
வளரும் பிள்ளைகளை அருள் வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்
நம் பிள்ளை
படித்து நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம். அவன்
படிக்கவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே… இப்படிப் பண்ணுகிறானே” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்து விடுகிறோம்.
வீட்டுக்காரர்
வந்தவுடன் பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்துக் கெடுத்து விட்டீர்களே…!
என்று ஜெபம். அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்து விடுவார்கள்.
போனபின் தியானம்… என்ன தியானம்…?
1.அவன்
இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்… இவன் அப்படிப் பண்ணிக் கொண்டிருக்கிறான்…
படிக்க மாட்டேன் என்கிறான்.
2.இவரும்
கேட்க மாட்டேன் என்கிறார்…! என்று மனதிலே எண்ணித் தியானம்.
அந்த
நேரத்தில் அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால் “தொலைந்து போ…” என்று அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும். இந்த ஜெபம்
என்ன செய்யும்…?
அந்தச் சாபம்
வந்தவுடன் கோபம் வந்துவிடும். இரவு நேரத்தில் கை கால் குடைச்சல் மேல் வலி
உடல் வலி என்று எல்லாமே வந்துவிடும்… சகிக்க முடியாது.
ஏனென்றால் அவன் செயலையும் அதனால் வேதனையையும் எடுத்தவுடன் கை கால் குடைச்சல்
வரும். இந்தத் தியானம் செய்கிறோம்.
ஆனால் இதற்கு
நாம் என்ன செய்ய வேண்டும்…?
இரவில்
படுக்கப்படும்போது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்... என்
ஜீவாத்மா பெற வேண்டும் என்று “ஆத்ம சுத்தி” செய்யுங்கள்.
நீங்கள் யாம்
கொடுத்த சக்திக்காக வேண்டித் தியானமிருக்கும் போது
1.ஒரு
நாளில் பத்து நிமிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.
2.அந்தச்
சக்தியை எடுக்கும் போது அந்த ஞானியரின் சக்தியைப் பிரித்துக் கொடுக்கும்.
3.அதை
உங்களுக்குச் செய்து கொடுக்கிறோம்.
சாமி
வந்தவுடன் எல்லாம் நன்றாகி விட்டது… நன்றாகி விட்டது என்கிறோம்.
அடுத்ததாக இரண்டு தரம் வந்து நல்லதாக ஆகிவிட்டது என்பார்கள்.
மூன்றாவது தடவை என்ன செய்கிறார்கள்…?
யாம் எத்தனை
தடவை செய்து கொடுப்பது…? ஒரு தரம் இரண்டு தரம் மூன்று தரம் கூடச் செய்து
கொடுக்கலாம். நான்காவது தரமும் யாமே செய்து கொடுக்க வேண்டும்
என்று எண்ணுகிறார்கள்.
ஒன்றும்
பலனில்லையென்றால் “சாமி என்னத்தைச் செய்துவிட்டார்…?” என்று உடனே
ஜோசியக்காரனிடம் சென்று நல்ல நேரம் வருகிறதா…? கெட்ட நேரம்
வருகிறதா…? என்று பார்த்து அதற்கு யாகத்தைச் செய்து விட்டால்
அல்லது எந்திரத்தைக் கொண்டு வைத்தால் நல்ல நேரம் வருமா…?
என்றிருப்பார்கள்.
உங்கள்
எண்ணத்திற்குள் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்றால் செயல்படுத்த மாட்டார்கள். ஆகையினால்தான்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுப்பது.
மனித
வாழ்க்கையில் இன்று குடும்பத்தில் ஒரு பிரச்சனையால் பையன் தவறு
செய்கிறான் என்றால்
1.அவன்
செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் பட்டவுடன் நமக்குக் கோபம் வரத்தான் செய்யும்.
2.ஆனால்
அதே கோபத்தால் நாம் சாபமிடும் நிலைகளுக்கெல்லாம் நாம் வாக்கைக் கொடுத்து விடுவோம்.
3.அந்தக் கெட்டது உடனடியாக வேலை செய்யும்.
நாம் குழந்தை மேல்
பாசமாக இருப்போம்.
நம்மையறியாமலே இந்த உணர்வைப் பாய்ச்சியவுடன் நம் எண்ணமே துரித
நிலைகளில் வேலை செய்து அவர்களுக்கு இடைஞ்சலாகும். அதனால்
அவர்கள் சங்கடப்படும் போது அதை எண்ணி மீண்டும் வேதனைப்படுவோம்.
இதைப் போன்று
1.நம்மை
அறியாமலேயே பின்னிப் பிணைத்துத் துன்பப்படுத்திக்
கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதத்தை
2.“மிஷின்
கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக்
கொடுக்கிறோம்.
அதைப் பயன்படுத்தினால்
இருள் சூழும் நிலையை நிச்சயம் மாற்றியமைக்க முடியும்.