வாழும் பொழுது நம்மை அறியாது சில உடல் நோய்கள் வந்தாலும் தியானத்தின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடிகிறது.
1.ஆனால் நோய்களை நீக்கினாலும் சிறிது காலமே இந்த உடலிலே வாழ்கின்றோம்.
2.எப்படியும் இந்த உடலை விட்டுச் சென்று தான் ஆக வேண்டும்
3.இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல…!
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த அருள் ஒளியை எடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம்...”
உணர்வுகள் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்கின்றது. அருள் ஒளி பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையும் பொழுது அப்பொழுதும் உடல் சுருங்கத் தான் செய்யும்.
1.ஆனால் பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே அந்த வழிப்பட்டு ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அதைக் கவர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக மாறும்
4.நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
இதைத்தான் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துத் தியானிக்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.
நம்முடைய தியானங்கள் அனைத்தும்… நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்துப் பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உயிருடன் ஒன்றி… உடலில் இருக்கும் பொழுதே ஒளியின் உணர்வைச் சேர்த்து ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.
இதுதான் கடைசி நிலை…!
குளவி புழுவின் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டியபின் புழு குளவியாக மாறுகின்றது. சில புழுக்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும்
1.அந்த உடலில் இருந்து தன் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி… தான் சுவாசித்துப் புழு - பூச்சிகளாக மாறுகின்றது.
2.இந்தப் பூச்சிகள் வேறு இலையில் மீது பட்டால் அந்த உணர்வை எடுத்து வண்டாக மாறுகின்றது
3.இந்த வண்டுகள் மற்ற நிலைகள் பட்டபின் பலவிதமான உணர்வுகள் மாறி ஒரு உடலாக சேர்த்துக் கொண்ட உணர்வு மேல் ஒடுகள் மாறிப் போகின்றது.
இதைப் போன்று தான் நாம் அந்த அருள் உணர்வுகளை எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் இங்கே விளைந்து… இந்த உடல் ஒளியாக மாறுகின்றது. அடுத்து நாம் பிறவிக்கு வருவதில்லை.
இதற்காக வேண்டித் தான் பல கோடி தவயோகிகள் எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளார்கள். இருந்தாலும் மார்க்கங்கள் மாறிவிட்டது.
இமயமலைப் பக்கம் நான் (ஞானகுரு) செல்லும் பொழுது ஜீவ சமாதியாக எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இமயமலைச் சாரல்களில் மண் இடுக்குகளில்… சந்துகளில் குகை மாறி அமைத்து… ஓ…ம் நமச்சிவாய… என்றும் ஓ…ம் நமோ நாராயணா… என்றும் இந்த ஒலிகள் வருகின்றது.
1.சிறையில் அடைத்தது போன்று குகைக்குள் இருக்கின்றார்கள்
2.வேறு எங்கும் செல்ல முடியவில்லை... உடல் என்ற இந்த கூட்டில் தான் அடங்கியுள்ளார்கள்
இதெல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்…! ஆகவே இப்போது நல்ல நினைவு இருக்கும் போதே ஒளியின் உணர்வாக மாறுங்கள்.