ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2026

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்


தசரதனின் கருவிற்குள்…
1.எத்தனையோ உடல்கள் இருப்பினும் பல கோடித் தீமைகளை வென்றிடும் உணர்வுகள் பெற்று
2.அந்த மனைவி என்ற நிலை வரும் போது அதற்குப் பிறந்தவன் தான் ராமன்.
 
அதே சமயத்தில் உறுதுணையாக இருந்து தன்னைக் காத்திடும் தன்மை தான் லட்சுமணன். ஒரு தாய்க்கு (சுமித்ரை) இரண்டு குழந்தைகள் பிறக்கின்றது.
 
முதலில் தசரதன் விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தான். தூதுவனை அனுப்பிப் பாயாசத்தைக் கொடுத்தான். முதல் நிலையை ராமனின் தாயாருக்குக் கொடுத்தார். இரண்டாவது பரதனின் தாயாருக்கு கொடுத்த்து. மூன்றாவது லட்சுமணனின் தாயாருக்கு கொடுத்தது தொக்கியுள்ள மிச்சத்தை மூன்றாவது மனைவிக்கே கொடுக்கின்றான் சத்துருக்கன்.
 
இங்கே லட்சுமணன்…! லட்சுமணன் என்றால் என்ன…? சூரியன் தன்னுடைய பாதரத்தால் தாக்கப்படும் பொழுது அதிலே விஷங்கள் பிரிகின்றது வெப்பமாகின்றது… காந்தமாகின்றது.
 
காந்தமானாலும்
1.விஷம் பிரிந்து செல்வதை இந்தக் காந்தம் இழுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
2.து தான் லட்சுமணா என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
 
ஆக எதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொள்கின்றதோ சத்துருக்களை சகோதரன் என்ற நிலை வரப்படும் பொழுது
1.சத்துருக்கன் தீமைகள் வராதபடி பரதனுக்கும்...
2.லட்சுமணன் ராமனுக்கு உதவியாக இருப்பதாகவும் காட்டுகிறார்கள்.
 
ஏனென்றால் விஷம் இயக்கச் சக்தி அது தான் லட்சுமணா. காந்தம் கவர்ந்து கொண்டால்
1.எந்தக் குணத்தின் தன்மை கொண்டுவர்ந்து கொண்டதோ அதனின் இயக்கச் சக்தி
2ஆக… காந்தம் கவர்ந்து வெப்பத்துடன் எது சேர்ந்ததோ அதனுடன் சேர்த்து உருவாக்கும் சக்தி என்ற நிலைகளை
3.இப்படித் தனித்தன்மையாகப் பிரித்துக் கொண்டு வருகின்றார்கள்.
 
விஷ்ணுவை நோக்கித் தவம் என்று வரும் பொழுது உயிர் விஷ்ணுவாகின்றது. அவன் தவத்தின் தன்மை கொண்டு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எண்ணினான். அதன் உணர்வின் தன்மை கொண்டு தன் உடலில் பல நிலைகள் ஆகின்றது.
 
சூரியனோ தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் பாதரசமாக மாற்றுகின்றது. மனிதன் புழுவில் இருந்து மிருகம்  வரையிலும் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதன் கருத்தன்மை விந்து தன்மை…” அடைகின்றது.
 
அந்த விந்தின் தன்மை அடைந்த பின் தான் ஒரு பூச்சியைக் கொன்று தின்றாலும்… அதன் உணர்வின் தன்மை கருவாக்கப்பட்டு அணுத் தன்மை கருவாக மாறுகின்றது. இதைப் போலத் தான் மனிதனின் நிலை.
 
நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள். மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகள் ராமாயணத்தில் உள்ளது இன்று அது திசை திரும்பி விட்டது அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
 
ராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எல்லோரும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். பரதனின் தாயாரும்திலே சேர்ந்திருக்கின்றது. இருந்தாலும் பரதன் ராமனுடன் சேர்ந்து வாழ்ந்தவன். நாம் ஏதாவது சொன்னால் அவனுடன் சேர்ந்து விடுவான்… நம்மிடம் மறுத்துப் பேசிவிடுவான் கைகேயி எண்ணுகிறது.
 
1.இராமனின் தாயார் எல்லோரையும் அரவணைத்தது.
2.பரதனின் தாயார் போரில் ஜெயிக்கும் உணர்வு பெற்றது… தன் சுயநலத்தைக் கொண்டது.
3.ஆனால் இராமனின் தாயாரோ பொது நலத்தைக் கொண்டது என்ற நிலையை பிரித்துக் காட்டுகின்றார்கள்.
 
அப்பொழுது அனுடன் வாழும் குழந்தைகள் எல்லாம் இணைந்து வாழும் சக்தியாக வருகின்றது.
 
காவியத்தில் உள்ள மூலங்களை அவ்வப்போது உங்களுக்குப் பிரித்துக் காட்டுகின்றோம்.