
குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் “என்னுடைய ஒரே ஆசை…”
ஒன்றுக்குள்
ஒன்று கலந்துள்ள நஞ்சின் தன்மை எதனின் நஞ்சாக
அடைகின்றதோ அதனின் நிலையில் நம்மை அடக்கி ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டினார்கள்.
எப்படி…?
விநாயகர்
ஆலயத்தில் பார்த்தோமென்றால் இரண்டு பாம்புகளைப் பிணைத்துக்
காண்பித்து இருப்பார்கள்.
1.விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அது எப்படி ஒடுக்குகின்றது…?
2.ஒரு அணுவின் தன்மை எப்படிப் பிணைந்து கொள்கின்றது…? என்ற தத்துவத்தையும் காட்டி இருக்கின்றார்கள்.
ஆனால்
அதில் உள்ள பொருளைக் காணாத நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.
நீங்கள்
அனைவரும் அந்த மெய் ஞானிகள் அருள் சக்தி பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து
மீண்டு
1.சகோதர உணர்வுகளைப்
பிரித்தாளும் சக்தியாக வருவதை வெல்லும் சக்தியாக
2.நீங்கள்
எடுக்கும் அருள் உணர்வுகள்… உங்கள் மூச்சுலைகள் படர்ந்து
3.இந்த நாட்டிற்குள்ளும் உலகிலும் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகல வேண்டும் என்ற நிலைக்குத் தான்
4.குருநாதர் உணர்வுகளை
உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து ஒளி பெறும் சக்தியாக வளர
வேண்டும் என்று வேண்டுகின்றேன்.
உங்களுடைய
மூச்சலைகள் இருள் நீக்கிப் பொருள் காணும்
அருள் சக்தியாக வளர வேண்டும் என்ற நிலைக்குத்தான் குரு
உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
1.கல்வி அறிவில்லாதவனான எனக்கு… மூடனான
எனக்குள் இருந்த இருளை நீக்குவதற்கு
2.குருநாதர் கண்டுணர்ந்த பேருண்மைகளை உபதேசித்து என்
உணர்வுக்குள் அவர் காட்டிய நிலைகள் கொண்டு
3.கருக்களாக உருப் பெறும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் உபதேசித்த உணர்வு தான்
4.அதற்குள்
இருந்து அந்த ஞானத்தின் நிலைகளை நான் நுகர முடிகின்றது… அந்த அலைகளைப் பரப்ப முடிகின்றது.
இந்த
உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பின்பற்றிப் பாருங்கள். மனிதன்
என்ற தன்னிலை அடைய முடியும்… உங்களால் நிச்சயம்
முடியும்… உங்களை நம்புங்கள்.
உயிரை
ஈசனாக மதித்துப் பழகுங்கள். உங்கள் உடலை அவன் படைத்த கோவிலாக சிவனாக மதியுங்கள்… ஆலயமாக மதியுங்கள்.
இந்த
உடலான ஆலயத்திற்குள் எண்ணிலடங்காத தெய்வங்கள் உண்டு. அந்த உயர்ந்த தெய்வ நிலைகள் அனைத்தையும் சேர்த்து
அந்த வலுவின் நிலைகள் கொண்டு வர முடியும்.
குழம்பிற்குள் நாம் பல பொருள்களை இணைத்து அதை ருசியாகக்
கொண்டு வருகின்றோம். அதைப் போல்
1.உங்களுக்குள்
பலவாறு பல நிலைகள் கொண்ட உணர்வுகள் வந்தாலும் அது அனைத்தையும் அடக்கிட
2.அந்த உணர்வின் தன்மை ஆற்றல் பெற்ற அந்த அகஸ்தியனுடைய
அருள் ஒளியை நீங்கள் பருக வேண்டும்.
3.அவன் சமப்படுத்தியது போன்று ஒளியின் தன்மையாக உங்கள் எண்ணங்கள் ஒளியின்
சுடராகப் பிரகாசிக்க வேண்டும்.
உங்கள்
சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி தாண்டவமாட வேண்டும். அனைவரும் மகிழ வேண்டும் என்ற இந்த (இச்சை) இச்சா
சக்தி தான் என் குரு காட்டிய நிலைகள் கொண்டு அதுவே
எனக்குள் கிரியை ஆகி என் உடலுக்குள் இயக்கி அது
தான் சொல்லாக வெளி வருகின்றது.
1.இதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதுதான் என் குருநாதர் ஆசைப்படி
எனது ஆசையாக அமைகின்றது.
2.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
3.நீங்கள்
அருள் ஒளி பெற வேண்டும் என்று
ஆசைப்படுகின்றேன்
4.உங்களை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
நான்
எண்ணிய இந்த ஆசையை என் உயிர் எனக்குள் அதைப்
படைக்கின்றது.
இதைப்
போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா
என்று உயிரை எண்ணி வானை நோக்கி ஏகி மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குங்கள்.
அதன்
வலுக் கொண்டு நீங்கள் பார்ப்போர் அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர்கள்
அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப் பொருள் கண்டுனரும் சக்தி
அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் தீமையை நீக்கிடும்
ஆற்றல்மிக்க சக்தியாக உருப் பெற வேண்டும் என்று நீங்கள்
எண்ணிச் செயல்படுங்கள்.
1.அப்படிச்
செய்தால் அதே உணர்வுகள் உங்களுக்குள்ளும்
விளைந்து
2.அதனின் உணர்வாக உங்கள் உயிர் உங்களை ஆண்டு
3.அதனின் உணர்வின் ஒளியாக உங்களுக்குள் சேர்த்து
4.இந்த
உடலை ஒளிச் சரீரமாக…
உங்களை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் அதைச் செயல்படுத்துவான்,