ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2022

தியானம் என்பது… ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்

ஒரு வேதனை என்ற உணர்வு ஆன பிற்பாடு (அழுத்தம்) நமக்குள் சிக்கலான உணர்வுகள் வருகின்றது. ஆக நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது… அந்த வேதனை உணர்வுகள் தான் கூடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று தெளிவாக நமக்குக் காட்டுகின்றார்கள்… விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.

மெய் ஞானிகள் காட்டியது
1.பிறருடைய உணர்வுகள் வேகமாக இருக்கும் பொழுது
2.அது நம் நல்ல உணர்வுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று விடுகின்றது.
3.ஆக அந்த உணர்வின் அழுத்தம் இந்த வேலையைச் செய்கிறது.

கோபம் அடிக்கடி வருகிறது என்றால் அதைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…

மகரிஷிகள் உணர்வை அடிக்கடி சேர்த்து நாம் இணைத்துக் கொண்டே வர வேண்டும். அப்பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் சார்ஜ் அதிகமாகிறது.

குடும்பத்தில் கணவன் மனைவி என்ன செய்ய வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…
1.என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர் செய்யக்கூடியதில் பேரும் புகழும் அடைய வேண்டும்
3.அவர் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எதிர்மறையான வேறு சில உணர்வுகள் குறுக்கே வந்தால் அதை மாற்றியமைக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.அப்படி இதை எடுத்துக் கொண்டால் ஒரு பாதுகாப்பான நிலையாக வரும்.
2.தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான்.
3.வாழ்நாளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க உடலில் உள்ல எல்லா அணுக்களிலும் அது பெருகுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் போது எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபடும் சக்தி பெற்றுத் தான் இன்று வந்திருக்கின்றோம்.

தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இப்போது பதிவு செய்கின்றேன். அது காற்றில் இருக்கின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதை எடுத்துப் பயன்படுத்தும் போது நாம் ஆயுள் மெம்பராக அதிலே சேர்கின்றோம். குடும்பத்தில் ஒவ்வொருவரும் அதைக் கடைபிடித்தே ஆக வேண்டும்.

குறைகளைச் சந்தித்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை அடக்கிப் பழக வேண்டும். குழந்தைகளுக்கு கணவனுக்கோ மனைவிக்கோ அல்லது யாராக இருந்தாலும் அந்த அருள் ஞானம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தல் வேண்டும்.

தொழில்களில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் நஷ்டம் என்று எண்ணக்கூடாது. நஷ்டம் என்று வந்தாலும் கூட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால் அதை எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நல்ல சிந்தனைகள் வரும்… உயர்ந்த எண்ணங்கள் வரும்.

கடையில் இப்படி இருக்கின்றது குடும்பத்தில் இப்படி இருக்கின்றது என்று கஷ்டங்களைச் சொல்லி அடுத்தவரிடம் கேட்டோம் என்றால்
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள்
2.கடைசியில் எல்லாவற்றையும் கேட்டுக் குழப்பிக் கொண்டு
3.தொழிலே செய்ய முடியாது போலிருக்கிறது என்று சோர்வடையப்படும் பொழுது
4.நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கின்றோம்

ஆகவே மனைவி அதிகாலை தியானத்தில் கணவனுக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும். சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் தொழிலில் வீரிய சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துப் பாய்ச்ச வேண்டும்.

கணவனுக்கு மன வலிமை பெற வேண்டும்… அவருடைய எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்… அவர் செயல் அனைவரும் போற்றும் நிலையாக வரவேண்டும்… கடையில் பொருள் வாங்குவோர் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று… மனைவி இப்படி எண்ணிப் பாருங்கள்.

மனைவி இவ்வாறு செய்தால் வேறு யாரிடமும் யோசனை கேட்க வேண்டியதில்லை.

கணவர் வேலைக்குச் செல்லும் போது “எல்லாக் காரியத்திலும் வெற்றி கிடைக்கும்…” என்று மனைவி நீங்கள் சொல்லி அனுப்புங்கள் ஆபீஸில் அனைவரும் போற்றும் நிலை வர வேண்டும் வியாபாரம் பெருக வேண்டும் என்று எண்ணுங்கள். வியாபாரத்திற்காகச் சென்றால் அங்கே நல்ல பொருளை தேர்ந்தெடுக்கக் கூடிய அந்த சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்படிச் செய்தால் கணவன் மனைவி இருவரிடமும் ஒன்றி வாழும் உணர்வுகள் உருவாக்கப்படுகின்றது
1.இப்படி வாழ்ந்து காட்ட வேண்டும்
2.இருவரும் வாழ்க்கையில் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மற்றவர்களிடம் “இந்த வழிப்படி நடங்கள்…” என்று சொல்லும்பொழுது நீங்கள் வெளிப்படுத்தும் உயர்ந்த உணர்வு அங்கே விளைய வேண்டும். அதே போல் அவர்களும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.

ஊரில் இருக்கிறோம் என்றால் நம் வீட்டில் மட்டும் அல்ல நாம் வெளிப்படுத்தும் உணர்வு எல்லாக் குடும்பத்திலும் பரவி ஷேமமான நிலைகளில் உருவாக வேண்டும்.

நீங்கள் வசிக்கும் தெருவிற்குள் மகரிஷிகளின் அலைகள் பாய வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஒன்றுபட்டு வாழும் நிலையை அது உருவாக்கும்.