ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2026

“போர் முறை இல்லாது… எதிர்ப்பு இல்லாது…” சுழலும் வியாழனின் இயக்கம்

“போர் முறை இல்லாது… எதிர்ப்பு இல்லாது…” சுழலும் வியாழனின் இயக்கம்


27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து சக்திகளைக் கவர்ந்து நம் பிரபஞ்சத்திற்குள் அனுப்புகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கோளுக்குள்ளும் சென்று வரும் அந்தச் சக்திகள்
1.வியாழன் கோளுக்கு வரும் பொழுது எத்தகைய நட்சத்திரங்களின் மோதலின் கலவைகளில் வருகின்றதோ
2.து 27 உபக்கோள்களை வைத்து அவைகளைக் கவருகின்றது.
 
சூரியன் எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல் தனக்குள் அதை எடுத்து எடுத்து கோள்களிலே வளர்ச்சி அதிகமாகி.. சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபக் கோள்ளை வியாழன் வளர்த்து வைத்திருக்கின்றது.
 
வளர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்கவாறு வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் சக்தியை ஒன்றாகச் சமைத்து அதை ஆவியாக மாற்றி உறைனியாக மாற்றிக் கொள்கின்றது.
 
இது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரும் பொழுது
1.வியாழனின் சுழற்சி அதிகமாகும் பொழுது எல்லாவற்றையும் அதனுடன் இணைத்து
2.புதுவிதமான அணுக்களை இணைத்துக் கொள்ளும் ஒரு பாலமாக அமைகின்றது.
 
நம் உயிர் இந்த உடலுக்குள் இயங்கும் பொழுது ந்த உணர்வின் தன்மை பெற்றோமோ உதாரணமாக வேதனை என்று வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது எதன் வலுவோ அதன் வழி நமக்குள் மாற்றுகின்றது.
 
உடலான இந்தக் கோளுக்கு நமது உயிர் குருவாக இருக்கின்றது. இதைப் போன்று தான் இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் ஆனாலும்
1.வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்குக் குருவாக இருக்கின்றது.
2.தனால் தான் குரு என்று காரணப்பெயராக வைத்தார்கள்.
 
அதற்குள் வரும் அனைத்தையும் இணைத்துப் புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் நட்சத்திரங்களின் மின்னல் கதிரியக்கங்கள் ஊடுருவினால் இரண்டும் ஆண் பெண் என்ற நிலைகளில் உருவாகும் பொழுது ணுக்களாக மாறுகின்றது வளர்ச்சியடைகின்றது.
 
அப்படி வளர்ச்சி அடைந்த உணர்வின் தன்மை தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது.
 
27 நட்சத்திரங்கள் சக்தியை வியாழன் எடுத்துத் தன் சுழற்சியின் வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பரப்பில் உறையும் தன்மை வருகின்றது.
 
கரண்டை வைத்து நாம் ஐஸ் பெட்டியை (ஃபிரிட்ஜை) உருவாக்குவது போன்று அதே கரண்டை வைத்து சூட்டை உருவாக்குவது போன்று
1.வியாழன் கோள் பல விதமான உணர்வுகள் கொண்டு அமைதிப்படுத்திப் “போர் முறை இல்லாதபடி…”
2.அந்த உணர்வின் தன்மை வேக வைத்து அமைதியின் தன்மை எதிர்ப்பு இல்லாதபடி…” உருவாக்குகின்றது.
 
து தான் 27 நட்சத்திரத்தின் உணர்வை தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது.
 
ஆனால் ஜாதகங்களில் பல விதமாகக் காட்டியிருப்பார்கள் ஆனால் உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.
 
கோள்களைப் பிரித்துத் தான் எழுத முடியுமே தவிர சூரியனுக்கு நேராக வரும் போது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் என்று இப்படித்தான் அவர்கள் அதைப் பிரித்து காட்ட முடியுமே தவிர இயற்கையின் உண்மையின் இயக்கங்களைச் சொல்ல முடியாது.
 
1.இதையெல்லாம் மனிதனுக்கு உகந்த நிலைகளாக எழுதப்பட்டு மதத்திற்குத் தக்கவாறு ஜாதகத்தைப் பிரித்து
2.இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்பார்கள்.
3.ஆனால் ஆண்டவன் அதை எல்லாம் மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்று
4.ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இடத்திற்கும் தக்கவாறு ஜாதகத்தைக் குறித்து விட்டார்கள்.
 
தை வைத்துத்தான் நாம் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து அலைந்து கொண்டுள்ளோம்.
 
ஆக எது பதிவோ அந்த நினைவு நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. எந்தெந்த நிலைகளை இப்படி எடுத்துக் கொள்கிறோமோ அந்தப் பதிவுதான் செயல் ஆகின்றதே தவிர நல்ல நேரமோ கெட்ட நேரமோ இல்லை.
 
1.அந்த கோள்களின் இயக்கத்தில் மனிதன்… இவர்கள் சொல்வது போன்று இல்லை.
2.ஆனால் சூரியன் எல்லாவற்றையும் கவர்ந்து வரும் போது தாவர ங்களுக்கோ கல் மண் இவைகளுக்கோ அது சேரும் அதனின் இயக்கமாகும்.