
வியாழன் கோளிலிருந்து பூமிக்கு வந்தவர்கள் தான் நாம் (விஞ்ஞானிகள் கண்டு இனி சொல்வார்கள்)
நாம் வாழும் இந்த பூமி சீக்கிரம் அழியப்
போகின்றது. காரணம் விஞ்ஞான உலகின் அணுக்கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவி விட்டது.
சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து விட்டது.
பூமியின் நடு மையத்திற்குள் இது ஊடுருவிச்
சென்று கொண்டிருக்கின்றது.
அணுக்
கதிரியக்கங்கள் சூரியனின்
வெப்ப காந்தத்தில் கலந்த பின்
1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்
2.பூமியிலிருக்கும் காந்தமும்
உலோகத்தில் இருக்கக்கூடிய காந்தங்களுடன் மோதிய
பின்
3.புயலடித்த மாதிரி இரும்பும் உருகுகின்றது… கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி பெறுகின்றது.
மற்றதெல்லாம் பிளந்து விட்டு ஊடுருவி
அனைத்தையும் அழித்துவிட்டு
1.அதில் இருக்கக்கூடிய வீரிய சக்தி அடங்கும் வரையிலும் சுழிக் காற்று போன்று
2.செடி கொடி கல் மண் மரம் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்கின்றது.
3.பூமியில் இருக்கும் அணுவினைப்
(கதிரியக்கம்) பிளந்து விஞ்ஞானிகள் செய்து கொண்ட நிலைகள் இது.
அதை வைத்து மின்சாரத்தை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். எத்தனையோ பல வேலைகள் செய்கிறோம் என்று சொல்லலாம். அதனுடைய தணிந்த
உணர்வின் நிலைகள் வந்தாலும் இந்தச்
சூரியனின் காந்த சக்தி கவர்ந்தே இருக்கின்றது.
பூமிக்குள் இருந்தால் தான் இதனால் விபத்து என்ற நிலை இருந்தாலும் பூமியைக் கடந்து பிரபஞ்சத்திலே பரிசீலனைக்காக வெடிக்கச் செய்தாலும் வான வீதியிலே இந்த
அணுக்களின் தன்மை படர்ந்து “பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஓசோன் திரையைக் கிழித்து விட்டு…” இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றது.
இது அனைத்தும் பூமியின் நடு மையம் சென்றடைந்து விடும்.
வெப்பத்தின் தணல்கள் கூடும்… பனிப்பாறைகள்
அனைத்தும் உருகும்.
உருகிய நீர்கள் நிலங்களைக் குறையச்
செய்யும்.
நீர்கள் கூடினாலும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய நீரின் தன்மை பரவிப் படர்ந்தாலும்
1.சூரியனை விட்டு இந்த பூமி நகர்ந்து செல்லும்
சந்தர்ப்பம் உருவாகின்றது.
2.அப்படி நகர்ந்து சென்ற பின் பூமிக்குள் நீர்கள்
அனைத்தும் பனிப் பாறைகளாக உறைந்து விடும்.
3.நம் உயிர்கள் எல்லாம் அதற்குள் அமுங்கிவிடும்.
கோழி முட்டையை ஐஸ் பெட்டிக்குள் வைத்துத் தேவை ஏற்படும் போது அதை எடுத்துக் குஞ்சாகப் பொரிப்பது போன்று ஆகிவிடும்.
ஏனென்றால் “வியாழன் கோளில் நம் உயிரணுக்கள் அனைத்தும் சிக்கப்பட்டு…” அதிலிருந்து மீண்டும் தெறிக்கப்பட்டு வான் வீதிக்கு வந்து இப்பொழுது
மனிதனாக நாம் இங்கே இந்தப்
பூமியில் பிறந்து இருக்கின்றோம்.
அதனால் தான் வியாழன் கோளைக் குரு என்று சொல்வது.
அதில் மனிதர்கள் வாழ்ந்து வளர்ச்சியாகி தவறு
செய்து
போர் முறையாகி அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் எல்லாம் அங்கே
உண்டு.
1.வியாழன் கோளில் இப்போதும் மண்ணைத் தோண்டி எடுத்தோம் என்றால்
2.இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்ததற்கெல்லாம் அப்பனாக அவர்கள் செய்து வைத்த ஆயுதங்கள் அங்கே அடியில் பதிந்துள்ளது.
இதை எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டி இருக்கின்றார்.
அங்கே ஏற்பட்ட பிரளயத்தால் பனிப்பாறைகளாக
ஆகி அதிலே சிக்கிய உயிர்கள்… எடுத்துக் கொண்ட நிலைகள் தான் கதிரியக்கச் சக்தியாக மாறிப் பல நிலைகள் மாறியது.
பின் இதிலே வந்த ஒவ்வொரு உயிரணுவின் தன்மை மீண்டும் ஜீவன் பெற்று பல நிலைகள் வந்தது. வியாழனின் நிலைகள் நட்சத்திர நிலைகள் கொண்டு சில நிலைகள் வந்தது என்று எமது குருநாதர் காட்டியுள்ளார்.
1.விஞ்ஞானிகள் இதையெல்லாம் கண்டு கொள்வதற்குப் பல காலமாகும்.
2.ஆனால் இப்பொழுது யாம் சொல்வதைப்
பின்னாடி ஒரு காலத்தில் சொல்வார்கள்.