
நாம் எதை எண்ணுகின்றோமோ “அதைத் தான்… அதுவாகத் தான்…” உயிர் நம்மை ஆக்கிவிடும்
பிறர் தீயவர்களாக இருப்பினும் அவர்கள் நல்லவராக மாற
வேண்டும் என்ற இந்த உணர்வினை நுகர்ந்தால்
நமக்கு நல்லது.
1.ஒருவர் தீயதைச்
செய்கின்றார் அவர் நல்லவராக மாற வேண்டும் என்று நாம் எண்ணினால்
2.நமக்குள் அந்த நல்ல உணர்வைக் கொண்டு வருகின்றது… நல்ல உடலாக அது மாற்றுகின்றது.
3.நல்ல சொல்லாகவும் நம்மைச் சொல்லும்படி வைக்கின்றது.
ஆனால் நல்லவர் என்று எண்ணினாலும் அவரின் கோபமான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது அது
தீமை ஆகி விடுகின்றது. பாலிலே பாதாமைப் போட்டாலும் அதில் ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்தப் பாதாமிற்குச் சக்தி இல்லை.
நாம் நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும் கெட்டவன் என்று இருந்தால் அவனைக் கேட்டுத்தான் நாம் உணர்கின்றோம்.
அப்படி உணரப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.
ஆகவே தான்
1.தீயவர்கள் என்பது எவரும் இல்லை.
2.சந்தர்ப்பம் தான் தீய செயலைச்
செயல்பட வைக்கின்றது.
3.அந்தச்
சந்தர்ப்பம் உடலில் தீய உணர்வுகளாக
விளைகிறது.
தீய அணுக்கள் விளைந்து இந்த உடலிலேயே தீயவனாக மாற்றி இந்த உடலுக்குப் பின் மனிதன் அடுத்து மனிதனல்லாத உடலாக உருவாக்கி விடுகின்றது.
எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாகப் பிறந்த பின் மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான் சாஸ்திரங்களை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.
ஆதிமூலம் என்ற உயிர் தான்… பல கோடி
உடலில் தீமைகளை நீக்கி நீக்கித்
தீமையிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வை எடுத்து
இப்படிப் பல கோடி உடல்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது..
ஆகையினால் தான்… முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக
நம்மை மனிதனாக உருவாக்கியது விநாயகா. வினைக்கு
நாயகனாக நல்ல உடலாக உருவாக்குகின்றது.
மனிதனான பின் தீய
உணர்வை நுகர்ந்து விட்டால்…
1.அந்தத்
தீய உணர்வு வினைக்கு நாயகனாகித் தீய செயலும் செயல்பட வைத்து விடுகின்றது…
2.தீய சொல்களையும் சொல்ல
வைத்துத் தீய உடலாக மாற்றி விடுகின்றது.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நமது உயிர் இயக்கிக் காட்டுகின்றது… உடலாக்குகின்றது…
அதையே ஆளுகின்றது நமது உயிர்.
1.ஆண்டவனாக இருப்பதும் உயிர்
2.எண்ணியதை
இயக்குவதும் உயிர்…
3.எண்ணியதை உருவாக்குவதும் உயிர்
4.எண்ணியதை உடலாக்குவதும் உயிர்
இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.