
1. ஞானகுரு - குருநாதரை முதலில் சந்தித்த சந்தரப்பம்
1.நமது குருநாதரை யாம் சந்தித்தது எதிர்பாராத சந்தர்ப்பம் தான்.
2.ஏனென்றால் எவ்வளவோ நாட்கள் “குருநாதரை” அவர் யார்…? என்றே தெரியாது.
3.இருந்தாலும் அடிக்கடி பல சந்தர்ப்பங்களில் என்னைச் சந்தித்துள்ளார்.
அவரை “ஒரு பித்தன்” என்றே தான் நான் எண்ணியிருந்தேன். எதைச் சொன்னாலும் அவரிடம்
வெறுப்பு கொண்டு ஒதுங்கிச் செல்வது தான் எனது வழக்கமாக இருந்தது.
சந்தர்ப்பவசத்தால் என் மனைவி நோய்வாய்ப்பட்டு அதனால் அவர் வைத்தியத்திலேயும்
மீள முடியாத நிலை ஏற்பட்ட அந்தச்
சந்தர்ப்பத்திலே தான் எமது குருநாதர் என்னை அணுகினார்.
அப்படி ரொம்பவும் நெருக்கமாக வரும் போது “அவரைப் பித்தன்” என்ற நிலைகளில் நான் ஒதுங்கிச் சென்றேன்
அப்படி ஒதுங்கிச் சென்றாலும் கூட அது சமயம் எனது மனைவி இன்றோ நாளையோ
என்ற நிலை கொண்டு இருக்கின்றது,
என் மனைவியின் தகப்பானாருக்கு ஒரே பெண் குழந்தையாக இருந்ததால் உடல்
நிலை மோசமாக இருக்கின்றது என்ற ஏக்கத்தில் அவருடைய உடலை விட்டு ஜீவன் பிரிந்தது.
மாமனாரின் உடலை அடக்கம் செய்துவிட்டு வந்தபின் குருநாதர் என்னை அணுகி ரொம்பவும்
அசிங்கமான பேச்சுக்களைப் பேசி… நீ “டீ” குடி என்று மிகவும் நிர்பந்தப்படுத்திக்
கொண்டிருந்தார்.
நான் அதைக் குடிக்க மறுத்தவுடன் அவருடைய பேச்சும் ஏச்சும் மிகவும்
கடினமாகவும் செவி கொண்டு கேட்க முடியாத வார்த்தைகள் கொண்டே என்னை ஏசிப் பேசினார். இருந்தாலும் அவரிடமிருந்து
விலகிச் செல்வதற்கு முயற்சி எடுத்தேன்… முடியவில்லை…!
நீ “டீ” குடித்தால்தான் நீ இதை விட்டு நகர முடியும்
என்று சொன்னார்.
அதன் அடிப்படையில் தான்… நான் “டீ” கடைக்குச் சென்று “டீ” குடித்து விட்டால் அவர் விலகிச் சென்று விடுவார்
என்ற இந்த எண்ணத்தில் அவர் கொடுத்த “டீ”யை
வாங்கிக் குடித்தேன்.
இன்று நீ “டீ” குடித்தாலும்
உன்னை நான் விடமாட்டேன் என்று மிகவும் கடினமான நிலைகளில் மீண்டும் பேசத்
தொடங்கினார்.
பின் “டீ” குடித்தபின்,
அவரை எப்படியும் ஊரை விட்டு எல்லை கடந்து அனுப்பிவிட்டு வந்து விடலாம்
என்று எண்ணி இருந்தேன். ஏனென்றால் மாமனார் அவர் இறந்த காலத்தில் எல்லோரும் வந்து
குழுமி இருந்தார்கள்.
இதை அவர்களும் பார்த்து, என்னை ஏசிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆகவே இவரை எப்படியும் கடத்தி
ஊருக்கு அப்பால் கொண்டு போய், விட்டுவிட்டு வரலாம் என்று,
நான் அழைத்துச் சென்றேன்.
2. என் மனைவியைக் காப்பாற்றினார் குருநாதர்
அங்கே பழனியில் பெரியநாயகி அம்மன் கோவில் ஒன்று உண்டு. அதன் கீழ்
தெப்பக்குளம் ஒன்று உண்டு. அந்தத் தெப்பக்குளத்திற்குள் என்னை அழைத்துச்
சென்றார்.
நான் விலகிச் செல்லலாம் என்று எண்ணும் போது அந்த தெப்பக்குளத்திற்குள்
என்னை அழைத்துச் சென்று என் வாழ்க்கைச் சரித்திரங்கள் அனைத்தையும் அப்போது சொல்ல ஆரம்பித்தார்.
நான் பிறந்ததில் இருந்து அவரைச் சந்திக்கும் வரையிலும் இருந்த
நிலைகளைச் சொல்லிவிட்டு மனைவியினுடைய நிலைகளை அனைத்தையும் சொல்லிக் கொண்டே வந்தார்.
அப்படி அவர் சொல்லும் போதுதான் “அவர்
பைத்தியம் இல்லை” என்ற நிலையை நான் உணர முடிந்ததது.
அதன் பின் உண்மைகள் பலவற்றைச் சொன்ன பின் விபூதியையும் எலுமிச்சம்
பழத்தையும் கொடுத்து இதை “உன் மனைவிக்குக் கொடு…
எழுந்து நடப்பார்” என்று சொன்னார்.
ஏனென்றால் ஆஸ்பத்திரியிலேயே முடியாது என்று சொல்லி விட்டார்கள். இடுப்பிற்குக் கீழ் ஒரு விரலும் அசையவில்லை. இன்றோ நாளையோ
என்று மிகவும் கடினமாக நிலைகளில் இருக்கப்படும் போது அவர் சொன்ன மாதிரியே
செய்தேன்.
என் மனைவி எழுந்து ஒரு மாதத்திற்குள் நடக்க ஆரம்பித்து விட்டார். குருநாதரிடம்
இந்த நற்செய்தியைச் சொல்லலாம் என்று தேடிச் சென்ற போது அவரைக் காண முடியவில்லை.
பின் எப்படியும் அவரிடம் சொல்லியாக வேண்டும்
என்ற மகிழ்ச்சியோடு இருக்கப்படும் போது…
1.திடீரென்று “என்னை நீ தேடினாயா…?” என்று
2.முதுகுப் பக்கமாக இருந்து குருநாதர் எம்மைத் தட்டினார்.
3.எப்படி அங்கே வந்தார்…? என்ன செய்தார்…? என்றே எனக்குத் தெரியாது.
அவர் தட்டி எழுப்பியபின்… நான் உணர்ச்சிவசப்பட்டு “உங்களிடம் சொல்லலாம் என்று
இருந்தேன்…! உங்களைத் தேடினேன் காணவில்லை…!” என்று சொன்னேன்.
இப்பொழுது உன் மனைவி ”நன்றாக இருக்கிறாளா…?” என்று கேட்டார்.
“நலமாக இருக்கிறார்…!” என்று சொன்னேன். ஆனால் குருநாதர் வீட்டிற்கு வரவில்லை. வெளியில் இருந்துதான் இது
நடக்கின்றது.
3. என்னை நம்புகின்றாயா? என்று கேட்டார் குருநாதர்
“அப்பொழுது நான் சொல்கின்றதை நீ நம்புகிறாயா…?” என்று
கேட்டார். “என்னை நீ நம்புகிறாயா…!” என்று
கேட்டார்.
“நம்புகிறேன்…!” என்று நான் சொன்னேன்.
“நான் சொல்வதைக் கேட்கின்றாயா…?“ என்று கேட்டார்.
“கேட்கின்றேன்…!” என்று சொன்னேன்.
இதில் நீ மாற மாட்டாய் இல்லையா…? என்று கேட்டார்.
“மாற மாட்டேன்” என்று நான் சொன்னேன்.
4. கடவுள் என்றால் யார்? என்று கேட்டார் குருநாதர்
அதன் பின் அவர் என்னைப் பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு அழைத்துச்
சென்றார். அழைத்துச் சென்றபின் அந்தப் பெரிய நாயகி அம்மனை வணங்கச் செய்தார்.
அதன் பின் கிரிவலம் வந்தோம்.
அங்கே “தட்சிணாமூர்த்தி” சிலை இருக்கின்றது. இந்தச் சிலை எதற்காக வைத்திருக்கிறார்கள்…? என்று கேட்டார்.
எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன்.
இப்படி ஒவ்வொரு சிலையையும் காட்டி “இந்தச் சிலையின் உட்பொருள் என்ன…? என்று
எல்லாவற்றையும் காட்டிவிட்டுத் “துர்க்கை” என்ற சிலை உண்டு…! அந்தச் சிலைக்குப் பக்கம் அழைத்து வந்தார். “இதனுடைய பொருள் என்ன…?” என்று கேட்டார்.
“தெரியவில்லை…” என்று சொன்னேன்.
எதைக் கேட்டாலும் தெரியவில்லை என்று சொல்கின்றாய் என்று கேட்டு விட்டு
அதன்பின் வெளிய வந்தபின்
1.இங்கே உன் பெயரை வைத்து “வேணு கோபால விநாயகர்”
என்று ஒன்று உண்டு
2.உனக்குத் தெரியுமா…? என்றார்.
எனக்குத் தெரியாது என்றேன்.
அங்கே அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றபின் அந்தச் சிலை மீது ஏறி
உட்கார்ந்து கொண்டு “இதனுடைய “உட்பொருள்” என்ன…?” என்று
கேட்டார்.
தெரியாது என்று சொன்னேன். மீறிப் பேசினால் ஏதாவது பேசுவார் என்றே
விலகி இருந்தேன்.
அப்புறம் அப்படியே தொடர்ந்து வரப்படும்போது இதனுடைய நிலைகளை ஒவ்வொரு
சிலையையும் காட்டியபின்…
1.எறும்புக்கு யார் சோறு போடுவது…?
2.புழுவிற்கு யார் சோறு போடுவது…?
3.குருவிக்கு யார் சோறு போடுவது…?
4.இங்கே இவர்களுக்கெல்லாம், யார் சோறு போடுகின்றார்கள்…?
எப்படி…? என்ற நிலைகளிலே குருநாதர் என்னைக்
கேட்டுக் கொண்டே வந்தார்.
எல்லாம் “கடவுள் போடுகின்றார்…” என்றே சொல்லிக் கொண்டு இருந்தேன்.
“கடவுள் என்றால் யார்…?” என்று கேள்வி கேட்டார்.
எனக்குத் தெரியாது… நான்
பார்க்கவில்லை…! என்றேன்.
பார்க்காதபடி கடவுள் என்று எப்படி நீ சொல்லலாம்…? என்று கேள்வி கேட்டார்.
5. “நான் படிக்கவில்லையே…” என்று குருநாதரிடம் சொன்னேன்
இப்படி விதண்டவாதங்கள் நடந்து ஓரளவிற்கு எல்லாம் சுற்றி வந்தபின் மனிதருடய
எண்ணங்கள் எவ்வாறு செல்கின்றது…?
என்ற நிலையைக் காட்டினார்.
அது ஒவ்வொன்றையும் சொல்லி ஒரு நிலைப்படுத்திப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது…? பிரபஞ்சத்திற்குள் பூமி
எப்படித் தோன்றியது…? பூமிக்குள் உயிரணு எப்படித் தோன்றியது…?
பூமிக்குள் தாவர இனங்கள் எப்படித் தோன்றியது…? என்று வினாக்களை எழுப்பிக் கொண்டே வந்தார்.
தெரியாது… தெரியாது…! என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். தெரியாது என்று சொல்கிற போதெல்லாம் ஒவ்வொரு
அடியாக என்னை அடித்துக் கொண்டே இருந்தார், குருநாதர்.
தெரியாது என்றால் நீ எதற்குக் கேட்கிறாய்…? என்றார்.
நான் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன்…! என்று சொன்னேன்.
தெரிந்து கொண்டபின் அடுத்து நீ என்ன சொல்லப் போகின்றாய்…? என்ன செய்யப் போகின்றாய்…?
இப்படியே கேட்டுக் கொண்டே, என்னைப்
பைத்தியக்காரத்தனமாக அடித்துக் கொண்டே இருந்தார்.
இதற்குப்பின் சூரியன் எப்படி உண்டானது…? அந்தப்
பிரபஞ்சத்திற்குள் எப்படி ஒரு உயிரணு உருவாகியது…? அந்த உயிரணு உருவாகிய பின் என்ன செய்தது…?
அரசர்கள் நான் தான் என்ற நிலைகளில் எப்படி இருந்தார்கள்…? அரசர்கள் பல மந்திரங்களை ஏன்
செய்தார்கள்…? அரசர்கள் ஏன் கோவில்களைக் கட்டினார்கள்…?
1.ஞானிகள் எப்படி உண்மையினுடைய நிலைகளை உணர்ந்தார்கள்…?
2.ஞானிகள் சொன்னதை அரசர்கள் எப்படித் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்…? என்றெல்லாம் குருநாதர்
வினாக்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்.
எனக்கு ஒன்றும் தெரியாது சாமி…! நான் படிக்கவில்லையே…! என்று சொன்னேன்.
நீ புத்தகத்தைப் படிக்காததால் தான் உன்னிடம் கேட்கிறேன்..
படித்திருந்தால் நீ என்னிடம் விதண்டவாதம் பேசுவாய்…! என்று சொன்னார் குருநாதர்..
குருநாதர் இப்படி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு ஒன்றும் புலப்படவில்லை.
இல்லையென்றால் கொச்சையான வார்த்தைகளால் பேசிக் கொண்டே இருந்தார்.
6. இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்...? என்று
உணர்த்தினார் குருநாதர்
பிறகு… பேரண்டம் இருண்ட நிலைகளில்
இருந்தது. அந்த இருண்ட நிலைகள் என்பது விஷமான சக்தி கொண்டது. அந்த விஷமான சக்தி
கொண்டு அணுக்கள் எப்படி உண்டானது…? அந்த அணுக்களின் தன்மை
ஒன்றாகச் சேர்த்து எப்படி ஒரு கோளாக… ஒரு பரம்பொருளாக
உண்டானது…?
அதாவது பல அணுக்கள் சேர்ந்து எல்லையே இல்லாத இந்த உலகின் பேரண்டத்தில்
அது எல்லையாக ஒரு சிறு பொருள் எப்படி உண்டானது…? அதற்குப் பெயர் “பரம்பொருள்” என்றும் அந்தப் பரம்பொருள் தன் சுழற்சியின் நிலைகளில் “தான் வளர்ந்தது எப்படி…?” என்று அதைக் காட்டினார்.
அது வளர்ந்தபின் அது கோளாக மாறி அது எப்படி நட்சத்திரமாக மாறியது…? நட்சத்திரமாக மாறியபின் சூரியனாக
எப்படி மாறியது…?
சூரியனாக மாறியபின் அதனின்று வெளிப்படும் அணுக்கள் அது எப்படி
சூரியனின் அணுக்களின் தன்மை சேர்க்கை ஆனதோ அந்தச் சேர்க்கையின் நிலைகள் கொண்டு கோள்கள் மீண்டும்
உருவாகி அந்தக் கோள்கள் நட்சத்திரமாகி ஒரு பிரபஞ்சம் என்ற நிலைகள் எப்படி அடைந்தது…? என்று சொன்னார்.
அப்படிப் பிரபஞ்சம் என்ற நிலைகள் அடைந்து அதற்குள் ஒரு
உயிரணு தோன்றி தாவர இனங்கள் பூமியின் நிலைகள் பெற்றுப் பூமிக்குள் தாவர இனங்கள் உற்பத்தியாகி அந்தத் தாவர இன மணத்தை ஒரு உயிரணு சுவாசித்து அது உடல் பெற்று அதன் நிலைகள் கொண்டு
இந்த உயிரணு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனானது என்று விளக்கினார்.
சூரியன் தன் உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து மற்ற கோள்களை
உருவாக்கி அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு, ஒரு பிரபஞ்சத்தை
உருவாக்குகின்றது.
இதைப் போன்றே
1.ஒரு உயிரணு தோன்றிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி
2.மனிதனான பின் அந்த மனிதனுடைய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி
3.அகஸ்தியன் துருவத்தை அடைந்து துருவ மாகரிஷியாகித் துருவ நட்சத்திரமாகி
4.அதனின்று வெளிப்படும் உணர்வுகளை அவனைப் பின்பற்றியோர்
சுவாசித்து
5.சப்தரிஷி மண்டலங்களாக அமைந்து எப்படிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையை
உணர்த்தினார்.
7. சப்தரிஷி மண்டலங்களைக் காட்டினார் குருநாதர்
உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் அந்தந்த மதங்கள் காட்டிய வழிமுறைப்படி வணங்கி
வரும் தெய்வ வழிபாட்டில்… உபதேசித்த அறநெறிகளையும் பல
நற்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வரும் மனிதர்களுள்… ஒவ்வொரு மனிதனுமே தான் வணங்கி வரும் தெய்வம் தங்களைக் காத்து வரும் என்ற நம்பிக்கையில்… எல்லா வழிகளிலும் நல்லதைச்
செய்யவே உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள்
ஆனால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய உணர்வலைகள் அவர்களை அறியாமல்
அவர்கள் உடல்களில் எவ்வாறு சேர்கின்றன…? என்பதனையே உனக்குக் காட்சியாக உணர்த்தினேன் என்றார் குருநாதர்.
1.அதிலே நீயும் ஒருவன்..!
2.“தீய உணர்வுகளில் இருந்து உன்னை நீ எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப்
போகின்றாய்…?” என்ற கேள்விக் குறியுடன்
3.அவர் சொல்வதை நிறுத்திக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து என்னை விண்ணை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்.
பல நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளி அலைகளைக் காண்பித்து அதன் நிலைகளையும்
உணர்த்தினார்.
பின்பு சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்புக்குள் சிறு சிறு புள்ளிகளாக
வலம் வந்து கொண்டு கோலிக் குண்டுகளைப் போன்று பல வண்ணங்களில் இருந்ததைக் காட்டினார். “அவை எல்லாம் என்ன…?”
என்று என்னைக் கேட்டார்.
“நான் தெரியவில்லை…” என்றேன்.
உடனே… மற்றவர்களிடம் பைத்தியம் பேசுவது போன்று பேசுவதைப் போல, எனக்குப் புரியாத நிலையில் பேசிக் கொண்டே என்னை ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.
நான் திகைத்துப் போனேன்… பிறகு அதன் நிலையை உணர வைத்தார்.
அதெல்லாம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்திய ஒளி சக்தியைப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் அவர்கள்
தவங்களின் பலனால் புலன்களின் உணர்வால் அவர்களின் தவத்தின் வலிமையால் அந்த ஒளி
சக்தியைத் தங்களின் சுவாசங்களில் ஈர்த்து இரத்த நாளங்களில்
சேர்த்து உடல்களில் சேர்த்துக் கொண்டதினால் மனிதனை மிருகமாக மாற்றவல்ல தீய
உணர்வுகளை மாய்த்துத்
1.தங்களையே அறியும் ஞானிகளாக ஞானத்தின் வழித் தொடரில் மெய் ஞானிகளாகி
2.அவர்களின் உயிரில் ஆத்மாவாக இயங்கிய அணு சிசுக்கள் ஒளியாக மாறி உயிருடன்
உயிராகச் சேர்ந்து
3.ஒளியின் உணர்வு கொண்ட ஜடமாக மின்னும் நட்சத்திரங்களைத் தான் நீ பார்த்தது என்றார்
குருநாதர்.
உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக இருக்கும் அணு சிசுக்கள் ஒவ்வொரு உடலிலும்
சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்ப அணு சிசுக்கள் மாறிக் கொண்டே இருக்கும். மாறிய அணு சிசுக்களுக்கு ஒப்பத்
தான் அடுத்த உடலை அந்த உயிர் உருவாக்கும் என்று உணர்த்தினார் குருநாதர்.
8. மின்னல் பாயும் பொழுது காற்று மண்டலத்தில் இருக்கும் உயிராத்மாக்களின்
நிலை
சிறிது நேரம் மலைகளையும் காடுகளையும் சமவெளிகளையும் பார்க்கச்
சொன்னார். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது இளம்
கருப்பு அடர்த்திக்கொப்ப இலேசான ஒளி பிரகாசமான ஒளி இவ்வாறு பல வகையான வண்ணங்களில்
சிறு புள்ளிகளாகத் தெரிந்தன.
அதன் விவரங்களை விளக்கி உபதேசித்துக் கொண்டிருந்தார் குருநாதர். “மின்னல் பாயும் பொழுது கண்களை
மூடிவிடாதே…!” என்றார்.
எனக்குப் பயம் வந்துவிட்டது. கண்களை மூடவில்லையென்றால் பார்வை இழந்து விட்டால்
என்ன செய்வது…? என்று கேட்டேன்.
அவ்வளவுதான்…! பைத்தியம் பிடித்தவர்
போன்று எனக்குப் புரியாத பாஷையில் பேசிவிட்டு பிறகு என் உணர்வுகளில் புரியும்படி
உணர்த்தினார்
1.நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய்… இப்பொழுது ஏன்
தயக்கம்…? என்று கேட்டுவிட்டு
2.“நீயாகவா பார்க்கிறாய்…? நான் அல்லவா பார்க்கச்
சொல்கிறேன்…” என்றார்.
சிறிது நேரம் சமவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, மனிதர்களின் உடல்களிலிருந்து பிரிந்து
வந்த உயிராத்மாக்கள்தான் சிறு சிறு புள்ளிகளாகத் தெரிவது என்று சொன்னார்.
அதில் பிரகாசமாகத் தெரிந்த புள்ளிகளைச் சுட்டிக் காட்டி… சில கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பல
செயல்களைச் செய்து வந்து கடைசியில் கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தி இழந்த
உயிராத்மாக்கள் கரும் புள்ளிகளாக இருக்கின்றன என்றார்.
பல மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி வந்த உயிராத்மாக்களும், கரும் புள்ளியாக இருக்கின்றன.
இவை அனைத்திலும் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக உள்ள அணுசிசுக்கள் தெரிகின்றன.
இன்னும் சிலர் ஒன்றையும் எதிர்பார்ப்பில்லாது பல துன்பங்கள் வந்தாலும்
அதைத் தாங்கிக் கொண்டு நல்ல செயல்களைச் செய்து வந்து தெய்வமே துணை என்ற நிலையிலும்
வளர்ந்து வந்த உயிராத்மாக்கள் இளம் சிவப்புப் புள்ளியாகத் தெரிகின்றன என்று சொன்னார். சமவெளியைப் பார்த்துக் கொண்டே
இருக்கச் சொன்னார்.
அச்சமயம் எதிர்பாராது பளீர்… பளீர்… என்று மின்னல் பாய்ந்து கொண்டேயிருந்தது,
அந்த மின்னலில் சிக்கிய பல வண்ணம் கொண்ட உயிராத்மாக்களின்
அணுசிசுக்கள் செயல் இழந்து விட்டன. ஆனால் உயிர்கள் அழிவதில்லை.
ஒளியாக இருந்த உயிராத்மாக்கள் மின்னலின் கதிர்வீச்சில் சிக்கினாலும் எவ்விதப்
பாதிப்புமில்லாது மின்னிக் கொண்டேயிருந்தன.
1.இத்தகைய ஒளியான உயிராத்மாக்கள் மறு பிறப்பிற்கு வராமல் பூமியின் ஈர்ப்பில்
சுழன்று கொண்டே
2.தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவைகளாகின்றன. காலத்தால் விண்ணைச்
சென்றடைந்து விடுகின்றன.
இத்தகைய ஒளியான உயிராத்மாக்களிலிருந்து வெளிப்படும் ஒளி அணுக்கள்
சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு மனிதனின் உணர்வின் ஈர்ப்பில் சேர்ந்தால் அந்த மனிதனின்
ஆற்றல் பெருகி ஞானத்தின் வழித்தொடரில் தன்னை அறியக்கூடிய மெய் ஞானியாகின்றான்.
“இவ்வாறு நிகழ்வது எங்கோ ஒருவருக்குத்தான்…!” என்று
உணர்த்திவிட்டு மின்னலில் செயலிழந்த உயிராத்மாக்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
மின்னலின் தாக்குதலுக்குள்ளான உயிராத்மாவின் அணுசிசுக்களின் செயலிழந்த
சத்துக்கள் உயிரில் இணைந்த ஆத்மாவாக இருக்கின்றன. அது மீண்டும் மனிதனாக உடல் பெறத்
தகுதியற்றதாகிறது.
இத்தகைய உயிராத்மாக்கள் பூமியில் உள்ள தாவரங்கள் மீது படும் பொழுது உயிரின்
துடிப்பினால் செயலிழந்த ஆத்மாக்கள் மீண்டும் அணுக்கருக்களாக உருவாகிப் புது விதமான பூச்சிகளாக உருப்பெறுகின்றது என்பதை
உணர்த்தினார்.
9. மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தியை எப்படிப் பெறவேண்டும்? என்று உணர்த்தினார் குருநாதர்
அப்படி உணர்த்தியபின் இதையெல்லாம் நீ காணுவது எப்போது…? இதை நீ எப்போது காணப் போகின்றாய்…?
எதை நீ அடையப் போகின்றாய்…? என்ற இப்படி
வினாக்களை எழுப்பிக் கொண்டே சொல்லிக் கொண்டே வந்தார், குருநாதர்.
ஒவ்வொன்றும் குருநாதர் சொல்லிக் கொண்டு வரப்படும் பொழுது இதையெல்லாம்
நான் என்றைக்குப் பார்க்கப் போகின்றேன்…? நான் கடும் தவம் இருக்க முடியாதே…!
நான் குழந்தை குட்டியோடு இருக்கின்றேன். இப்போது தான் மனைவி எழுந்து வந்திருக்கின்றது. ஏதாவது
தொழில் செய்தால் தான் நன்றாக இருக்கும். தொழில் செய்தால்தான் சாப்பாட்டுக்குக்
கொடுக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.
அவர் இடைமறிக்கவில்லை.
ஆகையினால் இதையெல்லாம் நான் பார்ப்பதற்கு எனக்குத் திறன் இல்லை. எனக்கு இந்த ஆயுள் பத்தாது என்று
சொன்னேன்.
1.ஆயுள் பத்தாது என்று நீ சொல்ல வேண்டியதில்லை.
2.நான் அல்லவா சொல்ல வேண்டும் என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு
வந்தார்.
ஒருவர் திட்டினால் மட்டும் நீ கூர்ந்து கவனித்து… “இருடா, நான்
பார்க்கின்றேன் என்று சண்டைக்குப் போகத் தெரிகின்றது. அவனை நீ நினைக்கும் போதெல்லாம்
உன் உடல் எப்படிப் பதறுகின்றது…?
அதே மாதிரி
1.நான் சொல்வதை நீ கேட்டுக்கொண்டே வா
2.நீ அதைப் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வா.
3.அந்தச் சக்தி உனக்குள் ஆழமாகப் பதியும்.
அதை நீ திருப்பி எண்ணும்போது உனக்குள் எப்படிச் சக்தி கிடைக்கிறது என்பதை மட்டும் நீ தட்டாது
கேட்டுக் கொண்டே வா என்று சொன்னார்.
இதைத்தான்… “கடவுளின் அவதாரம் பத்து”
என்ற நிலைகளைச் சொல்லி அந்த கடவுளின் அவதாரம் என்றால் மற்றவர்கள் சொல்கிற மாதிரி கடவுள் எத்தனையோ அவதாரங்கள்
எடுத்தார் என்ற நிலையைச் சொல்வதற்குப் பதில்…
1.நமது உயிரைக் கடவுளாக வைத்து
2.நாம் புழுவிலிருந்து அவதார நிலைகள் பெற்று மனிதனாகி
3.உணர்வனைத்தையும் ஒளியாக மாற்றி உயிர் கல்கியாக எப்படிச் சென்றடைந்தது…? என்று தெளிவாகச் சொன்னார்.