
உன்னைப் போலவே ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும் ஈஸ்வரா…!
நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்… இந்த
வியாபாரம் செய்தேன்… எத்தனையோ தொழில் செய்தேன் என்றெல்லாம் அடிக்கடி நாம்
எண்ணுகிறோம். இருந்தாலும் அதிலே சிறு தடைப்பட்டால் என்ன நினைக்கின்றோம்…? வேதனையைத்தான் எண்ணுகின்றோம்.
நல்லதை நினைக்கின்றோம்…
நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். பையனுக்கு நல்லது செய்கிறோம்
சொன்னபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.
கடன் கொடுக்கின்றோம்… கொடுத்தவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.
அப்பொழுது எந்த ஆசை வருகிறது…? வேதனை
தான் வருகிறது… அதுவே இயக்குகிறது.
1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்
என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு.
2.நீ உயிராக இருக்கின்றாய்… ஒளியாக இருக்கின்றாய்… இருளை அகற்றுகின்றாய்… பொருளைக் காண செய்கின்றாய்.
3.நீ எப்படி உயிராக இருக்கின்றாயோ ஒளியாக
இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக
இருக்க வேண்டும்.
4.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தியாக இருக்க
வேண்டும்
5.உன்னைப்
போல் நான் ஆகும் அந்த ஆசைதான் எனக்குள் வரவேண்டும்.
நீ உயிராக இருக்கின்றாய் என் உணர்வுகள்
அனைத்தும் ஒளியாக வேண்டும். அந்த
ஒளியின் சரீரம் தான் நான் பெற வேண்டும்…
கடைசி நிலையாக.
தட்டான் பூச்சி இருக்கின்றது பூவிலே முட்டையிடுகின்றது. முட்டையிட்ட பின் பட்டாம் பூச்சியாக வளர்கின்றது. பூச்சி வளர்ந்த பின் பூவைப் போன்றே மாறுகின்றது.
பட்டாம் பூச்சியாக ஆன பின்
அதில் இருக்கும் தேனை உட்கொண்டு வேறு
ஒரு இலை மீது உட்கார்கிறது.
வெயில் காலத்தில் அந்த இலையிலே வெயில் அடித்த பின் இந்த
வெயிலின்
கடுமை அதற்குள் படுகின்றது. அதை அதிகமாகச்
சுவாசிக்கின்றது.
1.சுவாசித்த பின் அதே உணர்வாகி அந்த இலையிலேயே ஒட்டிக் கொள்கின்றது… பார்க்கலாம்.
2.அந்த இலைகளுடன் ஒட்டியபின் இந்த உணர்வுகள் சேர்த்து அதனுடைய துடிப்பும் எல்லாம்
சேர்ந்த பிற்பாடு அது ஒரு வண்டாக உருவாகின்றது.
அந்த உடலே பாம்பு சட்டையை உறித்த மாதிரி அதற்குள் இருந்தே கருவாகிறது. வேறு ஒரு பூச்சியாக மாறுகிறது.
இதைப்
போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள்
சேர்த்துச் சேர்த்து
2.இந்த உடலில் உயிர் எப்படி ஒளியாக இருந்ததோ அதைப் போன்று நாமும் ஒளியாக ஆக வேண்டும்.
அதனால் தான் என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்து விடு ஈஸ்வரா என்று பாடுகிறோம். நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வெல்லாம் ஒளியாக வேண்டும்.
பூச்சிகளைக்
குருவி
கொத்தித் தின்றது என்றால் குருவின் உடலுக்குள் சென்று
குருவியாக மாறுகின்றது.
உணவுக்காக நாம் ஆட்டின்
மாமிசத்தை உட்கொண்டோம் என்றால் ஆட்டின்
உணர்வு நமக்குள் வருகின்றது.. ஆட்டின் மணமே வரும். உடலை
விட்டுச் சென்றால் ஆட்டின் ஈர்ப்புக்குள் தான் செல்ல வேண்டி வரும். நாம் எதை எதைச் சாப்பிடுகின்றோமோ அதற்குத்தக்க அது வேலை
செய்து கொண்டே இருக்கும்.
இந்த உயிரின் வேலை அது தான்.நாம் சேர்க்கக்கூடிய உணர்வுக்குத் தக்கவாறு அடுத்த உடலை மாற்றிக் கொண்டே
இருக்கும். ஆகவே நாம்
எதை மாற்ற வேண்டும்…?
1.பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஒளியை நாம் பெற வேண்டும்
2.அந்த அருள் ஒளி பெற நமக்குப் பொறுமை தேவை.