ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2026

எதையுமே உணர்வால் அறியும் ஆற்றலாக… அந்த அறிவின் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்

எதையுமே உணர்வால் அறியும் ஆற்றலாக… அந்த அறிவின் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்


இந்த மனித வாழ்க்கையில் எல்லோராலும் சில இதுகளை நாம் உணர்வால் உணர முடிகின்றது. ஆனாலும்
1.இந்தத் தியான வழியில் பெரும்பகுதி இந்த உடலுக்குள் செல்லும் நிலைகளை உணர வேண்டும்.
2.உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகிறது என்று…?
 
நம் உடலுக்குள் சேர்ந்த உணர்வுகள்… மற்ற உணர்வு நம் மீது மோதிய பின் “எதனால் நம்மை இயக்கப்படுகின்றது…?” என்ற இந்த அறிவின் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.
 
இதை எல்லாம் நமக்குள் நுகர நுகர நம் உடலுக்குள் நாம் நுகரும் உணர்வுகள் இரண்டும் “ஒரு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…”
1.உயிரிலே மோதி உணர்வின் தன்மை நினைவுடன் இருக்கப்படும் பொழுது…
2.மற்றொரு உணர்வு சேர்ந்த பின்
3.அதனுடைய அழுத்தமும்… அதனுடைய இயக்கமும்… நம்முடைய உணர்வும்…
4.அதற்குக் கீழ் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை நாம் அறிந்து உணர முடிகின்றது.
 
இதைப் பழக்கப்படுத்துவதற்குத் தான்
1.எது நம்மை இயக்குகிறது…?
2.எதனால் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்…?
3.எதை நாம் வளர்த்துக் கொள்கின்றோம்…? என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்வதற்குத் தான்
4.தியானத்தில் காட்சியாகக் கொடுக்கப்பட்டதன் உண்மை நிலைகள்.
 
இது உங்களுக்குள் வளர்ந்தால் நல்லதாகும்.