ஆயுள் மெம்பர்கள் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த அருள் வழிகளை நமக்குக் காட்டினார்.
1.அவர் காட்டிய நெறிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்
2.அவருடன் ஒன்ற வேண்டும்.
3.அவருடைய ஒளி பட இருள் நீங்கும்
4.அருள் பெற நமக்குள் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறலாம்.
அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தியானம் இருக்கும் பொழுது என் (ஞானகுரு) நெற்றியைப் பார்க்கச் சொல்கின்றேன். அதிலிருந்து நமது குருநாதரின் அருளை நீங்கள் பெற முடியும்.
1.குருநாதர் எனக்கு இப்படித்தான் செயல்படுத்தினார்
2.அவர் நெற்றியைப் பார்க்கும் பொழுது அவர் கண்ட உண்மை எல்லாம் எனக்குத் தெரிய வந்தது… அதே போன்று நீங்களும் காண வேண்டும்.
குருநாதர் நமக்குக் காட்டியது துருவ நட்சத்திரம். அதிலிருந்து ஒளி அலைகள் இங்கே வருகின்றது. அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க வளர்க்க உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெருகப் பெருகப் பேரருள் என்ற நிலைகளில் இருளை நீக்க கூடிய சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்
ஆகவே புருவ மத்தியை எண்ணுங்கள். ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த உணர்வின் சக்தியை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
1.நமது குருநாதர் காட்டிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நான் நுகர்கின்றேன்
2.நுகர்ந்த உணர்வை நீங்கள் கவரக்கூடிய சக்தி பெறுகின்றீர்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி என் புருவ மத்தியைப் பாருங்கள்.
என் உயிரான ஈசனை வேண்டி... குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்தியனின் அருளும்… அவன் துருவனான அந்த அருள் உணர்வும்… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.
அதன் வழி நீங்கள் ஏங்கும் போது அந்த உணர்வுகள் ஒளி அலைகள் இங்கே வந்து.. உங்கள் உடல்களில் உணர்ச்சிகள் பரவி அந்தப் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.