோ
மற்றவைகளிலோ வேடிக்கை பார்க்கச் செல்கின்றது.
3.அந்த
உயர்ந்த சொல்களைக் கர்ப்பமாக இருக்கும் தாய் கேட்டது என்றால் அந்தக் குழந்தை கருவிலே விளைந்த பின்
4.வீட்டிலே
மிகவும் தரித்திரமாக இருப்பார்கள்… ஆனால் இது ஞானக் குழந்தையாக வளரும்.
சில
குடும்பங்களில் மிகவும் ஏழையாக இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் உயர்ந்த உணர்வுகள்
அதற்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அந்தக் குழந்தை ஞானியாக
உருவாகும்.
1.நமது
வாழ்க்கையில் இன்றைக்கு எவ்வளவு திறமை உள்ளவராக நாம் இருந்தாலும்
2.தாய்
கருவிலிருக்கும் போது பெற்ற பூர்வபுண்ணியமும் இணைந்தே
வருகின்றது.
இதை நாம்
தெரிந்து கொள்ள வேண்டியது
மிக அவசியம்.