
மும்முனையாக நமக்குள் இயக்கும் சில உணர்வின் இயக்கங்கள்
ஒருவரை
நண்பன் என்று நாம் கருதிக் கொண்டிருக்கும் பொழுது அவனில் விளைந்த
உணர்வு நாம் ஏற்றுக் கொண்ட உணர்வு இவை இரண்டும் கலந்து ஊழ் வினையாகப் பதிவாகும் பொழுது அந்த நண்பனை அணுகி அவனுக்கு
நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று
எண்ணுகின்றோம்.
அந்த
நண்பன் பால் நாம் ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு பற்றுடன் பதிவு செய்த உணர்வுகள் அந்த நண்பன் ஒரு தவறு
செய்திருப்பான் என்றால்
1.அதாவது
இன்னொருவனுக்கு எதிர்நிலையான தவறுகளைச்
செய்திருப்பார்
2.அவர் எனக்கு இப்படித் துரோகம் செய்தார் என்று அவர் நம்மிடம்
சொன்னாலும்
3.நண்பன் துரோகி அல்ல எனக்கு நல்லவனாகத் தான் இருக்கின்றான்
அவன் நல்லவனே…! என்று
4.இந்த உணர்வின் தன்மை வினைக்கு நாயகனாக… அவன் உணர்வு
நமக்குள் பதிவு செய்தது இவ்வாறு தான் இயக்கும்.
இன்னொருவன்
கூறிய கூற்றை ஏற்றுக் கொள்ளாது.
ஆனாலும்…
அவன் பேசிய உணர்வுகள் நமக்குள் பதிவான பின்
அவனை ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு அவனை நினைக்கும் போதெல்லாம்
நண்பனைக் குற்றவாளியாகப் பேசினான் என்ற
உணர்வுகள் நமக்குள் பதிவாகும்.
இருந்தாலும்
நம் நண்பன் ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ அவருடைய
சூழ்நிலை காரணமாக நாம் சொன்னதை அந்த நண்பன் செய்யவில்லை
என்றால் என்ன ஆகிறது…?
அந்த
இன்னொருவன்… வேண்டாதவன் நம்மிடம்
கூறினான் அல்லவா…! அந்த உணர்வு நம் ஆன்மாவில் கலந்தே இருக்கும்.
1.ஊழ் வினையாக நமக்குள் வித்தானாலும் ஆன்மாவில் கலந்து இருக்கும்.
2.இது இரண்டையும் கலந்து நாம் சுவாசிக்கும் போது அவன் கடுமையாக நண்பனைக் குற்றம் கூறிய உணர்வு கலந்த பின்
3.நண்பனைக் குற்றவாளி என்று நாமும் கருதும் நிலைக்கு
வந்து விடுகின்றோம்.
4.அப்படி வந்து விட்டால் சிறிதளவு அந்த எதிர்ப்பு நிலைகள் பதிவாகி விட்டது என்றால் “மும்முனையாக…” அது இயங்கத் தொடங்கி விடும்.
பாலுக்குள்
பாதாமைப் போட்டாலும் சுவையாகத் தான் இருக்கின்றது. அதில் சிறிதளவு காரத்தை இணைத்து விட்டால் இந்தக் காரத்தின் சுவையைத் தனித்துப்
பிரித்தே காட்டுகிறது.
1.ஒருவன் தவறு செய்யும் உணர்வுகள் அவன் நண்பன் என்று இருந்தாலும்
2.நண்பன் மீது குறை கூறிய உணர்வுகளோ நண்பனுடன் பற்று கொண்டதுடன் இணைத்த உணர்வுகள்
3.மும்முனையால் இயக்கப்பட்டு மாற்று வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
பதிவான
உணர்வுகள் அந்த நண்பன் வெளியிட்ட உணர்வலைகளைச்
சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கிறது. நம்முடன்
நட்பு கொண்ட உணர்வும் இங்கே பதிவாகி இருக்கின்றது.
ஆனால்
1.நட்பின் நிலைகள் ஓங்கி இருப்பினும்
2.சந்தர்ப்பத்திற்கு எதிர்ப்பு உணர்வுகள் ஏற்பட்டிருந்தால்
3.அதைச் சொல்லி இதனுடன் இணைத்து நாம் கேட்டிருந்தால்
4.அப்படிப் பதிவான நிலைகள் வந்து விடுகின்றது… பகைமையாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
இதையெல்லாம் நாம் தெளிவாகத்
தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.