
நம் எண்ணத்தால் அகண்ட அண்டத்தையும் அளந்தறிய முடியும்
நாம்
இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம்.
இங்கிருந்து ராக்கெட்டிலே நாம் மற்ற கோள்களுக்குச் செல்ல
வேண்டுமென்றால் எவ்வளவு காலம் ஆகின்றது…?
1.எண்ணத்தின் மனோ நிலை ஆனாலும்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் எண்ணும் பொழுது உடனடியாக அங்கே டச்
(TOUCH) ஆகும்.
குருநாதர்
2000 சூரியக் குடும்பங்களுக்கும்
மனதைப் பாய்ச்சும் படி செய்கின்றார். அங்கே மனதைப் பாய்ச்சப்படும்
பொழுது
1.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கின்றது…?
2.அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
3.ஒன்றுடன் தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழுகின்றது…?
என்பதை உணர முடிகிறது.
மரம்
செடி கொடிகள் இருந்தாலும் எதுவும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் அதனுடன் இணை சேர்த்த தாவரங்கள் மறைந்தால் இதற்குச்
சத்து குறைந்து விடும்… இதுவும் வீழ்ச்சியடையும்.
சில
தாவர இனங்களுடைய சத்துகள் கலந்து புதுப் புதுச் செடிகள் உருவாகி இருக்கும். அப்படிக் கலந்த செடிகளின் இனங்கள் மறைந்து விட்டால்… இந்தச் செடி சிறிது காலம் தான் வளரும்.
1.காரணம் அந்தச் சத்து தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தால் இதுவும் வளரும்… அது இல்லை என்றால் மடியும்.
2.இதையெல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.
காட்டுப்
பகுதிக்குள் எம்மை அழைத்துச் சென்று காடுகளில் தாவரங்கள் எப்படி வளர்கின்றது…? மடிகின்றது…? இதை போன்ற உணர்வுகளைத் தெளிவாகக்
காட்டிக் காட்டி மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்த்துகிறார்.
மனிதன்
சிறிது காலம் வாழ்ந்த பின் அவனுடைய கடந்த கால உணர்வுகள் அழிந்து விடுகின்றது… ஆனாலும் கல் மண் இவைகளில் அது பதிவாகின்றது.
மனிதன்
எல்லாவற்றையும் கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப வரப்படும் பொழுது
பதிவாகிறது. அவ்வாறு பதிவான கடந்த கால
மனிதனுடைய உணர்வுகளை மறுபடியும் அதை ஆயிரம் மடங்கு பெருக்கினால் இந்த உணர்வின்
அதிர்வும் அவருடைய உருவத்தையும் புகைப்படமாக எடுக்க முடியும்.
கம்ப்யூட்டர்
என்ற எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம்
1.ஆஸ்பத்திரி கேட் மேலே தாவி ஒருவன் தப்பிச் சென்றான் என்று அதிலே பதிவான
உணர்வு கொண்டு கண்டுபிடித்து
2.அவனுக்கு ஒரு கண் இல்லை (ஓற்றைக் கண் சிவராசன்) என்று உணர்வின் ஒலி அதிர்வுகளை எடுத்து
3.இந்த உணர்வின் அதிர்வுகளைக் கூட்டப்படும் பொழுது அவனுடைய ரூபத்தைக்
காட்டுகின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.
அதே
விஞ்ஞான அறிவு கொண்டு 1500 வருடம் மனிதன் வாழலாம் என்று
இதையும் சொல்கின்றார்கள்.
1.ஆனால் அத்தகைய பிழைகள் வந்து வரும் பொழுதெல்லாம்
துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தவறு என்று தெரிகின்றதோ அந்தத் தவறு விளையாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
4.இந்த வாழ்க்கையில் வரும் நிலைகளை தணித்து அருள் உணர்வுகளைப் பெருக்க
முடியும்.
இது
தான் வாழ்க்கையே தியானம் என்பது.
1.நான் சும்மா உங்களிடம் கொடுக்கவில்லை…
2.குருநாதர் எமக்குச் சும்மா கொடுக்கவில்லை.
3.இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவானால்… அந்த
நினைவின் தன்மை கொண்டு தான் அதை எடுக்க முடியும்.
ஆனால்
இந்த உடலின் இச்சைக்கு வாழக் கற்றுக் கொண்டால்… உடலை
வளர்க்கவும் கௌரவத்தை வளர்க்கவும்… “அதை
வைத்து என்னை மெச்சிக் கொள்ள வாழ வேண்டும் என்று எண்ணினால்”
இந்த உடலுக்காகத் தான் நாம் வாழ முடியும். அப்போது குருநாதர்
கொடுத்த சக்திகள் பயனற்றதாக ஆகிவிடும்.
ஆகவே
இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் உடலின் இச்சைக்குச் செல்லாதபடி எல்லோருக்கும்
இந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.
நீங்கள்
அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் முதலிலே பெறுகின்றேன்.
உங்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் பெறுகின்றேன்.
அதைத்தான்
குருநாதர் எமக்குள் உருவாக்கினார்.
1.இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி…
2.அந்தப் பதிவின் நினைவை உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைத் தொடர்ந்து
சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
3.வாழ்க்கையையே ஒவ்வொரு நொடிப்பொழுதும் தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.