ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 18, 2026

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும்

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும்


1.இவ்வளவு பெரிய உண்மையைச் சொல்கிறேன்...! எவனும் என் சொல்லைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று
2.நீங்கள் இப்படிச் சொல்லி மற்றவர்களைக் கோபித்துக் கொண்டால் என்ன ஆகும்...?
3.இந்த உணர்வை அவர்களால் ஏற்க முடியவில்லை.... நம்மால் நல்லதை வளர்க்க முடியவில்லை...! என்ற இந்த நிலை தான் வருகின்றது.
 
அதைப் போன்ற நிலை இல்லாதபடி குருநாதர் சொன்ன அருள் வழிப்படி
1.அவர் கண்ட அகண்ட நிலையைப் போல்
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாறியே ஆக வேண்டும்.
 
யாம் கொடுக்கும் அருள் சக்திகளை நீங்கள் எடுத்தால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் வரும். வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ வந்தால் அதை ஈடுகட்டும் உணர்வின் வலு வரும்.
 
சிந்தனையுடன் செயல்படும் சக்திகள் பெருகும் குடும்பத்தில் அன்புடன் பண்புடன் வாழும் இந்த உணர்வுகள் வளரும். ஞானத்தின் தன்மை பதிவாக்கி உணர்வின் தன்மை செயலாக்கப்படும் பொழுது அன்புள்ள குடும்பமாகவும் அருள் ஞானத் தெய்வீக குடும்பமாகவும் நாம் மாற முடியும்.
 
ஆக நீங்கள் எல்லோரும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வளர வேண்டும். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் விடுத்து விட்டு அருள் செல்வத்தைக் கூட்டி இருளைப் போக்கும் சக்தியாக வளர்ந்து அருள் வழியில் பண்புடன் வாழ்வோம்.
 
நீங்கள் தான் அனைவருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். காரணம்
1.உங்களை வழி நடத்துவதற்கு அனைத்தையும் எடுத்துச் சொல்லி விட்டேன்.
2.நீங்கள் அதை எடுத்து வளர்த்துக் கொள்வதில் தான் இனி இருக்கின்றது.
3.வளர்த்தால் நாம் வளர்கின்றோம் நஞ்சின் தன்மையிலிருந்து மீளலாம். பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.
 
நல்லதைப் பேசினேன் தெரிந்து கொண்டேன் என்ற நிலையில்
1.நான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன் என்று எண்ணினால் ஏமாந்து விடுவோம்.
2.தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோமே தவிர முழுமையாக நான் தெரிந்து கொண்டேன் என்று எவருமில்லை.
 
சொல்லின் உணர்வின் தன்மை அறிந்து கொண்டாலும் முழுமையாக நாம் ஒரேடியாகத் தெரிந்து கொள்ள முடியாது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இயக்கும். அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு நாம் அருளைச் சேர்த்துச் செயல்படுத்த வேண்டும்.
 
1.வெயில் அடிக்கும் பொழுது ஒரு உணர்வு
2.மழை பெய்யும் பொழுது ஒரு உணர்வு
3.குளிர் அடிக்கும் போது ஒரு உணர்வு
4.காற்று அடிக்கும் போது ஒரு உணர்வு
 
கால நிலைகள் இப்படி நமக்குள் மாறிக் கொண்டே தான் இருக்கும். எந்த நேரத்தில் எதைச் செயல்படுத்த வேண்டும்…?” என்ற உணர்வினை அறிந்து அந்த ஞானத்தின் வழிப்படி நாம் வாழ்வோம்.
 
அனைவரையும் அந்த அருள் வழியில் வாழ வைப்போம். அருள் வழி செல்வோம் இந்த உடலுக்குப் பின் ஒளியின் உணர்வாக முழுமையான நிலையை நாம் அடைவோம். ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம் பத்தாவது நிலையான கல்கி அடைவோம்.