ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2022

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக...” நிலை நிறுத்துவது தான்

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பத்திரிகைகளைப் படிக்கின்றோம். ஒரு இடத்திலே விபத்தாகி விட்டது... அடிபட்டனர்... விபரீத நிலைகள் ஆகிவிட்டது என்று அங்கே நடந்த நிகழ்ச்சிகளை... அவர்களுக்குக் கிடைத்த ஆதாரப்படி... அறிந்ததைச் சொல்கின்றார்கள்.

எழுத்து வடிவில் இருப்பதைப் பார்த்து நாம் படித்தாலும் அதே உணர்வுகளை நாம் நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்து விடுகின்றது.

இதைப் போன்று பிறிதொரு தீமையின் உணர்வுகளை நாம் அறிந்து தெரிந்து கொண்டாலும் அது நம் உடலுக்குள் உருவாகாதபடி அவ்வப்போது அதைத் தூய்மையாக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா... என்ற உயிரை எண்ணி...
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை நம் புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.நாம் படித்துப் பதிவாக்கிய உணர்வும்... இதற்கு முன் நமக்குள் உருவான தீய வினைகளும் உள்புகாது தடுத்தல் வேண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வைத்து நாம் தடுத்து நிறுத்தினால்
5.அந்த விபரீத உணர்வுகள் உள்புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் அதிர்ச்சியான செய்திகளை நாம் பார்த்தவுடன் நமக்குள் பதிவாகிறது.
1.பதிவான உணர்வுகளை நாம் சுவாசித்து
2.அந்த எண்ணங்கள் அந்த உணர்ச்சிகள் கொண்டு அந்தந்த வாழ்க்கை வாழ்ந்தாலும்
3.இப்போது (அடுத்து அடுத்து) மீண்டும் எண்ணத்தால் அதை எண்ணும் பொழுது
4.அதே உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
5.அதே செயல்களை நமக்குள் உருவாக்கி விடுகின்றது அல்லது வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க செய்கின்றது.

இப்படி நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால் அது அனைத்தும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து இரத்தத்திலே “மாசுபடும் உணர்வுகளாக” மாறுகிறது.

மாசுபட்ட உணர்வுகளை நம் உடலில் மீண்டும் சேர்க்க உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்குள் அது சேரும் தன்மை வந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வராதபடி தடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திப் பழக வேண்டும். தடுத்து நிறுத்தவில்லை என்றால் உடலுக்குள் சென்று அந்த நல்ல அணுக்களைக் கெடுத்துவிடும்.

கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று “இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்...”

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது வலு கொண்டதாக மாறுகிறது. இப்படி “அந்த வலுவை” நாம் ஏற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படிச் சேர்த்துக் கொண்டால் “இதன் அழுத்தம்... துருவ நட்சத்திர வலு” நாம் அங்கே எண்ணும் இதே உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆதாரத்துடன் கலந்து அந்த வெறுப்பு அல்லது வேதனை போன்ற தீமை செய்யும் உணர்வுகளை நுகராது உயிரிலே அடக்கி... ஆகாரத்தைச் சீராக அமைத்து நல்ல இரத்தமாக மாற்ற இது உதவும்.

“ஆத்ம சுத்தி என்பது சாதாரணமானதல்ல...”
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பதிவாக்கி
2.இதைத் தெளிவாக்கி அந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான் இவ்வளவு காலம் உங்களுக்கு உபதேசித்தது (ஞானகுரு)
3.ஓரளவுக்கு அந்த வலிமை பெறக்கூடிய தகுதியைப் பெற்ற பின் இதை இப்போது முழுமையாகக் கொடுக்கின்றோம்.

காரணம்... உலகம் முழுவதும் விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்... உங்களுக்குள் யாம் சொன்ன முறைப்படி வலுக் கொண்டு இந்தக் காற்றுக்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவர்ந்து உங்கள் உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டு வர.. வர...
1.துருவ நட்சத்திரத்தின் வலிமையைப் பெறுகின்றீர்கள்...
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைகின்றீர்கள்.