
கருவுற்ற தாய் அறியாமல் நுகரும் தீமைகள் குழந்தையை எப்படிப் பாதிக்கும்…?
இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் கருவில்
வளரும் குழந்தைக்கு எதைக் கொடுக்கின்றார்கள்…?
T.V. அல்லது ஃபோனைப் பார்க்கின்றார்கள். “டமார்… டமார்…” என்று பந்து அடிப்பதைப் பார்த்து அந்த உணர்வைத்
தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையிடம் பெருக்குகின்றார்கள். அதே போல் கராத்தே விளையாடுவதைக் கண்டால் அதையும் வேடிக்கைப் பார்ப்பார்கள். அதன் வலிமையைப் பார்ப்பார்கள்.
இதனால் என்ன ஆகின்றது…?
1.அவன் பிறந்தவுடனே
கிரிக்கெட் பார்க்க ஓடிவிடுகின்றான்.
2.அதே போல் கராத்தே
போன்று தாக்கிக் கொண்டே விளையாடுவான்.
3.இருப்பவர்களை எல்லாம்
உதைக்க ஆரம்பித்துவிடுவான்.
மனிதர்கள் தங்களிடத்திலும் தங்கள்
குழந்தைகளிடத்திலும் வளர்க்க வேண்டியது எது…? நீக்க வேண்டியது
எது…? என்பதை, ஞானிகள் தங்களது காவியத்
தொகுப்புகள் மூலம் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி உள்ளார்கள்.
இதை யாரும் சிந்திப்பதில்லை.
உதாரணமாக ஒரு கருவுற்றிருக்கும்
பெண்மணி ஊனமுற்ற குழந்தையைப் பார்க்குமேயானால் அந்தக் குழந்தையின் உடலிலிருந்து
வரக்கூடிய மூச்சலையும் உடலின் அலைகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து
கொள்கின்றது.
இந்த உணர்வின் சக்தியை அந்தத்
தாய் சுவாசிக்கும் பொழுது “அந்தக்
குழந்தைக்கு இப்படியாகி விட்டதே…!” என்று சோர்வும் வேதனையும்
அடைகின்றது… சஞ்சலமும் படுகின்றது.
அந்த உணர்வின் நிலைகள் வரும்
பொழுது அத்தகைய உணர்வைப் பார்வையால் நுகரச் செய்து அந்த எண்ணத்தால் உடல் இயங்கி அது
எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து
1.அதாவது அந்த
ஊனமுற்ற குழந்தையின் உடலில் இருந்து வரும் உணர்வின் சத்தைக் கர்ப்பிணிப்
பெண் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது
2.கருவிலிருக்கக்கூடிய
குழந்தைக்கு இந்த உணர்வின் அலைகள் பதிவாகி விடுகின்றது.
கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று கதையைச்
சொல்வார்கள். நமது கண் ஊனமுற்றிருக்கும் குழந்தையைக் கண்டு இரக்கப்பட்டு
பரிதாபப்பட்டு வேதனைப்படும் அதனின் உணர்வுகளைச் சுவாசிக்கச்
செய்து உயிரை இயக்கச் செய்கின்றது.
உயிர் எலக்ட்ரானிக்காக
மாற்றுகின்றது. அந்த உணர்வின் அலைகள் இரத்தத்துடன் கலந்து தாயின் இரத்தத்தில்
இருக்கக்கூடியதைத் தான் கருவில் இருக்கக்கூடிய குழந்தை உணவாக எடுத்து அதனின்
தசைகள் வளர்கின்றது.
1.தாயின் கண் அந்த ஊனமுற்ற குழந்தையின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்கின்றது.
2.ஊழ்வினையான
அந்த வினைதான் இந்தக் குழந்தையிடமிருந்து வெளிப்படும் உணர்வை மீண்டும் சுவாசிக்கச்
செய்கின்றது.
3.ஏனென்றால் தாயின்
கருவிலே அந்த உணர்வுகள் பதிவாகவில்லை என்றால் எடுக்காது.
இப்பொழுது யாம் உபதேசிக்கும்
உணர்வின் தன்மையை
1.“சாமி என்ன
சொல்கிறார்…?” என்று கேட்டு உணர்ந்து கொண்டு இருந்தால் இது
பதிவாகும்.
2.சொல்லும்
உணர்வுகளும் தெளிவாகக் கேட்கும்.
3.மற்றவர்கள்
அருகிலே பேசினாலும் அது செவிப்புலனுக்கு ஏறாது.
ஆனால் இங்கே யாம் உபதேசித்துக்
கொண்டிருக்கும் பொழுது “வீட்டுக்கு
அவசரமாகப் போக வேண்டும் எப்பொழுது முடிப்பார்…?” என்று
எண்ணினால் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் பதியாது… எண்ணிய
உணர்வுதான் இயக்கும். யாம் சொல்லும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப்
பதிவாகாது.
அதே போல்… வீட்டில் என்ன நடக்கிறதோ என்ற
உணர்வினைப் பதியச் செய்து விட்டால் அது பதட்டத்தையும்
பயத்தையும் ஊட்டி நல்ல உணர்வுகளைக் கெடுக்கச் செய்து… நம்முடைய
கண்ணின் நினைவலைகள் எங்கே செல்கின்றதோ அதனின் நிலைதான் பதிவாகி அதனையே இயக்கும்….!
இதைப் போல அந்தக் கர்ப்பமுற்ற
தாய் தான் பார்த்த ஊனமுற்ற உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அது உடலிலே
பதிவாக்கும் பொழுது தாய்க்கு ஊழ் வினை.
ஊழ் என்பது… நமது எலும்புக்குள் மேக்னட் - காந்த சக்தி உண்டு. இந்த உடலிலே பதிவு செய்த அனைத்தும் நமது எலும்புக்குள்
ஊழ் வினையாக அது ஊழாக இருக்கின்றது.
1.நாம் எப்படி டேப்புகளிலே
முலாம் பூசுகின்றோமோ அதைப் போல நமக்குள் உருவான இந்த நிலை
2.நாம் வளர்ச்சி
பெறும் வண்ணம் நமது எலும்புக்குள் இந்த ஊண்.
3.நாம் கண்ணால்
பார்த்த உணர்வின் தன்மையை அந்த ஊணுக்குள் பதிவு செய்துவிடும்.
இவ்வாறு தாய் சந்தித்த (ஊனமுற்ற
குழந்தையைப் பார்த்த) சந்தர்ப்பத்தின் உணர்வுகள் தாய்க்கு ஊழ் வினையாகி சுவாசிக்கும்
உணர்வுகள் தாயின் இரத்தத்திலே கலந்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ
புண்ணியமாக அமைகின்றது.
ஆகவே இந்தக் குறையான உணர்வை… அதாவது ஊனமான குழந்தையின்
உணர்வுகள் கருவுற்ற தாய்க்குள் பட்டபின் வேதனை என்ற நஞ்சு
வரப்படும் பொழுது… அதனால் அந்தக் கருவிலே வளரும் சிசுவிற்குச் சிந்திக்கும் திறன் இழந்து மூளையின் வளர்ச்சி குறையாக இருக்கும்.
அவ்வாறு அந்த மூளையின் வளர்ச்சி
குறையாக இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே வளர்ச்சியின் தன்மை குறைவாக ஆகி எதனின்
உணர்வுடன் அந்தக் குழந்தையைப் பார்த்ததோ அதே நிலைகள் கொண்டு கருவிலே இருக்கக்கூடிய
“குழந்தை உடலும் ஊனமாகும்…”
இதுதான் கண்ணன் கருவிலிருக்கும்
குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.
நமது கண்ணின் நினவலைகள் அங்கே இருப்பதைக்
கவர்ந்து உடலுக்குள் அது செல்லப்படும் பொழுது குழந்தைக்கு அந்த உணர்வின் சக்தி கிடைக்கின்றது
என்ற நிலையைக் காட்டுகின்றனர்.
ஆஅகவே கர்ப்பமாக இருக்கும்
தாய்மார்கள் அனைவரும் கருவிலிருக்கும் தன் குழந்தையை எண்ணி
1.அந்த மெய் ஞானிகள்
காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.
அந்த ஏக்கத்துடன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்
கருவுக்குள் இருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று கண்ணின் நினைவலைகளைக் கருவுக்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு செய்யும் பொழுது, கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசிப்பது
போல
1.கண்ணால் எண்ணி அந்தத்
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவலைகளை
2.கருவிலே பாய்ச்சப்படும்
பொழுது அது ஞானக் குழந்தையாக வளருகின்றது.
3.அது வளர வளர நமக்குள்
தெளிவான நிலைகள் வளருகின்றது… அது நம்மைக் காத்திடும் நிலையாக
வருகின்றது.
4.அந்தக் குழந்தை
அகஸ்தியனைப் போன்ற ஞானக் குழந்தையாக உருவாகும்.
5.இந்த உலகைக் காத்திடும்
உத்தம ஞானக் குழந்தையாக வளரும்.