ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2026

நஞ்சாக எது வந்தாலும்… அது எனக்குள் ஒளியின் அறிவாக மாற வேண்டும் ஈஸ்வரா

நஞ்சாக எது வந்தாலும்… அது எனக்குள் ஒளியின் அறிவாக மாற வேண்டும் ஈஸ்வரா


ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…” என்றால் ஆதியில் விஷத்தின் தன்மை வலிமையாகும் பொழுது தாக்குதலில் வெப்பமும் காந்தமும் உருவாகி ஒரு இயக்கச் சக்தியாக மாறியது.
 
நமது உயிரும் அவ்வழியிலே சக்தியாக உருவானாலும்
1.நமது உயிரின் இயக்கம் எதிர் நிலையாகி
2.ஆதி சக்தியின் அருள் பெற்று அனைத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.
 
அதனால் தான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா…!
 
எல்லாவற்றையும் உணர்வின் அறிவாகத் தெரிந்து நடக்கும் அறிவின் உணர்வாக எனக்குள் நீ எப்படி அறிவிக்கின்றாயோ அதைப்போல இருளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
 
1.நஞ்சன்ற நிலைகள் வரப்படும் பொழுது அதன் தாக்குதலால் ஒளியான பின்
2.எந்த நஞ்சு என்றாலும் உணர்வின் தன்மை எனக்குள் ஒளியின் அறிவாக மாறுதல் வேண்டும்.
 
விஷத்தின் தன்மை தாக்கினாலும் சூரியன் தனது பாதரசத்தால் மோதி வெப்பத்தின் தன்மை கொண்டு அந்த விஷத்தை எப்படிப் பிரிக்கின்றதோ இதைப் போல உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி உணர்வின் அறிவாக நான் தெளிவாக வர வேண்டும்…” என்பதுதான் ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா.
 
இப்படி ஏங்கி அந்த அருள் உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வின் அறிவாக நம் உயிர் நம்மை இயக்கும்.
 
ஆனால் வேதனை என்ற உணர்வினை நுர்ந்தால் வேதனை உணர்வின் அறிவாக வேதனைப்படுபவனாக நம்மை மாற்றிவிடும்வேதனைப்படும் தன்மையைத் தான் உடலில் உருவாக்கும்.
 
வேதனையான அணுக்கள் உடலில் உருவான பின் இந்த உடலைச் சிறுக்கச் செய்யும். உடல் சிறுத்த பின் உறுப்புகள் சிறுக்கின்றது. உறுப்புகள் சிறுத்த உணர்வு கொண்டு மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் அத்கைய உடலாக உயிர் உருவாக்கி விடும்.
 
ஆதி சக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா கருணைசொரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா.
1.நீ ஒளியாக இருக்கின்றாய் அதைப்போல என் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக ஒளியின் மயமாக
2.இருளை விலக்கிச் செல்லும் சக்தி நான் பெற வேண்டும் என்பது தான் இந்தப் பாடலின் உள்நோக்கம்.
 
என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்…!
 
நான் எதை எண்ணுகின்றேனோ அந்த உணர்வின் செயலாக என்னை இயக்குகின்றாய். எப்போதுமே நீ அறிவாக இயக்கித் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் உயிராக நீ இருப்பதனால்
1.உன் நினைவு எப்படி இருக்கின்றதோ எதனின் உணர்வை நீ அறிவிக்கின்றாயோ
2.அதைப் போல தெளிந்த மனம் பெறும் அந்த உணர்வின் இசை எனக்குள் வரவேண்டும்.
 
என் சொல்லைப் பிறர் கேட்கப்படும் பொழுது இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெறுதல் வேண்டும். எதன் உணர்வை நான் நுகர்கின்றேனோ இருளை நீக்கிடும் அருளைப் பெறும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
 
து தான் என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்.
 
நீ எப்படி ஒளியாக இருந்து உணர்வின் தன்மை அறிவாக அறியும் ஆற்றலை எனக்குள் தெளிவாக்குகின்றாய அதன் வழி…
1.என் உணர்வு
2.என் நினைவுகள் அனைத்தும்
3.என் உடலின் அணுக்களும் அவ்வழியே
4.உன்னைப் போன்றே ஒளியாக மாற வேண்டும் என்பதுதான்
5.என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய் உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்து விட்டேன் என்பதன் பொருள்.
 
எப்படி உலகையெல்லாம் அறியும் தன்மையாக நீ அறிவிக்கின்றாயோ இதைப் போல
1.உலக இருளை நீக்கிடும் ஒளியின் உணர்வாகப் பெறப்படும்  அனைத்தையும் உன்னிடமே விட்டு விடுகின்றேன்…”
2.அந்த அருளால் நீ என்னை இயக்குவாய் இருளை அகற்றிடும் அரும்பெரும் சக்தியாக மாற்றுவாய்.
 
அந்த நிலை தான் எனக்கு வேண்டும்.
 
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா. நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் என்றால் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் நான் ஏது…? உயிர் இல்லாத உலகில் நாம் வாழவே முடியாது உடல் நிலையாக இருப்பதில்லை.
 
எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்றால் இந்த உயிர் எத்தனை வகை உடல்களைப் பெற்றதோ உடலைக் காக்கும் சக்தியினைப் பெற்றுத் தான் வளர்ந்து வந்தது.
 
அந்தந்த உடலைக் காக்க வேண்டும் என்று உணர்வின் தன்மை கொண்டு மனிதனான நிலையில் இந்த உடலைக் காக்கும் சக்தி பெற்றுள்ளது.
 
தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மை பெற்ற பின் தீமையை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். ஒவ்வொரு உடலிலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வினை நுகர்ந்தோம்.
 
1.அந்தத் தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக அமைத்தாய்.
2.இதைப்போல எல்லா உடல்களில் இருந்தும் தீமைகளை நீக்கிய அந்த அரும் பெரும் சக்தி எனக்கு வேண்டும்.
 
காரணம்… இந்த வாழ்க்கையில் எல்லாவிதமான உணர்வுகளும் வருகின்றது அந்தத் தீமைகள் நம்மைத் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து விடுபடும் இந்த அருள் சக்தி பெற வேண்டும்.
 
ஒவ்வொரு உடலிலும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்து உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி எப்படி அடைந்ததோ தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை முழுமை அடைந்த நான் கடந்த கால நினைவுகள் கொண்டு தீமைகள் வராது தடுக்கும் அந்தப் பேரருளை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…”
 
பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் ரிபக்குவ நிலையை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
 
நம் குழந்தையைச் செல்லமாக வளர்ப்போம். செல்லமாக வளர்க்கும் போது அந்த உணர்வுக்குத் தக்க அவன் தவறு செய்வான். அப்பொழுது அவனைப்ரிபக்குவமா நிலைகள் கொண்டு திருந்தி வாழச் செய்ய வேண்டும்.
 
ஆனால் பக்குவம் தவறினால் அவனுடைய தீமை நமக்குள் விளைந்து அவனைத் தொலைந்து போடா…” என்று தான் சொல்ல வரும். அவனைக் காப்பதற்கு மாறாகச் சாபமிட்டு அவன் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்யும் தன்மையும் அதனால் வெறுக்கும் தன்மை தான் வருகின்றது.
 
என் பையனுக்கு அப்படிச் செய்தேன்… இப்படிச் செய்தேன் ஆனால் இப்படி இருக்கின்றானே…! என்போம். கோவிலுக்குச் சென்று உனக்கு இத்தனையும் செய்தேனே உன்னை நான் தினமும் வணங்கிக் கொண்டு வருகின்றேனேஎன் குழந்தை தவறு செய்கின்றானே…! என்று தான் எண்ணுகின்றோம்.
 
ஆனால் அந்தக் கோவிலில் காட்டப்பட்ட நல்ல குணங்களை அந்தத் தெய்வீக பண்புகளை என் குழந்தை பெற வேண்டும் என்ற இந்த உணர்வு மட்டும் நமக்கு வருவதில்லை.
 
1.சாமியிடம்  முறையிட்டுக் குறைகளைச் சொல்லி நீ செய் என்று தான் சொல்கின்றோமே தவிர
2.அவன் அறியாமல் செய்யும் தீமை நமக்குள் வராதபடி அவனும் திருந்தி வாழ வேண்டும் என்ற நிலை வருவதில்லை.
 
ஒருவர் நம்மிடம் பணம் கேட்டிருப்பார் நாம் கடன் கொடுத்து உதவி செய்திருப்போம். ஆனால் அவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்றால் எல்லா கையிலும் அவன் தீமை செய்கின்றான் என்று தான் சொல்ல முடிகிறது.
 
சரிஏதோ சந்தர்ப்பத்தால் அவனால் கொடுக்க முடியவில்லை…! அவனுக்கு அந்த வலுவான நிலையில் வருமானம் வர வேண்டும். தெளிந்த மனம் பெற்று தொழிலில் முன்னேற்றம் அடையும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு அவனை ஊக்குவிக்கும்.
 
அவன் சோர்வு வேதனையாக நமக்குள் வராதபடி அப்போது தடுக்கப்படுகிறது. வன் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நல்ல வளர்ச்சி பெறும் தன்மை வந்தால்
1.நமக்குள்ளும் நல்லது நடக்கின்றது.
2.இந்த உணர்வுகள் அவரைச் சிந்திக்கவும் செய்கின்றது.
 
நல்ல நிலையில் வாழ வேண்டும் அந்த அன்பு பெருக வேண்டும் தொழில் முன்னேற்றம் அடைவீர்கள் என்று சொல்லிப் பாருங்கள். இந்த ஊக்கத்தால் பணம் திரும்ப வரும்.
 
ஆனால் சகஜ வாழ்க்கையில் கடன்காரனைப் பார்த்த பின் வாங்கிய பணத்தை இவன் கொடுப்பானா…? என்று எண்ணும் பொழுது அவன் நம்மைப் பார்த்த பின் உடனே பொய் பேசத் தொடங்குவான்.
 
பணத்தைத் திரும்பக் கொடுக்கலாம் என்று தான் வந்தேன் ஆனால் அதற்குள் பையன் பணத்தை வாங்கிச் சென்று விட்டான். எனக்கு வர வேண்டிய பணத்தைத் தருகிறேன் என்று சொன்னார்கள்ஆனால் அவர்கள் தரவில்லை என்று தான் பொய் சொல்வார்கள்.
 
காரணம்… இந்தப் பக்குவம் தவறும் பொழுது நமது வாழ்க்கையும் யாருக்கு நாம் பணத்தைக் கொடுத்தோமோ அவர்கள் வளர்ச்சியும் நம்மால் தடைப்படுத்தப்படுகின்றது.
 
அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்… என்று சொல்கிறோம்.
 
நான் எல்லோருக்கும் நன்மை செய்தேன். பார்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்று நிலையைத்தான் நாம் சொல்ல முடிகின்றது.
1.ஆக சோதிப்பது யார்…?
2.நமது எண்ணம்தான்.
 
எதன் உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றதோ அந்த உணர்வின் தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த வாழ்க்கையில் எந்த நிலையைச் செய்தாலும் பக்குவமா நடந்து கொள்ளும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்.
 
ஒரு கம்ப்யூட்டரில் தப்பு என்ற நிலைகள் வந்தால் உடனே அதைத் திருத்தும் நிலை அங்கே வருகின்றது.
 
இதைப் போன்று தான் நம் உயிரிலே படும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். உயிரிலே பட்ட பின் அந்த உணர்வு தவறு என்ற நிலைகளை உணர்த்துகின்றது.
1.ஆனால் அந்தத் தவறிலிருந்து திருந்தி நல்ல வழி வர வேண்டும் என்ற உயர்ந்த உணர்வை எடுத்தால்
2.நமக்குள்ளும் நன்மையாகின்றது அவர்களையும் நல்லதாக்ச் செய்கிறது.
 
இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
 
என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா.
 
இந்த உடல் ஆசை எனக்குள் வளராதபடி என்னுள்ளே இருந்து விடு ஈஸ்வரா.
1.நீ ஒளியாக இருக்கிறாய் இந்த உணர்வின் தன்மை என் உணர்வெல்லாம் ஒளியாக மாற்ற வேண்டும்.
2.நீ ஒளியாக இருப்பது போன்று என் உணர்வெல்லாம் ஒளியாக இருத்தல் வேண்டும்.
 
உடல் ஆசை வராதபடி உயிர் ஆசை வேண்டும் என்றுஉயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்த ஒளி என்ற தன்மை வரப்படும் பொழுது இருள் அண்டிடாது ஒளியின் உணர்வாகப் பெருக முடியும்.
 
ஆக மொத்தம் உயிர் நாம் எண்ணியதைத்தான் உருவாக்குகின்றது. நாம் இப்பொழுது எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த எண்ணங்கள் அனைத்தையும் கருவாக்கி அதுவாக நம்மை உருவாக்குகின்றது.
 
உயிரான ஈசனிடம் வேண்டியபடி…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியின் தன்மை பெற்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான உணர்வை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றோம் என்றால்அகஸ்தியன் அகண்ட அண்டத்தின் உணர்வைக் கண்டறிந்து இருண்ட உலகை நீக்கி ஒளி என்ற அறிவாக அந்தத் தெளிந்த நிலைகள் அவன் மனைவிக்கு ட்டியதை
1.இருவருமே அதைக் கருவாக்கி ஒன்றென இணைந்து அந்த ஒளியான உணர்வுகளை
2.துருவத்தில் இருந்து வரும் ஒளியின் கதிர்களை நாம் அனைவரும் பெறுவோம்.