
அகஸ்தியனைப் போன்ற ஞானிகளை உருவாக்கும் வழி முறை
தியானம் செய்யக் கற்றுக் கொண்டவர்கள் கர்ப்பமாக
இருக்கும் தாய்மார்கள் “ஓ…ம் ஈஸ்வரா” என்று புருவ மத்தியில்
உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
நன்றாக ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
அதற்குப் பின்
1.கருவிலிருக்கும்
அந்தக் குழந்தைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அந்தக் குழந்தையைச் சிறிது நேரம்
நினைத்து அதைத் தியானியுங்கள்.
3.கருவிலிருக்கும்
குழந்தைக்கு அந்தத் தாய் தான் ஞானப் பாலை ஊட்ட வேண்டும்.
4.அப்படி ஞானப் பாலை ஊட்டி அந்தக்
குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.
உலகிற்கு அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சொல்லும்
மிளிரும் தன்மையாக அது பெற்ற உணர்வின் சக்தி பேரண்டத்தின் பேருண்மைகளைச் சுலபமாகப்
பெற்றுத்
தனக்குள் விளைய வைத்து அந்த மூச்சு “அம்மா…”
என்ற மழலைச் சொல்லின் நிலைகள் உங்களுக்குள் இனிமையூட்டும்.
அந்த மெய் ஒளியின் தன்மைகள் உங்களுக்குள்ளும்
வளரச் செய்யும்.
அதுவும் வளரும்… அந்தக் குழந்தை இடும் மூச்சலைகள்
இந்த நாட்டுக்கும் உதவும் மற்றவர்களுக்கும் உதவும்.
1.ஆகவே எதிர்கால சிசுக்களை இப்படி
உருவாக்குங்கள். அதற்காக வேண்டி வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானம்
செய்யுங்கள்.
2.ஒவ்வொரு குடும்பத்திலும்
பெண்கள் கர்ப்பமுற்ற பின் அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் தெய்வீகக் குடும்பமாக
மாற்ற வேண்டும்.
அது சமயம் ரோஜாப்பூவும் குங்குமப்பூவும்
கல்கண்டும் தேனும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற வைக்க வேண்டும். அதைப் பத்து மாதமும் கர்ப்பமுற்ற தாய்க்குக் கொடுத்து
பழகுதல் வேண்டும்.
அதிகாலையில் குடும்பத்துடன் துருவ
தியானத்தை எடுத்து அகஸ்தியர் துருவனாகி
அணுவின் இயக்கத்தை அறிந்து துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ மகரிஷியாகிக்
கணவனும், மனைவியும் ஒன்றென இணைந்து ஒளியின் சரீரமான
அவர்களின் பேரருளைக் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும்,
என்று தியானிக்க வேண்டும்.
கருவிலிருக்கும் குழந்தை உலக ஞானம்
பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானியாக உருவாகிட வேண்டும். உலகைக் காத்திடும் பேரருள் ஞானியாக ஆக வேண்டும்
என்று குடும்பத்துடன் அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.இதனின் உணர்வுகளைக்
கருவுற்றிருக்கும் தாய் தன் செவி வழி கவர்ந்து தன் இரத்தத்தில் கலக்கப்படும்
பொழுது
2.இதனின் உணர்வுகள்
கருவிலிருக்கும் குழந்தைக்குக் கிடைக்கின்றது.
இப்படிச் செய்தோமென்றால் நமது குடும்பத்தில்
சாப அலைகள் இருப்பினும் தீய அலைகள் இருப்பினும் பாவ அலைகள் இருப்பினும் பூர்வ ஜென்ம
அலைகள் இருப்பினும் “இதையெல்லாம் தகர்த்தெறியும்
பெரிய ஞானியாக அவன் உருவாகுகின்றான்…”
அவன் வளர வளர குடும்பத்திலுள்ள சர்வ
தோஷங்களையும் சர்வ ரோகங்களையும் நீக்கிடும் தன்மையும் பேரருள் என்ற உணர்வை வளர்க்கும்
தன்மையும் பெறுகின்றான்.
1.இதனால் அந்தக் குடும்பத்தில்
மட்டுமல்ல… அவர்களுடைய ஊரிலும் தெருவிலும் அருள் ஞானியின் உணர்வுகள்
படர்கின்றன.
2.இப்படி இதன் வழியில்
குழந்தைகளை உருவாக்கினால் அவர்கள் பிறந்தபின் இருளை அகற்றி மெய்யுணர்வை வளர்க்கும்
தன்மை பெறுகின்றது.
நாமும் இந்த நிலை பெற்றால் அந்தக்
குழந்தைகள் நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வதும் நமக்குள் இருக்கும் சாப அலைகளை
மாற்றிடும் அருள் ஞானியாகவும் ஆகின்றான்.
பண்டைய காலங்களில் அரசர்களின் மனைவிமார்கள்
கர்ப்பமுற்றால் அரசர்கள் கர்ப்பமுற்ற தங்கள் மனைவிமார்களை அமர வைத்துத் தங்களுடைய நாட்டின் பெருமைகளையும் பிற நாடுகளை
எப்படி வெல்ல வேண்டும்…? என்றும் எதிரிகளை வெல்ல எந்த நிலை பெற
வேண்டும்…? என்றும் மற்ற பிற நிலைகளையும் குருகுலமாக வைத்து ஓதிக்
கருவில் வளரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள்.
மிக பலசாலியாகவும் அதே சமயத்தில்
தன் தாய்நாட்டைக் காக்கும் நிலைகளிலும் அந்தக் குழந்தை வளரும். இப்படி அரசர்கள் தங்கள் நாட்டைக் காப்பதற்காக வேண்டித்
தங்கள் குழந்தைகளை இது போன்று உருவாக்குவார்கள்.
அன்று அரசர்கள் எடுத்துப் பயன்படுத்திய
கத்தி வாள் போன்ற ஆயுதங்களை நாம் இரண்டு கையாலும் தூக்க முடியாது ஆனால் அவைகளை அரசர்கள்
ஒரு கையாலே தூக்கி விளையாடுவார்கள். ஏனென்றால் மிருக
தசைகளை அதிகமாகக் கொடுத்து மிருகங்களுக்குண்டான வலுவை உடலிலே ஏற்றியிருப்பார்கள்.
1.ஆனால் நீங்கள் குடும்பத்துடன்
துருவ தியானத்தில் அமர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின்
பேரருள் உணர்வுகளை இல்லம் முழுவதும் படரச் செய்து
3.குடும்பத்தினர்
அனைவருக்கும் அந்த சக்தியைக் கிடைக்கச் செய்து தெய்வீகக் குடும்பமாக
4.சஞ்சலங்களும் குறைகளும்
இல்லாது நிறை கொண்டவர்களாக வாழ்ந்து
5.கர்ப்பமுற்ற பெண்ணிற்குக்
குங்குமப்பூவும் தேனும் கலகண்டும் ரோஜாவும் கலந்த பாகை குடும்பத்துள்
உள்ளோர் அனைவரும் கொடுங்கள்.
இது சமயம் கருவில் வளரும் குழந்தை
மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று அருள் மகரிஷியாக வளர வேண்டும். அவனுடைய பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும்
சர்வ நோய்களைப் போக்கிடும் அருள் சக்தியும் அவன் பெற வேண்டும்.
விஞ்ஞான உலகால் வரும் அஞ்ஞானத்தை
அகற்றி மெய்ஞானத்தைப் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தியும் அவன் பெற வேண்டும் என்று
எண்ணித் “தேன் கலந்த பாகைக் கருவுற்ற பெண்ணிற்குக் கொடுங்கள்…”
இதைப் போன்று 10 மாதமும் கொடுத்து உருவாக்கி விட்டால் இன்று விஞ்ஞான
உலகில் வரும் அஞ்ஞானத்தை அகற்றிடும் உங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப அலைகளை
நீக்கிடும் பாவ அலைகளைப் போக்கிடும் எத்தகைய நிலைகளையும் மாற்றும் அரும் பெரும் சக்தி
கொண்ட ஞானியாக, அந்தக் குழந்தை வளரும்.
நாம் ஒருவருடன் அன்புடன் பண்புடன்
பழகியிருந்தால் அவர் இறந்தபின் அவருடைய ஆன்மா பற்று கொண்ட நமது உடலுக்குள் வந்து விடுகின்றது. பின் அந்த ஆவியின் உணர்வே உங்களுக்குள் இயக்கச்
செய்கின்றது.
இப்படி குடும்பத்தில் அறியாது தீய
வினைகளைச் சேர்த்த ஒருவர் சாபம் விடும் பொழுது உற்று நோக்கினால் அந்தச் சாப அலைகள்
உங்களுக்குள் வந்து உங்களுடைய குடும்பத்தைச் சீரழிக்கின்றது.
1.உங்களுக்குச்
சாபம் விடவேண்டாம். வேறு யாருக்கோ விடும் சாபம்
கூட, உங்களில் இணைந்து உங்களைச் சீரழிக்கும்.
2.சந்தர்ப்பத்தால்
நுகர்ந்த இந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே நமது குடும்பத்திலும்
உடலிலும் ஆட்டிப்படைக்கும் நிலை வருகின்றது.
இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால்
உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை அருள் ஞான நூல்களைப் படிக்கச்
செய்யுங்கள். அருள் ஞானவழி வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க
வேண்டும் என்று எண்ணுங்கள்.
தபோவனத்தில் வெளியிடப்பட்ட நூல்களையும்
வாங்கிப் படிக்கச் செய்யுங்கள். பிறரைப் படிக்கச்
சொல்லிச் செவி கொடுத்துக் கேட்கச் செய்யுங்கள்.
இதனால் பிறக்கும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாகப் பிறக்கும்.
குடும்பத்தில் சாப அலைகளை நீக்கும்
அருள் சக்தியும் உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும் குடும்பத்தில்
தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும் கருவில் உள்ள குழந்தைப் பெற்று அருள் ஞானியாக
உருவாவான்.
இதைப் படிக்கும் அனைத்து
மக்களும்
1.தம்முள் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளியைப் பெற்று அறியாது சேர்த்த இருளை அகற்றி நஞ்சினை
வென்று
2.பேரருள் உணர்வுகளை
தம்முள் பெருக்கி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில்
பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள் ஞானம் பெற்று
4.பிறவியில்லா நிலை
பெறச் செய்யும் அருள் சக்தி பெற்று
5.பிறவியில்லா நிலை
பெறச் செய்யும் அருள் ஞான வாழ்க்கை அமைந்து
6.இவ்வாழ்க்கையில்
பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.