
தற்கொலை செய்த ஆன்மாவைக் கூட நாம் விண் செலுத்த முடியும்
நம் முன்னோர்களின் உயிரான்மக்களை இதற்கு முன்
விண் செலுத்தவில்லை…
பழகவில்லை. ஆகையினால் அந்த உயிரான்மாக்கள் இன்னொரு உடலில் இருக்கும்.
அப்படி… மற்ற உடலில் இருந்தாலும்
1.அவர்களை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி விண்ணிலே
2.சப்தரிஷி மண்டலத்துடன்
இணைய வேண்டும் என்ற உணர்வலைகளைப் பாய்ச்சப்படும் போது
3.எந்த உடலுக்குள் இருந்தாலும் இந்த உணர்வுகள் அங்கே வட்டமிடும்.
ஏனென்றால் அவர்கள் உணர்வு தான் நமது உடல். ஒரு நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அந்த உணர்வுகள் விக்கலாகப் பாய்கிறது. இதே போல உடலை விட்டுப் பிரிந்தவர்கள் இன்னொரு உடலில் இருந்தாலும் “நாம்
செலுத்தும் உணர்வுகள் அங்கே போய் இயக்கும்…”
அந்த உடலில் ஆவியாகத்தான் இருக்கும். ஆனால் “மனிதனல்லாத
உடலுக்குள் சென்று விட்டால்… நாம் ஒன்றும் செய்ய முடியாது…!”
பொதுவாக… இறந்த பின் யார் மீது பற்றிருக்கின்றதோ அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்கின்றது.
1.உடலுக்குள் சென்றாலும் ரத்த நாளங்களில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.
2.நாம் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணினால்
3.எந்த உடலில் இருக்கின்றார்களோ
அந்த உடலுக்கு முன்னாடி நம்முடைய
உணர்வுகள் சுற்றும்.
சந்தர்ப்பத்திலே அவர்கள் இறக்கப்படும் பொழுது முன்னோரின் ஆன்மாவும் வெளிவரும்.
1.நாம் தினசரி எண்ணி அவர்களை விண் செலுத்திய உணர்வுகள் கொண்டு
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
இதுகள் எல்லாம் ஒரு சிலருக்குத் தெரிய வரும்.
காரணம் அந்த இன்னொரு உடலில் இருந்து இந்த ஆன்மா
வெளிவந்த பின்… நம்முடைய உணர்வு தாக்கப்பட்ட பின் நினைவு வரும். “என்னை
ஏன் விண் செலுத்தவில்லை…? விண் செலுத்து…! என்று
அந்த உணர்ச்சிகள் உந்துவதைக்
கூடத் தெரிந்து கொள்ளலாம்.
அவருடைய உணர்வு நமக்குள் இருப்பதால்
நினைவுபடுத்தி அந்த
ஆன்மாக்களை விண் செலுத்தும்படி செய்யும்.
ஒருவர் நோயுடன் சென்று இருக்கலாம்… திடீரென்று
அகால மரணத்துடன் சென்றிருக்கலாம்… வெறுப்பின் தன்மை கொண்டு தற்கொலை கூட செய்து இருக்கலாம்.
1.அப்படித்
தற்கொலை செய்திருந்தாலும் கூட அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்த முடியும்.
2.காரணம் மனிதன் தான் அதைச் செயல்படுத்த முடியும்.
சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்கள் இணைக்கப்பட்டு உடல் பெறும்
உணர்வு கரைக்கப்பட்டு அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.
வான் வீதியில் தோன்றிய உயிரணுக்கள் தான் நம் உடலில் சேர்கிறது. மனிதனான பின் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றது துருவ
நட்சத்திரம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை நாம் பெறும் போது நாமும்
அந்த நிலை பெறுகின்றோம். அந்த வலுவின் துணை கொண்டு
நம் முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை அங்கே ஒளிச்சரீரம் பெறச் செய்ய வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
வளரும் பொழுது அவர்கள் பிறவியில்லா நிலை
அடைகிறார்கள். இதை நாம் வளர்த்துக்
கொண்டே வந்தால் அந்த வலுக் கொண்டு நாம் எப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் உயிர் நம்மை அங்கே
அழைத்துச் சென்றுவிடும். காரணம்…
1.எந்த உணர்வின் தன்மை வலுப் பெறுகின்றதோ அதனுடைய தொடர் வரிசை பூமியில்
இருப்பதால்
2.அதன் ஈர்ப்புக்கே
நம்மை அழைத்துச் செல்கின்றது.